Tuesday, May 19, 2009

தியாகராஜ கிருதி - வந்த3னமு - ராகம் ஸ1ஹான - Vandanamu - Raga Sahana - Prahlada Bhakti Vijayam

பல்லவி
வந்த3னமு ரகு4 நந்த3ன ஸேது
3ந்த4ன ப4க்த 1சந்த3 ராம

சரணம்
சரணம் 1
ஸ்ரீ-த3மா நாதோ வாத3மா நே
பே43மா இதி3 மோத3மா ராம (வ)


சரணம் 2
ஸ்ரீ ரமா ஹ்ரு2ச்சாரமா ப்3ரோவ
பா4ரமா 2ராய-பா4ரமா ராம (வ)


சரணம் 3
விண்டினி நம்முகொண்டினி
1ரணண்டினி ரம்மண்டினி ராம (வ)


சரணம் 4
ஓட3னு ப4க்தி வீட3னு ஒருல
வேட3னு நீ-வாட3னு ராம (வ)


சரணம் 5
கம்மனி விடெ3மிம்மனி வரமு
கொம்மனி 3பலுகு ரம்மனி ராம (வ)


சரணம் 6
ந்யாயமா நீகாதா3யமா 4இங்க
ஹேயமா முனி கே3யமா ராம (வ)


சரணம் 7
சூடு3மீ காபாடு3மீ மம்மு
போடி3மிகா3 கூடு3மீ ராம (வ)


சரணம் 8
க்ஷேமமு தி3வ்ய தா4மமு நித்ய
நேமமு ராம நாமமு ராம (வ)


சரணம் 9
வேக3 ரா கருணா ஸாக3ரா ஸ்ரீ
5த்யாக3ராஜ 6ஹ்ரு23யாகா3ரா ராம (வ)


பொருள் - சுருக்கம்
  • இரகு நந்தனா! அணை கட்டியவனே! தொண்டருக்கு விரும்பியதருளும் இராமா!

  • சீரருள்வோனே!

  • இலக்குமி உள்ளத்துறையே!

  • முனிவர்களால் பாடப் பெற்றோனே!

  • கருணைக் கடலே! தியாகராசனின் இதயத்தில் குடி கொண்டவனே!


    • வந்தனம்.

    • என்னுடன் வாதமோ? நான் (உன்னின்றும்) வேறோ? இஃதுனக்கு மகிழ்ச்சியோ?

    • காத்தல் பளுவோ? இஃதென்ன பேரமோ?

    • செவி மடுத்தேன், நம்பினேன், சரணம் என்றேன், (உன்னை) வர வேண்டினேன்.

    • பின் வாங்கேன், பக்தியை வீடேன், பிறரை வேண்டேன், உன்னவன் நான்.

    • மணக்கும் வீடிகையளிப்பாயென, வரம் பெறுவாயென, சொல்வாய் வாயென.

    • நியாயமோ? உனக்காதாயமோ? இனியும் வெறுப்போ?

    • எம்மை நோக்குவாய், காப்பாய், தக்கமுறையில் கூடுவாய்.

    • நலனும், புனித உறைவிடமும், நாளும் விரதமும் இராமனின் நாமமே.

    • வேகமாய் வாராய்.



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
வந்த3னமு/ ரகு4/ நந்த3ன/ ஸேது/
வந்தனம்/ இரகு/ நந்தனா/ அணை/

3ந்த4ன/ ப4க்த/ சந்த3ன/ ராம/
கட்டியவனே/ தொண்டருக்கு/ விரும்பியதருளும்/ இராமா/


சரணம்
சரணம் 1
ஸ்ரீ-த3மா/ நாதோ/ வாத3மா/ நே/
சீரருள்வோனே/ என்னுடன்/ வாதமோ/ நான்/

பே43மா/ இதி3/ மோத3மா/ ராம/ (வ)
(உன்னின்றும்) வேறோ/ இஃது (உனக்கு)/ மகிழ்ச்சியோ/ இராமா/


சரணம் 2
ஸ்ரீ ரமா/ ஹ்ரு2த்/-சாரமா/ ப்3ரோவ/
இலக்குமி/ உள்ளத்து/ உறையே/ காத்தல்/

பா4ரமா/ ராய-பா4ரமா/ ராம/ (வ)
பளுவோ/ (இஃதென்ன) பேரமோ/ இராமா/


சரணம் 3
விண்டினி/ நம்முகொண்டினி/
செவி மடுத்தேன்/ நம்பினேன்/

1ரணு/-அண்டினி/ ரம்மு/-அண்டினி/ ராம/ (வ)
சரணம்/ என்றேன்/, (உன்னை) வர/ வேண்டினேன்/ இராமா/


சரணம் 4
ஓட3னு/ ப4க்தி/ வீட3னு/ ஒருல/
பின் வாங்கேன்/ பக்தியை/ வீடேன்/ பிறரை/

வேட3னு/ நீ-வாட3னு/ ராம/ (வ)
வேண்டேன்/ உன்னவன் (நான்)/ இராமா/


சரணம் 5
கம்மனி/ விடெ3மு/-இம்மு/-அனி/ வரமு/
மணக்கும்/ வீடிகை/ அளிப்பாய்/ என/ வரம்/

கொம்மு/-அனி/ பலுகு/ ரம்மு/-அனி/ ராம/ (வ)
பெறுவாய்/ என/ சொல்வாய்/ வா/ என/ இராமா/


சரணம் 6
ந்யாயமா/ நீகு/-ஆதா3யமா/ இங்க/
நியாயமோ/ உனக்கு/ ஆதாயமோ/ இனியும்/

ஹேயமா/ முனி/ கே3யமா/ ராம/ (வ)
வெறுப்போ/ முனிவர்களால்/ பாடப் பெற்ற/ இராமா/


சரணம் 7
சூடு3மீ/ காபாடு3மீ/ மம்மு/
நோக்குவாய்/ காப்பாய்/ எம்மை/

போடி3மிகா3/ கூடு3மீ/ ராம/ (வ)
தக்கமுறையில்/ கூடுவாய்/ இராமா/


சரணம் 8
க்ஷேமமு/ தி3வ்ய/ தா4மமு/ நித்ய/
நலனும்/ புனித/ உறைவிடமும்/ நாளும்/

நேமமு/ ராம/ நாமமு/ ராம/ (வ)
விரதமும்/ இராமனின்/ நாமமே/ இராமா/


சரணம் 9
வேக3/ ரா/ கருணா/ ஸாக3ரா/
வேகமாய்/ வாராய்/ கருணை/ கடலே/

ஸ்ரீ த்யாக3ராஜ/ ஹ்ரு23ய/-ஆகா3ரா/ ராம/ (வ)
தியாகராசனின்/ இதயத்தில்/ குடி கொண்டவனே/ இராமா/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)

3 - பலுகு ரம்மனி - பலுக ரம்மனி : இவ்விடத்தில் 'பலுகு ரம்மனி' பொருந்தும்.

4 - இங்க - இந்த

5 - த்யாக3ராஜ - த்யாக3ராஜுனி

6 - ஹ்ரு23யாகா3ரா - ஹ்ரு23யாகாரா : எல்லா புத்தகங்களிலும், இச்சொல்லுக்கு, 'இதயத்துறையே' என்று பொருள் கொள்ளப்பட்டுள்ளது. எனவே, 'ஹ்ரு23யாகா3ரா' பொருந்தும்

சில புத்தகங்களில் 7-வது சரணம் கொடுக்கப்படவில்லை.

Top

மேற்கோள்கள்


விளக்கம்
1 - சந்த3 - தியாகராஜர் பல கீர்த்தனைகளில் 'ப4க்த மந்தா3ர', 'ப4க்த பாரிஜாத' முதலிய சொற்களை பயன்படுத்துகின்றார். விரும்பியதையளிக்கும், ஐந்து வானோர் தருக்களாவன - மந்தாரம், பாரிஜாதம், சந்தானம், கற்பகம், ஹரி சந்தனம். எனவே இவ்விடத்தில் 'சந்த3ன' என்ற சொல்லுக்கு 'விரும்பியதையருளும்' என்று பொருள் கொள்ளப்பட்டது.

2 - ராய-பா4ரமா - இச்சொல்லுக்கு, 'உன்னிடம் எனது குறைகளைச் சொல்ல தூதுவன் வேண்டுமோ?' என்று பொருள்படவும் கொள்ளலாம்.

இப்பாடல் 'பிரஹ்லாத34க்தி விஜயம்' என்ற நாட்டிய நாடகத்தின் அங்கமாகும். இப்பாடலின் சொற்கள், பிரகலாதன் இறைவனை நோக்கிப் பாடுவதாக.

அணை - கடலுக்கு

வீடிகை - தாம்பூலம்

Top


Updated on 19 May 2009

No comments: