ஏலரா ஸ்ரீ க்ரு2ஷ்ணா நாதோ சலமு-
யேலரா க்ரு2ஷ்ணா நீ(கேலரா)
அனுபல்லவி
ஏலராயீ பா3த4 தாள
ஜாலரா த3ய ஜூட3 நீ(கேலரா)
சரணம்
சரணம் 1
ஸ்ரீ ரமா லோல நன்னு ப்3ரோவ
பா4ரமா நின்னு நம்மின நாபை
நேரமாயிடு மம்மெஞ்சிதே
தூ3ரமா நீகு க3ம்பீ4ரமா நீ(கேலரா)
சரணம் 2
ராக3 ரஹித ராக3 ரஸிக
1யாக3 யோக3 போ4க3 ப2லத3
நாக3 ஸ1யன நாக3 ரிபு நுத
த்யாக3ராஜ கரார்சித நீ(கேலரா)
பொருள் - சுருக்கம்
கண்ணா! இலக்குமி கேள்வா! இச்சைகளற்றோனே! இசை நுகர்வோனே! வேள்வி, யோகம், இன்பங்களெனும் பயனருள்வோனே! அரவணைத் துயில்வோனே! கருடனால் போற்றப் பெற்றோனே! தியாகராசனில் கரங்களால் தொழப்பெற்றோனே!
- ஏனய்யா? என்னிடம் பிடிவாதம் ஏனய்யா, உனக்கு?
- ஏனய்யா? இத்துயரம் தாள இயலேன்; தயை செய்ய உனக்கு ஏனய்யா, என்னிடம் பிடிவாதம்?
- என்னைக் காத்தல் பளுவா?
- உன்னை நம்பின என்மீது குற்றமா?
- இங்ஙனம் எம்மைக் கருதினால் தூரமா?
- உனக்குப் பெருந்தன்மையா?
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ஏலரா/ ஸ்ரீ க்ரு2ஷ்ணா/ நாதோ/ சலமு/
ஏனய்யா/ கண்ணா/ என்னிடம்/ பிடிவாதம்/
ஏலரா/ க்ரு2ஷ்ணா/ நீகு/-(ஏலரா)
ஏனய்யா/ கண்ணா/ உனக்கு/ ஏனய்யா...
அனுபல்லவி
ஏலரா/-ஈ/ பா3த4/ தாள/
ஏனய்யா/ இந்த/ துயரம்/ தாள/
ஜாலரா/ த3ய/ ஜூட/3 நீகு/-(ஏலரா)
இயலேனய்யா/ தயை/ செய்ய/ உனக்கு/ ஏனய்யா...
சரணம்
சரணம் 1
ஸ்ரீ ரமா/ லோல/ நன்னு/ ப்3ரோவ/
இலக்குமி/ கேள்வா/ என்னை/ காத்தல்/
பா4ரமா/ நின்னு/ நம்மின/ நாபை/
பளுவா/ உன்னை/ நம்பின/ என்மீது/
நேரமா/-இடு/ மம்மு/-எஞ்சிதே/
குற்றமா/ இங்ஙனம்/ எம்மை/ கருதினால்/
தூ3ரமா/ நீகு/ க3ம்பீ4ரமா/ நீகு/-(ஏலரா)
தூரமா/ உனக்கு/ பெருந்தன்மையா/ உனக்கு/ ஏனய்யா...
சரணம் 2
ராக3/ ரஹித/ ராக3/ ரஸிக/
இச்சைகள்/ அற்றோனே/ இசை/ நுகர்வோனே/
யாக3/ யோக3/ போ4க3/ ப2லத3/
வேள்வி/ யோகம்/ இன்பங்களெனும்/ பயனருள்வோனே/
நாக3/ ஸ1யன/ நாக3/ ரிபு/ நுத/
அரவணை/ துயில்வோனே/ அரவின் /பகை (கருடனால்)/ போற்றப் பெற்றோனே/
த்யாக3ராஜ/ கர/-அர்சித/ நீகு/-(ஏலரா)
தியாகராசனில்/ கரங்களால்/ தொழப்பெற்றோனே/ உனக்கு/ ஏனய்யா...
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
மேற்கோள்கள்
விளக்கம்
1 - யாக3 யோக3 போ4க3 ப2லத3 - வேள்வி, யோகம், இன்பங்களெனும், பயனருள்வோனே : வேள்வி மற்றும் யோகம், புவியின்பங்களுக்காக பலர் இயற்றுகின்றனர். ஆனால், இங்கு 'போ4க3 ப2லத3' (இன்பங்களின் பயன் அருள்வோனே) என்று கொடுக்கப்பட்டுள்ளது. 'போ4க3மே' பயனாகும்; அதற்கென்ன பயனிருக்கமுடியும்? அதனால், 'இன்பங்களெனும் பயனருள்வோனே' என்று பொருள் கொள்ளப்பட்டது.
இந்த கிருதி, திரு TK கோவிந்த ராவ் அவர்களின் 'Compositions of Tyagaraja' என்ற புத்தகத்தில் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. அந்த புத்தகத்தில், இந்த கிருதி தியாகராஜரால் இயற்றப்பெற்றதா என ஐயமிருப்பதாகவும், அவருடைய ஓரிரு சீட பரம்பரையினர் மட்டும் இந்த கிருதியினைப் பாடுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
Top
Updated on 03 May 2009
No comments:
Post a Comment