Wednesday, June 10, 2009

தியாகராஜ கிருதி - தொலி நேனு ஜேஸின - ராகம் கோகில த்4வனி - Toli Nenu Jesina - Raga Kokila Dhvani

பல்லவி
தொலி நேனு ஜேஸின பூஜா ப2லமீலாகே3

அனுபல்லவி
வெல வேஸி தீயக3 வச்சுனா
வெத தீருனா மனஸாரக3 (தொலி)

சரணம்
பரமாத்ம நீகாயாஸ பட3
பனி லேது3ரா கருணாகர
வர ப4க்த வேஸமு வேயு வேள
1வர்ஜ காலமேமோ த்யாக3ராஜ நுத (தொலி)


பொருள் - சுருக்கம்
பரம்பொருளே! கருணாகரா! தியாகராசனால் போற்றப் பெற்றோனே!
  • மனதார, தொன்று நான் செய்த வழிபாட்டின் பயன் இவ்வாறே!


  • விலை கொடுத்து வாங்க வருமோ?

  • (எனது) துயர் தீருமோ?


  • உனக்கு ஆயாசமுறத் தேவையில்லையய்யா;

  • சிறந்த தொண்டனாக வேடந்தரித்த வேளை, தவிர்க்கப்படவேண்டிய காலமோ, என்னவோ?



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
தொலி/ நேனு/ ஜேஸின/ பூஜா/ ப2லமு/-ஈலாகே3/
தொன்று/ நான்/ செய்த/ வழிபாட்டின்/ பயன்/ இவ்வாறே/


அனுபல்லவி
வெல/ வேஸி/ தீயக3/ வச்சுனா/
விலை/ கொடுத்து/ வாங்க/ வருமோ/

வெத/ தீருனா/ மனஸாரக3/ (தொலி)
(எனது) துயர்/ தீருமோ/ மனதார/ தொன்று...


சரணம்
பரமாத்ம/ நீகு/-ஆயாஸ/ பட3/
பரம்பொருளே/ உனக்கு/ ஆயாசம்/ உற/

பனி/ லேது3ரா/ கருணாகர/
தேவை/ இல்லையய்யா/ கருணாகரா/

வர/ ப4க்த/ வேஸமு/ வேயு/ வேள/
சிறந்த/ தொண்டனாக/ வேடம்/ தரித்த/ வேளை/

வர்ஜ/ காலமு/-ஏமோ/ த்யாக3ராஜ/ நுத/ (தொலி)
தவிர்க்கப்படவேண்டிய/ காலமோ/ என்னவோ/ தியாகராசனால்/ போற்றப் பெற்றோனே/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)

மேற்கோள்கள்
1 - வர்ஜ கால - தவிர்க்கப்படவேண்டிய காலம் - சுப காரியங்கள் தொடங்கக் கூடாத நேரம். இந்திய ஜோதிடம்

விளக்கம்
விலை கொடுத்து வாங்க - இறைவனருள்

Top


Updated on 11 Jun 2009

No comments: