ஊரகே கல்கு3னா ராமுனி ப4க்தி
அனுபல்லவி
ஸாரெகுனு ஸம்ஸாரமுன ஜொச்சி
ஸாரமனியெஞ்சு வாரி மனஸுன (ஊரகே)
சரணம்
சரணம் 1
ஆலு ஸுதுலு ஜுட்டாலு வர
ஸத3னாலு காய ப3லாலு கனக
த4னாலு கல 1விப4வமுல கனி 2அஸ்தி2ரமு-
லனே பா4க்3ய-ஸா1லுலகு கா3க (ஊரகே)
சரணம் 2
3மஞ்சி வாரினி பொட3கா3ஞ்சி ஸந்ததமு
ஸேவிஞ்சி மனவினாலகிஞ்சியாத3ரி
ஸாதி4ஞ்சி ஸர்வமு ஹரியஞ்சு தெலிஸி
பா4விஞ்சி மதி3னி பூஜிஞ்சு வாரிகி கா3க (ஊரகே)
சரணம் 3
ராஜஸ கு3ண யுக்த பூஜலனொனரிஞ்சக
அஜ ஸன்னுத த்யாக3ராஜுனி ஜிஹ்வபை
ராஜில்லு வர 4மந்த்ர ராஜமுனு
ஸதா3 5ஜபிஞ்சு 6மஹராஜுலகு கா3க (ஊரகே)
பொருள் - சுருக்கம்
பிரமனால் போற்றப் பெற்றோனே!
- தானாகவே தோன்றுமோ இராமனின் பக்தி?
- எவ்வமயமும் உலக வாழ்வினிலுழன்று,
- (அதனை) சாரமென எண்ணுவோரின் மனத்தினில்
- தானாகவே தோன்றுமோ இராமனின் பக்தி?
- மனைவி, மக்கள், சுற்றம், உயர் மாளிகை, உடல் வலிமை, பொன், செல்வங்களுடைத்த கொண்டாட்டத்தினைக் கண்டு,
- நிலையற்றவை யெனும் பேறுடைத்தோருக்கன்றி
- தானாகவே தோன்றுமோ இராமனின் பக்தி?
- நன்மக்களை தரிசித்து,
- எவ்வமயமும் சேவித்து,
- (அவரது) வேண்டுகோளினைச் செவி மடுத்து,
- பணிவுடன் நிறைவேற்றி,
- யாவும் அரியென்றறிந்து, உணர்ந்து,
- மனதில் (இறைவனை) வழிபடுவோருக்கன்றி
- தானாகவே தோன்றுமோ இராமனின் பக்தி?
- இராசத குணமுடை பூசைகளை மேற்கொள்ளாது,
- தியாகராசனின் நாவினில் திகழும் உயர் மந்திரங்களில் தலைசிறந்த (தாரக நாமத்தினை)
- எவ்வமயமும் செபிக்கும் பெருந்தகைகளுக்கன்றி
- தானாகவே தோன்றுமோ இராமனின் பக்தி?
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ஊரகே/ கல்கு3னா/ ராமுனி/ ப4க்தி/
தானாகவே/ தோன்றுமோ/ இராமனின்/ பக்தி/
அனுபல்லவி
ஸாரெகுனு/ ஸம்ஸாரமுன/ ஜொச்சி/
எவ்வமயமும்/ உலக வாழ்வினில்/ உழன்று/
ஸாரமு/-அனி/-எஞ்சு வாரி/ மனஸுன/ (ஊரகே)
(அதனை) சாரம்/ என/ எண்ணுவோரின்/ மனத்தினில்/ தானாகவே...
சரணம்
சரணம் 1
ஆலு/ ஸுதுலு/ ஜுட்டாலு/ வர/
மனைவி/ மக்கள்/ சுற்றம்/ உயர்/
ஸத3னாலு/ காய/ ப3லாலு/ கனக/
மாளிகை/ உடல்/ வலிமை/ பொன்/
த4னாலு/ கல/ விப4வமுல/ கனி/ அஸ்தி2ரமுலு/-
செல்வங்கள்/ உடைத்த/ கொண்டாட்டத்தினை/ கண்டு/ நிலையற்றவை/
அனே/ பா4க்3ய/-ஸா1லுலகு/ கா3க/ (ஊரகே)
எனும்/ பேறு/ உடைத்தோருக்கு/ அன்றி/ தானாகவே...
சரணம் 2
மஞ்சி/ வாரினி/ பொட3கா3ஞ்சி/ ஸந்ததமு/
நன்/ மக்களை/ தரிசித்து/ எவ்வமயமும்/
ஸேவிஞ்சி/ மனவினி/-ஆலகிஞ்சி/-ஆத3ரி/
சேவித்து/ (அவரது) வேண்டுகோளினை/ செவி மடுத்து/ பணிவுடன்/
ஸாதி4ஞ்சி/ ஸர்வமு/ ஹரி/-அஞ்சு/ தெலிஸி/
நிறைவேற்றி/ யாவும்/ அரி/ என்று/ அறிந்து,
பா4விஞ்சி/ மதி3னி/ பூஜிஞ்சு/ வாரிகி/ கா3க/ (ஊரகே)
உணர்ந்து/ மனதில்/ (இறைவனை) வழிபடுவோருக்கு/ அன்றி/ தானாகவே...
சரணம் 3
ராஜஸ/ கு3ண/ யுக்த/ பூஜலனு/-ஒனரிஞ்சக/
இராசத/ குணம்/ உடை/ பூசைகளை/ மேற்கொள்ளாது/
அஜ/ ஸன்னுத/ த்யாக3ராஜுனி/ ஜிஹ்வபை/
பிரமனால்/ போற்றப் பெற்றோனே/ தியாகராசனின்/ நாவினில்/
ராஜில்லு/ வர/ மந்த்ர/ ராஜமுனு/
திகழும்/ உயர்/ மந்திரங்களில்/ தலைசிறந்த (தாரக நாமத்தினை)/
ஸதா3/ ஜபிஞ்சு/ மஹராஜுலகு/ கா3க/ (ஊரகே)
எவ்வமயமும்/ செபிக்கும்/ பெருந்தகைகளுக்கு/ அன்றி/ தானாகவே...
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - விப4வமுல - விப4வால
2 - அஸ்தி2ரமுலனே - அஸ்தி2ராலனே
4 - மந்த்ர ராஜமுனு - மந்த்ர ராஜமுனனு
5 - ஜபிஞ்சு - ஜபிஞ்சே
6 - மஹராஜுலகு - மஹாராஜுலகு
Top
மேற்கோள்கள்
4 - மந்த்ர ராஜமு - மந்திரங்களில் தலைசிறந்தது - தாரக நாமம் - 'ராமா'யெனும் நாமம் - காஞ்சி மாமுனிவரின் விளக்கம் நோக்கவும்
Top
விளக்கம்
3 - மஞ்சி வாரி மனவினாலகிஞ்சி ஆத3ரி ஸாதி4ஞ்சி - 'நன்மக்களின் வேண்டுகோளினை செவி மடுத்து, பணிவுடன் நிறைவேற்றி' - இங்கு 'நிறைவேற்றி' என்ற சொல் 'யாவும் அரியென்று அறிந்து, உணர்ந்து, இறைவனை வழிபடுவதனை'க் குறிக்கும்.
இராசத குணமுடை பூசைகள் - உலக இன்பங்களுக்காக இயற்றப்படுபவை
Top
Updated on 10 May 2009
No comments:
Post a Comment