எவரி மாட வின்னாவோ ராவோ இந்து3 லேவோ 1ப4ளி ப4ளி
அனுபல்லவி
அவனிலோ2னார்ஷேய 3பௌருஷேயமந்தி3
4சோத்3யமெருக3 லேனய்ய (எவரி)
சரணம்
5ப4க்த பராதீ4னுட3னுசு 6பரம பா4க3வதுல
வ்யக்த ரூபுடை3 பலிகின முச்சட யுக்தமனுசுனுண்டி
ஸ1க்தி க3ல மஹா-தே3வுடு3 நீவனி ஸந்தோஷமுனனுண்டி
7ஸத்த சித்துட3கு3 த்யாக3ராஜ நுத ஸத்ய ஸந்து4ட3னுகொண்டினிலலோ (எவரி)
பொருள் - சுருக்கம்
தியாகராசனால் போற்றப் பெற்றோனே!
- எவர் சொல்லைக் கேட்டாயோ? வாராயோ? இங்கில்லையோ? பலே பலே!!
- அவனியில், மறைகள், சாத்திரங்கள் அறிந்து, ஐயப்பட அறிந்திலேனய்யா!
- (நீ) தொண்டர்களைக் காப்பதில் ஈடுபட்டவனென, தலைசிறந்த தொண்டர் அவர்களின், நேரிடையாகத் தோன்றி பகர்ந்த, செய்தி உகந்ததென்றிருந்தேன்;
- வல்லமையுடைத்த பெருந் தெய்வம் நீயென மகிழ்ந்திருந்தேன்;
- தூய உள்ளம்படைத்த, சொல் தவறாதவனென கருதினேன்;
- புவியில், எவர் சொல்லைக் கேட்டாயோ? வாராயோ? இங்கில்லையோ? பலே பலே!!
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
எவரி/ மாட/ வின்னாவோ/ ராவோ/ இந்து3/ லேவோ/ ப4ளி ப4ளி/
எவர்/ சொல்லை/ கேட்டாயோ/ வாராயோ/ இங்கு/ இல்லையோ/ பலே பலே/
அனுபல்லவி
அவனிலோ/-ஆர்ஷேய/ பௌருஷேயமு/-அந்தி3/
அவனியில்/ மறைகள்/ சாத்திரங்கள்/ அறிந்து/
சோத்3யமு/-எருக3 லேனு/-அய்ய/ (எவரி)
ஐயப்பட/ அறிந்திலேன்/ அய்யா/
சரணம்
ப4க்த/ பராதீ4னுடு3/-அனுசு/ பரம/ பா4க3வதுல/
(நீ) தொண்டர்களை/ காப்பதில் ஈடுபட்டவன்/ என/ தலைசிறந்த/ தொண்டர் அவர்களின்/
வ்யக்த/ ரூபுடை3/ பலிகின/ முச்சட/ யுக்தமு/-அனுசுனு/-உண்டி/
நேரிடையாக/ தோன்றி/ பகர்ந்த/ செய்தி/ உகந்தது/ என்று/ இருந்தேன்/
ஸ1க்தி/ க3ல/ மஹா/-தே3வுடு3/ நீவு/-அனி/ ஸந்தோஷமுனனு/-உண்டி/
வல்லமை/ யுடைத்த/ பெரும்/ தெய்வம்/ நீ/ என/ மகிழ்ந்து/ இருந்தேன்/
ஸத்த/ சித்துட3கு3/ த்யாக3ராஜ/ நுத/ ஸத்ய ஸந்து4டு3/-அனுகொண்டினி/-இலலோ/ (எவரி)
தூய/ உள்ளம்படைத்த/ தியாகராசனால்/ போற்றப் பெற்றோனே/ சொல் தவறாதவன்/ என கருதினேன்/ புவியில்/ எவர் சொல்லை...
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
மேற்கோள்கள்
3 - பௌருஷேய - மனிதர் மூலமாக - காஞ்சி மாமுனிவரின் விளக்கம் நோக்கவும் -
"பரம்பொருளினால் தெரிவிக்கப்பட்ட மறைகள் 'அபௌருஷேய' (மனிதராலல்லாத) என்றும், மனிதர்களால் இயற்றப்பெற்ற, சாத்திரங்கள் முதலானவை 'பௌருஷேய' என்றும் கூறப்படும்."
Top
விளக்கம்
1 - ப4ளி ப4ளி - பலே பலே - இது கேலியாகும்.
2 - ஆர்ஷேய - ரிஷிகள் மூலமாக - மேற்கூறிய, காஞ்சி மாமுனிவரின் விளக்கத்தின்படி, 'அபௌருஷேய' எனப்படும், பரம்பொருளினால் தெரிவிக்கப்பட்டு, அவற்றினைக் 'கண்டு', உலகுக்கு ரிஷிகளால் அளிக்கப்பட்டவை 'ஆர்ஷேய' எனப்படும். வடமொழியில், அங்ஙனம், மறைகளைக் 'கண்டவர்களை', 'த்3ரு1ஷ்டா' என்றும், தமிழில் 'பார்ப்பனர்' என்றும் அழைக்கப்படும். (மெய்யறிவு, 'காண்டலாகும்' - கண்களினாலோ, அல்லது மற்ற புலன்களினாலோ அறியப்படு பொருள்களைக் குறிக்காது.)
Top
4 - சோத்3ய - இச்சொல்லுக்கு, 'கேள்வி' மற்றும் 'விந்தை' என்றும் பொருளாகும். சரணத்தில், தியாகராஜர், தனக்கு, நாரத முனிவர் தெரிவித்ததை (இறைவன் தொண்டர்களின் நலனைப் பேணுவதில் ஈடுபட்டவன் என) உண்மையென்று நம்பியிருந்ததாகவும், ஆனால், அங்ஙனம் நேரவில்லை என்றும் கூறுகின்றார். இறைவன், யாருடைய தூண்டுதலினால் அங்ஙனம் நடந்துகொள்கின்றான், என்பதனை 'எவரி மாட வின்னாவோ' என பல்லவியில் கூறுகின்றார். அது போன்ற, ஐயத்தினை (யார் தூண்டுதலின் பேரில் என்பதனை) 'நகு மோமு கன லேனி' என்ற கீர்த்தனையிலும் காணலாம். எனவே, இச்சொல்லுக்கு 'ஐயம்' என பொருள் கொள்ளப்பட்டது.
5 - ப4க்த பராதீ4னுடு - தொண்டர்களின் நலனைப் பேணுதலில் ஈடுபட்டவன். தியாகராஜர் 'மனஸா ஸ்ரீ ராமசந்த்3ருனி' என்ற கீர்த்தனையில் கூறுவது - "(பரம்பொருளாகிய) ராமன், படைத்தல், காத்தல் மற்றும் 'அழித்தலெனும் முத்தொழில்களை, மூவருக்கு (பிரமன், விஷ்ணு,சிவன்) ஒப்படைத்துவிட்டு, தான், தொண்டர்களைப் பேணுவதில் மகிழ்வதாக" கூறுகின்றார்.
Top
6 - பரம பா4க3வதுல - தலைசிறந்த தொண்டர் - நாரத முனிவரைக் குறிக்கும். இச்சொல் மரியாதைப் பன்மையிலுள்ளது. தியாகராஜர், நாரத முனிவரை, தனது ஆசானாக வழிபட்டார். தனது, 'ஸ்ரீ நாரத3 முனி கு3ரு ஸ்வாமி' என்ற கீர்த்தனையில், தான், அவரை நேரில் கண்டதாகக் கூறுகின்றார். அதனைத்தான், சரணத்தில், 'வ்யக்த ரூபுடை3 பல்கின முச்சட' - 'நேரிடையாகத் தோன்றி தெரிவித்த செய்தி' என்கின்றார்.
7 - ஸத்த சித்துட3கு3 - இச்சொல்லினை, 'தூய உள்ளம் படைத்த' என்று இங்கு மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ஆயினும், என் சிற்றறிவுக்கு எட்டியவரை, இது பரம்பொருளின் இலக்கணமான 'சச்சிதானந்த' (சத்-சித்-ஆனந்த) என்ற சொல்லினில் உள்ள 'சத்' மற்றும் 'சித்' என்ற பதங்களை 'ஸ்த்த சித்துட3கு3' என்று குறிப்பிடுகின்றார்.
இந்த கீர்த்தனையைப் பற்றி விளக்கத்தினை நோக்கவும்.
Top
Updated on 02 May 2009
2 comments:
திரு கோவிந்தன் அவர்களே
அனுபல்லவியில் சோத்யமு என்பதற்கு விந்தை என்ற பொருளும் உள்ளது என்று கூறியுள்ளளீர். உன்னுடைய விந்தையை (லீலை, விளையாட்டு) என்று பொருள் கொள்ளலாமா.
வணக்கம்
கோவிந்தசாமி
திரு கோவிந்தசாமி அவர்களுக்கு,
'சோத்3யம்' என்ற சொல் பயன்படுத்தப்பட்ட இடம், 'லீலை' அல்லது 'விளையாட்டு' என்ற பொருள் கொள்ள உகந்ததல்ல. அஃதன்றி, 'விந்தை' (wonder) என்ற சொல்லின் பொருள் 'லீலை-விளையாட்டு' (sport) என்ற சொற்களின் பொருளினின்று மாறுபட்டதாகும்.
வணக்கம்
கோவிந்தன்
Post a Comment