வர ராக3 லயக்3ஞுலு தாமனுசு 1வத3ரேரய்ய
அனுபல்லவி
2ஸ்வர ஜாதி 3மூர்ச2ன பே4த3முல்
ஸ்வாந்தமந்து3 4தெலியகயுண்டி3ன (வர)
சரணம்
5தே3ஹோத்3ப4வம்ப3கு3 6நாத3முல்
தி3வ்யமௌ ப்ரணவாகாரமனே
7தா3ஹம்பெ3ருக3னி மானவுல்
த்யாக3ராஜ நுதயேசேரு ராம (வர)
பொருள் - சுருக்கம்
தியாகராசனால் போற்றப் பெற்ற இராமா!
- உயர் ராக, லய, விற்பன்னர் தாமெனப் பிதற்றுவரய்யா!
- ஸ்வர ஜாதி மூர்ச்சன வேறுபாடுகளினை தமதுள்ளத்தில் உணராவிடினும் உயர் ராக, லய, விற்பன்னர் தாமெனப் பிதற்றுவரய்யா!
- உடலில் தோன்றும் நாதங்கள் திவ்வியமான பிரணவ வடிவெனும் தாகம் - (இதனை) அறியாத மனிதர்கள் உயர் ராக, லய, விற்பன்னர் தாமென ஏமாற்றுவர்!
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
வர/ ராக3/ லய-/க்3ஞுலு/ தாமு/-அனுசு/ வத3ரேரு/-அய்ய/
உயர்/ ராக/ லய/ விற்பன்னர்/ தாம்/ என/ பிதற்றுவர்/ அய்யா/
அனுபல்லவி
ஸ்வர/ ஜாதி/ மூர்ச2ன/ பே4த3முல்/
ஸ்வர/ ஜாதி/ மூர்ச்சன/ வேறுபாடுகளினை/
ஸ்வாந்தமு-அந்து3/ தெலியக-உண்டி3ன/ (வர)
தமதுள்ளத்தில்/ உணராவிடினும்/ உயர் ராக...
சரணம்
தே3ஹ/-உத்3ப4வம்ப3கு3/ நாத3முல்/
உடலில்/ தோன்றும்/ நாதங்கள்/
தி3வ்யமௌ/ ப்ரணவ/-ஆகாரமு/-அனே/
திவ்வியமான/ பிரணவ/ வடிவு/ எனும்/
தா3ஹம்பு3/-எருக3னி/ மானவுல்/
தாகம்/ - (இதனை) அறியாத/ மனிதர்கள்/
த்யாக3ராஜ/ நுத/-ஏசேரு/ ராம/ (வர)
தியாகராசனால்/ போற்றப் பெற்றோனே/ ஏமாற்றுவர்/ இராமா/ உயர் ராக...
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - வத3ரேரய்ய - வத3ரேரய்ய ஸ்ரீ ராம
3 - மூர்ச2ன - மூர்ச2னா
4 - தெலியகயுண்டி3ன - தெலியகயுண்டி3
Top
மேற்கோள்கள்
2 - ஸ்வர ஜாதி - இதனை இரண்டு சொற்களாக ஏற்கவேண்டுமா அல்லது ஓரு சொல்லாகவா என விளங்கவில்லை. 'ஜாதி' என்ற சொல்லின் விளக்கம் காணவும்.
3 - மூர்ச2ன - இச்சொல்லின் விளக்கம் காணவும்.
6 - நாத3முல் - நாதம் - இச்சொல்லின் விளக்கத்தினை இந்த web site-களில் நோக்கவும். நாதம்-1; நாதம்-2
Top
விளக்கம்
5 - தே3ஹோத்3ப4வம்ப3கு3 நாத3முல் - உடலில் தோன்றும் நாதங்கள்.
லலிதா ஸஹஸ்ர நாமத்தில், 'பரா', 'பஸ்1யந்தீ', 'மத்4யமா', 'வைக2ரீ' என்பவை அம்மையின் பெயர்களாகும். 'வைக2ரீ' - ஒலிவடிவ நாதமாகும்; 'பஸ்1யந்தீ' - ஒலியற்ற நாதமாகும்; 'மத்4யமா' - 'வைக2ரீ' மற்றும் 'பஸ்1யந்தீ' இவற்றின் இடை நிலையாகும். இவை யாவற்றினையும் கடந்த, நாதம் தோன்றுவதற்கு ஆதாரம் 'பரா' எனப்படும். (ஸ்வாமி தபஸ்யாநந்தாவின் ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்)
'பரா, பஸ்1யந்தீ, மத்4யமா, வைக2ரீ' - காஞ்சி மாமுனிவரின் விளக்கவுரை (பக்கம் 30) நோக்கவும். இந்த விளக்கத்தின்படி 'மத்4யமா' என்பது 'அனாஹத நாதம்' எனவும் கூறப்படும். கபீர் தாஸர் கூறுவது 'அனாஹத நாதம் இடையறாது ஒலிக்கின்றது'.
ஒலி வடிமான 'ஓங்காரம்', 'வைக2ரீ'யாகும் - இதுவே 'அஹத நாதம்' எனப்படும். 'ஏழு சுரங்கள் ஓங்காரத்தினின்றும் வெளிப்படுகின்றது' என தியாகராஜர் தனது 'மோக்ஷமு க3லதா3'என்ற கீர்த்தனையில் கூறுவார்.
Top
7 - தா3ஹம்பு - இந்த சம்ஸ்கிருத சொல்லுக்கு 'நெருப்பு' மற்றும் 'வெப்பம்' என பொருளாகும். இந்த தெலுங்கு சொல்லுக்கு, பொதுவாக, தமிழில் உள்ள 'விடாய்' என பொருளாகும். தியாகராஜர், தனது, 'மோக்ஷமு க3லதா3' என்ற கிருதியில் 'உயிர்மூச்சு மற்றும் உடல் வெம்மையின் சேர்க்கையினால் பிரணவ நாதம் ஏழு சுரங்களாகித் திகழ்கின்றன' என்று கூறுகின்றார்.
இந்த கிருதி முழுதும் சங்கீதத்தைப் பற்றி்யது. நான் இசைப்பயிற்சியற்றவன். எனவே நான் கூறியவற்றினில் தவறுகள் இருந்தால் மன்னிக்கவும்.
பிரணவம் - ஓங்காரம்
'ராக, லய, ஸ்வர ஜாதி மூர்ச்சன' என்ற சொற்கள் தமிழில் மொழிபெயர்க்கப்படவில்லை
Top
Updated on 01 May 2009
No comments:
Post a Comment