ராம ராம ராம லாலி ஸ்ரீ ராம
ராம ராம லாவண்ய லாலி
சரணம்
சரணம் 1
தொ3ரக-ரானி நிதி4 ராரா தொ3ரகு
தொ3ரவு நீவு தொட்லலோ ராரா (ராம)
சரணம் 2
வரமைனட்டி நா பட்டி ராரா வர
ஸுருலகு அருதை3ன ஸுந்த3ர ராரா (ராம)
சரணம் 3
தொலி ஜேஸின நோமு ப2லமா ராம
இலனு வெலயு 1மா இன குல த4னமா (ராம)
சரணம் 4
கல கலமனி ராவு செந்த
ஆகலி கொண்டிவோ லேக கருணா ஸ்வாந்த (ராம)
சரணம் 5
மத3 க3ஜ க3மன நா ஸ்வாமி ஓ
ஸத3யுட3 நீ-லோனி ஜாலி தெல்புமீ (ராம)
சரணம் 6
ஸரி பா3லுலாட3 ரம்மனிரி ஆடி3
வரத3 நீவு ரா-வத்3து3 பொம்மனிரி (ராம)
சரணம் 7
எவரு நின்னு ஏமனிரி
ராக4வ நீயெட3 தப்பு கனி ரா-வத்3த3னிரி (ராம)
சரணம் 8
கனுலு மூஸியாடி3னாரு
கரமுனகணக3னி நேத்ரமனி கஸரெத3ரு (ராம)
சரணம் 9
கலுவ ரேகுலனு போலு கனுலு
கலக3னேல நன்னு கன்ன த3யாளோ (ராம)
சரணம் 10
தேட கன்னுலனு மூஸெத3ரு நா
2தோடி3 வாருலெல்ல போ-வத்3த3னெத3ரு (ராம)
சரணம் 11
நுது3டனு ஸ்1ரம ஜலமேல ஆ
கத2யேமி தெலுபவே கருணாலவால (ராம)
சரணம் 12
சிந்தசே தா3கு3து3 வேரே மேனி
காந்திசே தகி3லிதே கர்மமனெரே (ராம)
சரணம் 13
முத்யால ஸருல சிக்கேமி ஓ
ஸத்ய ஸந்த4 பாத3 ஸருல நொக்கேமி (ராம)
சரணம் 14
முத3முன நே பட்டு வேள
நா பத3முன வ்ராலெத3ரு பலுமாரா வேள (ராம)
சரணம் 15
நின்னேமனி பிலுசுகொனிரி ராம
மன்னனதோனேமனி எஞ்சுகொனிரி (ராம)
சரணம் 16
பா3க3 ஸாக்ஷி ரம்மனிரி வர
த்யாக3ராஜ நுத தை3வமாயனிரி (ராம)
பொருள் - சுருக்கம்
- தாய் -
- முன்செய் நோன்பின் பயனே! புவியிலொளிரும் எமது பரிதி குலச் செல்வமே!
- கருணையுள்ளத்தோனே! மதகரி நடையோனே! என் தெய்வமே! ஓ தயாளா!
- வரதா! இராகவா! என்னையீன்ற தயாளா! கருணைக் கடலே! ஓ சொல் தவறாதவனே!
- இராமா! தாலேலோ!
- இராமா! அழகா! தாலேலோ!
- கிடைக்க மாட்டாத செல்வமே, வாடா!
- துரைக்கு துரையே, நீ தொட்டிலில் வாடா!
- பேறுபோலும் என் குழந்தாய், வாடா!
- உயர் வானோருக்கும் அரிதான சுந்தரா, வாடா!
- தாய் -
- இராமன் -
- தாய் -
- இராமன் -
- தாய் -
- இராமன் -
- தாய் -
- இராமன் -
- தாய் -
- இராமன் -
- தாய் -
- இராமன் -
- கலகலப்பாக வாராயேனோ, அருகினில்? பசியெடுத்ததோ? அன்றி, உனதுள்ளத் துயரத்தினைச் சொல்வாய்;
- ஒத்த சிறுவர்கள் விளையாட வாயென்றனர்; ஆடியபின், நீ வரவேண்டாம், போயென்றனர்;
- எவருன்னை என்ன சொன்னார்கள்? உன்னிடம் தவறு கண்டா வரவேண்டாமென்றனர்?
- கண்களை மூடி ஆடினார்கள்; கைக்குள் கொள்ளாக் கண்களென குறை சொன்னார்கள்;
- தாமரையிதழ் போலும் கண்கள் அமைந்ததேனோ?
- திறந்த கண்களை மூடினர்; எனது தோழர்களெல்லோரும் போகவேண்டாமென்றனர்;
- நெற்றியில் வியர்வைத் துளிகளேன்? அந்த கதையென்ன, சொல்வாய்;
- 'ஒளிந்துகொண்டாயென்று வைத்துக்கொள்; பின்னர் (உனது) உடலொளியினால் அகப்பட்டால் தொல்லை', என்றனரே;
- முத்துச்சரங்கள் பின்னிக்கொன்டதென்ன? கால் (கொலுசு) சரங்கள் நசுங்கினதென்ன?
- களிப்புடன் நான் பிடிக்கும்போழ்து, எனது கால்களில் விழுந்தனர், பலமுறை, அவ்வேளை;
- உன்னையென்னவென்று அழைத்தனர்? மதிப்புடன் என்னவென்று எண்ணிக்கொண்டனர்?
- நல் சாட்சியாக வரச்சொன்னனர்; 'உயர், தியாகராசனால் போற்றப்பெற்ற தெய்வமே'யென்றனர்.
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ராம/ ராம/ ராம/ லாலி/ ஸ்ரீ ராம/
இராமா/ இராமா/ இராமா/ தாலேலோ/ ஸ்ரீ ராமா/
ராம/ ராம/ லாவண்ய/ லாலி/
இராமா/ இராமா/ அழகா/ தாலேலோ/
சரணம்
சரணம் 1
தொ3ரக/-ரானி/ நிதி4/ ராரா/ தொ3ரகு/
கிடைக்க/ மாட்டாத/ செல்வமே/ வாடா/ துரைக்கு/
தொ3ரவு/ நீவு/ தொட்லலோ/ ராரா/ (ராம)
துரையே/ நீ/ தொட்டிலில்/ வாடா/
சரணம் 2
வரமு/-ஐனட்டி/ நா/ பட்டி/ ராரா/ வர/
பேறு/ போலும்/ என்/ குழந்தாய்/ வாடா/ உயர்/
ஸுருலகு/ அருதை3ன/ ஸுந்த3ர/ ராரா/ (ராம)
வானோருக்கும்/ அரிதான/ சுந்தரா/ வாடா/
சரணம் 3
தொலி/ ஜேஸின/ நோமு/ ப2லமா/ ராம/
முன்/ செய்/ நோன்பின்/ பயனே/ இராமா/
இலனு/ வெலயு/ மா/ இன/ குல/ த4னமா/ (ராம)
புவியில்/ ஒளிரும்/ எமது/ பரிதி/ குல/ செல்வமே/
சரணம் 4
கல கலமனி/ ராவு/ செந்த/
கலகலப்பாக/ வாராயேனோ/ அருகினில்/
ஆகலி/ கொண்டிவோ/ லேக/ கருணா/ ஸ்வாந்த/ (ராம)
பசி/ யெடுத்ததோ/ அன்றி/ கருணை/ யுள்ளத்தோனே/
சரணம் 5
மத3/ க3ஜ/ க3மன/ நா/ ஸ்வாமி/ ஓ/
மத/ கரி/ நடையோனே/ என்/ தெய்வமே/ ஓ/
ஸத3யுட3/ நீ/-லோனி/ ஜாலி/ தெல்புமீ/ (ராம)
தயாளா/ உனது/ உள்ள/ துயரத்தினை/ சொல்வாய்/
சரணம் 6
ஸரி/ பா3லுலு/-ஆட3/ ரம்மு/-அனிரி/ ஆடி3/
ஒத்த/ சிறுவர்கள்/ விளையாட/ வா/ யென்றனர்/ ஆடியபின்/
வரத3/ நீவு/ ரா/-வத்3து3/ பொம்மு/-அனிரி/ (ராம)
வரதா/ நீ/ வர/ வேண்டாம்/ போ/ யென்றனர்/
சரணம் 7
எவரு/ நின்னு/ ஏமி/-அனிரி/
எவர்/ உன்னை/ என்ன/ சொன்னார்கள்/
ராக4வ/ நீ-எட3/ தப்பு/ கனி/ ரா/-வத்3து3/-அனிரி/ (ராம)
இராகவா/ உன்னிடம்/ தவறு/ கண்டா/ வர/ வேண்டாம்/ என்றனர்/
சரணம் 8
கனுலு/ மூஸி/-ஆடி3னாரு/
கண்களை/ மூடி/ ஆடினார்கள்/
கரமுனகு/-அணக3னி/ நேத்ரமு/-அனி/ கஸரெத3ரு/ (ராம)
கைக்குள்/ கொள்ளா/ கண்கள்/ என/ குறை/ சொன்னார்கள்/
சரணம் 9
கலுவ/ ரேகுலனு/ போலு/ கனுலு/
தாமரை/ இதழ்/ போலும்/ கண்கள்/
கலக3னு/-ஏல/ நன்னு/ கன்ன/ த3யாளோ/ (ராம)
அமைந்தது/ ஏனோ/ என்னை/ ஈன்ற/ தயாளா/
சரணம் 10
தேட/ கன்னுலனு/ மூஸெத3ரு/ நா/
திறந்த/ கண்களை/ மூடினர்/ எனது/
தோடி3 வாருலு/-எல்ல/ போ/-வத்3து3/-அனெத3ரு/ (ராம)
தோழர்கள்/ எல்லோரும்/ போக/ வேண்டாம்/ என்றனர்;
சரணம் 11
நுது3டனு/ ஸ்1ரம/ ஜலமு/-ஏல/ ஆ/
நெற்றியில்/ வியர்வை/ துளிகள்/ ஏன்/ அந்த/
கத2/-ஏமி/ தெலுபவே/ கருணா/-ஆலவால/ (ராம)
கதை/ என்ன/ சொல்வாய்/ கருணை/ கடலே/
சரணம் 12
சிந்தசே/ தா3கு3து3/ வேரே/ மேனி/
'வைத்துக்கொள்/ ஒளிந்துகொண்டாயென்று/; பின்னர்/ (உனது) உடல்/
காந்திசே/ தகி3லிதே/ கர்மமு/-அனெரே/ (ராம)
ஒளியினால்/ அகப்பட்டால்/ தொல்லை'/ என்றனரே/
சரணம் 13
முத்யால/ ஸருல/ சிக்கு/-ஏமி/ ஓ/
முத்து/ சரங்கள்/ பின்னிக்கொன்டது/ என்ன/ ஓ/
ஸத்ய/ ஸந்த4/ பாத3/ ஸருல/ நொக்கு/-ஏமி/ (ராம)
சொல்/ தவறாதவனே/ கால்/ (கொலுசு) சரங்கள்/ நசுங்கினது/ என்ன/
சரணம் 14
முத3முன/ நே/ பட்டு/ வேள/
களிப்புடன்/ நான்/ பிடிக்கும்/ போழ்து/
நா/ பத3முன/ வ்ராலெத3ரு/ பலுமாரு/-ஆ வேள/ (ராம)
எனது/ கால்களில்/ விழுந்தனர்/ பலமுறை/ அவ்வேளை/
சரணம் 15
நின்னு/-ஏமி-அனி/ பிலுசுகொனிரி/ ராம/
உன்னை/ என்னவென்று/ அழைத்தனர்/ இராமா/.
மன்னனதோனு/-ஏமி-அனி/ எஞ்சுகொனிரி/ (ராம)
மதிப்புடன்/ என்னவென்று/ எண்ணிக்கொண்டனர்/
சரணம் 16
பா3க3/ ஸாக்ஷி/ ரம்மு/-அனிரி/ வர/
நல்/ சாட்சியாக/ வர/ சொன்னனர்/ 'உயர்/
த்யாக3ராஜ/ நுத/ தை3வமா/-அனிரி/ (ராம)
தியாகராசனால்/ போற்றப்பெற்ற/ தெய்வமே'/ என்றனர்/
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
சில புத்தகங்களில், முதல் சரணம் அனுபல்லவியாகக் கொடுக்கப்பட்டுள்ளது.
1 - மா இன குல - இன குல
2 - தோடி3 வாருலெல்ல - தோடி வாருலெல்ல
Top
மேற்கோள்கள்
விளக்கம்
கண்களை மூடி ஆடினார்கள் - கண்ணாம்பூச்சி
Top
Updated on 18 May 2009
2 comments:
திரு கோவிந்தன் அவர்களே
சரணம் 4 ல் ஆகலி/ கொண்டிவோ/ லேக கருணா ஸ்வாந்த /
பசி/ யெடுத்ததோ/ அன்றி/ கருணை/ யுள்ளத்தோனே/ இதன் பொருள் தெளிவாக இல்லை. பசியெடுத்ததா என்பதற்கும் கருணையுள்ளத்தோன் என்பதற்கும் என்ன தொடர்பு.
வணக்கம்
கோவிந்தசாமி
திரு கோவிந்தசாமி அவர்களுக்கு,
பொருள் சுருக்கத்தில் சில சரணங்களை இணைத்தே பொருள் கொள்ளப்பெற்றுள்ளது. 4 மற்றும் 5-வது சரணங்கள் இணைந்துள்ளன.
'கருணாஸ்வாந்த' என்பது metre நிறைவு செய்வதற்காக சேர்க்கப்பட்ட சொல்லாகக் கொள்ளவேண்டும்.
வணக்கம்
கோவிந்தன்
Post a Comment