ஸ்ரீ ரகு4வராப்ரமேய மாமவ
அனுபல்லவி
ஸ்ரீ ரகு4 குல ஜல நிதி4 ஸோம
ஸ்ரீ ராம பாலய (ஸ்ரீ)
சரணம்
சரணம் 1
ஸாரஸ ஹித குலாப்3ஜ ப்4ரு2ங்க3
ஸங்கீ3த லோல (ஸ்ரீ)
சரணம் 2
விரோசன குலேஸ்1வர ஸ்வர லயாதி3
1மூர்ச2னோல்லஸித நாரத3 வினுத (ஸ்ரீ)
சரணம் 3
ஸ்ரீ பா4ஸ்கர குலாத்3ரி தீ3ப
ஸ்ரீ பா4க3வத வினுத ஸு-சரண (ஸ்ரீ)
சரணம் 4
ஸீதா நாத2 த்யாக3ராஜ
நுதானில ஸுதாப்த ஸுகு3ணாப4ரண (ஸ்ரீ)
பொருள் - சுருக்கம்
- இரகுவரா! அளவிடற்கரியனே!
- உயர் இரகு குலக் கடலின் மதியே, இராமா!
- சூரிய குலத் தாமரையின் வண்டே! இசையில் திளைப்போனே!
- பகலவன் குலத் தலைவா!
- சுரம், லயத்தினில் தோன்றும் மூர்ச்சனத்தினில் களிக்கும் நாரதரால் போற்றப் பெற்றோனே! (அல்லது) சுரம், லயம், மூர்ச்சனங்களில் களிக்கும் நாரதரால் போற்றப் பெற்றோனே!
- பரிதி குலக் குன்றின் விளக்கே! உயர் பாகவதர்களால் போற்றப் பெற்றத் திருவடியோனே!
- சீதை மணாளா! தியாகராசனால் போற்றப் பெற்ற, வாயு மைந்தனுக்கினியோனே! நற்பண்புகளை யணிவோனே!
- என்னைக் காப்பாய்.
- பேணுவாய்.
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ஸ்ரீ ரகு4வர/-அப்ரமேய/ மாம்/-அவ/
ஸ்ரீ ரகுவரா/ அளவிடற்கரியனே/ என்னை/ காப்பாய்/
அனுபல்லவி
ஸ்ரீ/ ரகு4/ குல/ ஜல நிதி4/ ஸோம/
உயர்/ இரகு/ குல/ கடலின்/ மதியே/
ஸ்ரீ ராம/ பாலய/ (ஸ்ரீ)
ஸ்ரீ ராமா/ பேணுவாய்/
சரணம்
சரணம் 1
ஸாரஸ/ ஹித/ குல/-அப்3ஜ/ ப்4ரு2ங்க3/
கமல/ நண்பன் (சூரிய)/ குல/ தாமரையின்/ வண்டே/
ஸங்கீ3த/ லோல/ (ஸ்ரீ)
இசையில்/ திளைப்போனே/
சரணம் 2
விரோசன/ குல/-ஈஸ்1வர/ ஸ்வர/ லய/-ஆதி3/
பகலவன்/ குல/ தலைவா/ சுரம்/ லயத்தினில்(லயம்)/ தோன்றும்(ஆகியவற்றில்)/
மூர்ச2ன/-உல்லஸித/ நாரத3/ வினுத/ (ஸ்ரீ)
மூர்ச்சனத்தினில்/ களிக்கும்/ நாரதரால்/ போற்றப் பெற்றோனே/
சரணம் 3
ஸ்ரீ பா4ஸ்கர/ குல/-அத்3ரி/ தீ3ப/
பரிதி/ குல/ குன்றின்/ விளக்கே/
ஸ்ரீ/ பா4க3வத/ வினுத/ ஸு-சரண/ (ஸ்ரீ)
உயர்/ பாகவதர்களால்/ போற்றப் பெற்ற/ திருவடியோனே/
சரணம் 4
ஸீதா/ நாத2/ த்யாக3ராஜ/
சீதை/ மணாளா/ தியாகராசனால்/
நுத/-அனில/ ஸுத/-ஆப்த/ ஸுகு3ண/-ஆப4ரண/ (ஸ்ரீ)
போற்றப் பெற்ற/ வாயு/ மைந்தனுக்கு/ இனியோனே/ நற்பண்புகளை/ அணிவோனே/
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
மேற்கோள்கள்
1 - மூர்ச2ன - சொற்பொருள்
ஸ்ரீ AS. பஞ்சாபகேச ஐயர் அவர்களின் ‘karnAtaka sangIta Sastra’ நோக்கவும்
மூர்ச2ன பத்3த4தி
‘Theory of Murchanas and Murchana Computation’
Top
விளக்கம்
Updated on 09 May 2009
No comments:
Post a Comment