Saturday, May 9, 2009

தியாகராஜ கிருதி - ஈ வஸுத4 நீவண்டி - ராகம் ஸ1ஹானா - Ivasudha Neevanti - Raga Sahana

பல்லவி
1வஸுத4 நீவண்டி 2தை3வமுனெந்து3 கானரா

அனுபல்லவி
பா4வுகமு கல்கி3 வர்தி4ல்லு
கோவூரி 3ஸுந்த3ரேஸ1 கி3ரீஸ1 (ஈ)

சரணம்
ஆஸசேயர நிமிஷமு நீ புர
வாஸமொனர ஜேயு வாரி மதி3
வேஸடலெல்லனு தொலகி3ஞ்சி
4ராஸுலனாயுவுனு4
பூ4-ஸுர ப4க்தியு தேஜமுனொஸகி3
பு4வனமந்து3 5கீர்தி கல்க3 ஜேஸே
தா3ஸ வரத3 த்யாக3ராஜ ஹ்ரு23
நிவாஸ சித்3விலாஸ ஸுந்த3ரேஸ1 (ஈ)


பொருள் - சுருக்கம்
நற்பேறுடைத்து, செழித்திருக்கும் கோவூரின் சுந்தரேசா! மலையரசே! தியாகராசனின் இதயத்தினில் உறைவோனே! சித்தத்தினில் ஒளிர்வோனே! சுந்தரேசா!
  • இப்புவியில் உன்னைப் போன்ற தெய்வத்தினை யெங்கும் காணேனய்யா!

    • விரும்பி, அரை நிமிடமுனது நகர வாசம் பெறச் செய்வோரின்

    • மனத் துயரங்கள் அனைத்தினையும் போக்கி,

    • நிறைச் செல்வமும், (நீண்ட) ஆயுளும், அந்தணரிடம் பற்றும், (தேக) காந்தியும் வழங்கி,

  • புவியினில் புகழடையச் செய்யும், தொண்டருக் கருள்வோனே!



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ஈ/ வஸுத4/ நீவு/-அண்டி/ தை3வமுனு/-எந்து3/ கானரா/
இந்த/ புவியில்/ உன்னை/ போன்ற/ தெய்வத்தினை/ எங்கும்/ காணேனய்யா/


அனுபல்லவி
பா4வுகமு/ கல்கி3/ வர்தி4ல்லு/
நற்பேறு/ உடைத்து/ செழித்திருக்கும்/

கோவூரி/ ஸுந்த3ரேஸ1/ கி3ரி/-ஈஸ1/ (ஈ)
கோவூரின்/ சுந்தரேசா/ மலை/ யரசே/


சரணம்
ஆஸசே/-அர/ நிமிஷமு/ நீ/ புர/
விரும்பி/ அரை/ நிமிடம்/ உனது/ நகர/

வாஸமு/-ஒனர/ ஜேயு வாரி/ மதி3/
வாசம்/ பெற/ செய்வோரின்/ மன/

வேஸடலு/-எல்லனு/ தொலகி3ஞ்சி/
துயரங்கள்/ அனைத்தினையும்/ போக்கி/

4ன/ ராஸுலனு/-ஆயுவுனு/
செல்வம்/ நிறையவும்/ (நீண்ட) ஆயுளும்/

பூ4-ஸுர/ ப4க்தியு/ தேஜமுனு/-ஒஸகி3/
அந்தணரிடம்/ பற்றும்/ (தேக) காந்தியும்/ வழங்கி/

பு4வனமு-அந்து3/ கீர்தி/ கல்க3/ ஜேஸே/
புவியினில்/ புகழ்/ அடைய/ செய்யும்/

தா3ஸ/ வரத3/ த்யாக3ராஜ/ ஹ்ரு23ய/
தொண்டருக்கு/ அருள்வோனே/ தியாகராசனின்/ இதயத்தினில்/

நிவாஸ/ சித்3/-விலாஸ/ ஸுந்த3ரேஸ1/ (ஈ)
உறைவோனே/ சித்தத்தினில்/ ஒளிர்வோனே/ சுந்தரேசா/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - வஸுத4 - வஸுதா4.

2 - தை3வமுனெந்து3 - தை3வமு நேனெந்து3.

4 - ஆயுவுனு - ஆயுவுலு : 'ஆயுவனு' இந்த இடத்தில் பொருந்தும்.

5 - கீர்தி கல்க3 ஜேஸே - கீர்தி கல்க3 ஜேயு.

Top

மேற்கோள்கள்

விளக்கம்
3 - ஸுந்த3ரேஸ1 - சுந்தரேச - காஞ்சீபுரத்தருகில் உள்ள கோவூரில் சிவனின் பெயர்.

தியாகராஜரின் வாழ்க்கைச் சரிதத்தின்படி, அவர், சுந்தரேச முதலியார் என்பவரின் வேண்டுகோளுக்கிணங்கி, கோவூருக்கு வந்து, அவ்வூர் இறைவனாகிய, சுந்தரேசனின் மீது, ஐந்து கீர்த்தனங்கள் பாடினார். எனவே, 'ஆஸசே-அர நிமிஷமு நீ புர வாஸமு-ஒனர ஜேயு வாரி' (விரும்பி அரை நிமிடம் உனது நகர வாசம் பெற செய்வோரின்) என்ற சொற்கள், பொதுப்படையாக இருந்தாலும், அவரை அழைத்த, திரு சுந்தரேச முதலியாரைக் குறிக்கலாம்.

Top


Updated on 09 May 2009

2 comments:

Govindaswamy said...

திரு கோவிந்தன் அவர்களே

’பா4வுகமு/ கல்கி3/’ என்பதற்கு ’நற்பேறு/ உடைத்து’ என்று பொருள் கொடுத்துள்ளீர். உடைத்து என்னும் சொல் குழப்பத்தை ஏற்படுத்தலாம். நற்பேறு பெற்று/அடைந்து/ அடையப்பெற்று என்றால் எளிதாக விளங்கும்.
வணக்கம்
கோவிந்தசாமி

V Govindan said...

திரு கோவிந்தசாமி அவர்களுக்கு,

'பொந்தி3ன' என்பதனை 'அடைந்த' என்று மொழிபெயர்க்கலாம். 'கல்கி3' என்பதற்கு, 'உள்ள', 'உடைத்த' என்றே பொருள் கொள்ள இயலும்.

'உடைத்த' என்ற சொல் 'broken' என்ற பொருளும் கொடுத்தாலும், இவ்விடத்தில், அப்பொருள் பொருந்தாது.

வணக்கம்
கோவிந்தன்