Wednesday, May 20, 2009

தியாகராஜ கிருதி - ஸ்ரீ ராம் ஸ்ரீ ராம - ராகம் ஸ1ஹான - Sri Rama Sri Rama - Raga Sahana

பல்லவி
ஸ்ரீ ராம ஸ்ரீ ராம ஸ்ரீ மனோ-ஹரமா

சரணம்
சரணம் 1
ஏலரா நீ த3ய இந்தைன 1ராத3யா (ஸ்ரீ)


சரணம் 2
சாலதா3 ஸத32ஸாமி 3தாளத3யா (ஸ்ரீ)


சரணம் 3
இப்புடே3 லேத3ட இகனு ப்3ரோதுவட (ஸ்ரீ)


சரணம் 4
எப்புடோ3 கடகட இக த3யாளுவட (ஸ்ரீ)


சரணம் 5
இங்கயீ 4மர்மமா இதி3 நீகு த4ர்மமா (ஸ்ரீ)


சரணம் 6
பங்கஜ வத3னமா பா3கு33 ஜூடு3மா (ஸ்ரீ)


சரணம் 7
ஏ ஜன்ம பாபமோ எவ்வரி ஸா1பமோ (ஸ்ரீ)


சரணம் 8
ஏ நாடி கோபமோ நெரிய நா பாபமோ (ஸ்ரீ)


சரணம் 9
என்னாள்ளீ தீ3னத இதி3 நீகு யோக்3யதா (ஸ்ரீ)


சரணம் 10
பலிகி பொ3ங்கவட பரம ஸா1ந்துட3வட (ஸ்ரீ)


சரணம் 11
4க்த காந்துட3ட பத்3ம நேத்ருட3ட (ஸ்ரீ)


சரணம் 12
ஸர்வமு நீவட ஸத்ய ரூபுட3ட (ஸ்ரீ)


சரணம் 13
ராக3 விரஹித த்யாக3ராஜ நுத (ஸ்ரீ)


பொருள் - சுருக்கம்
  • ஸ்ரீ ராமா! இலக்குமி மனம் கவர்வோனே!

  • கனிவுடையோனே! சாமி!

  • தாமரை வதனத்தோனே!

  • பற்றற்றவனே! தியாகராசனால் போற்றப் பெற்றோனே!


  • (நீ) தயாளனாம்;

  • சொல் தவறமாட்டாயாம்;

  • மிக்கு அமைதியானவனாம்;

  • தொண்டர்களின் கணவனாம்;

  • தாமரைக் கண்ணனாம்;

  • யாவும் நீயாம்;

  • உண்மையின் உருவாம்.


    • ஏனய்யா, உனது கருணை சிறிதாகிலும் வாராதய்யா?

    • போதாதா, தாளாதய்யா;

    • இப்போதே இல்லையாம்; இனிமேல் காப்பாயாம்; எப்போழ்தோ, ஐயகோ!

    • இனியும் இந்த மருமமா? இஃதுனக்கு தருமமா?

    • நன்கு (என்னை) நோக்குவாய்;

    • எப்பிறவியின் பாவமோ? எவருடைய சாபமோ?

    • என்றைய கோபமோ? அல்லது மிக்கு எனது பாவமோ?

    • எத்தனை நாள் இந்த இழிவு? இஃதுனக்கு தகுமா?



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ஸ்ரீ ராம/ ஸ்ரீ ராம/ ஸ்ரீ/ மனோ/-ஹரமா/
ஸ்ரீ ராமா/ ஸ்ரீ ராமா/ இலக்குமி/ மனம்/ கவர்வோனே/


சரணம்
சரணம் 1
ஏலரா/ நீ/ த3ய/ இந்த-ஐன/ ராது3-/அயா/ (ஸ்ரீ)
ஏனய்யா/ உனது/ கருணை/ சிறிதாகிலும்/ வாராது/ அய்யா/


சரணம் 2
சாலதா3/ ஸத3ய/ ஸாமி/ தாளது3/-அயா/ (ஸ்ரீ)
போதாதா/ கனிவுடையோனே/ சாமி/ தாளாது/ அய்யா/


சரணம் 3
இப்புடே3/ லேது3-அட/ இகனு/ ப்3ரோதுவு-அட/ (ஸ்ரீ)
இப்போதே/ இல்லையாம்/ இனிமேல்/ காப்பாயாம்/


சரணம் 4
எப்புடோ3/ கடகட/ இக/ த3யாளுவு-அட/ (ஸ்ரீ)
எப்போழ்தோ/ ஐயகோ/ ஆயினும்/ (நீ) தயாளனாம்/


சரணம் 5
இங்க/-ஈ/ மர்மமா/ இதி3/ நீகு/ த4ர்மமா/ (ஸ்ரீ)
இனியும்/ இந்த/ மருமமா/ இஃது/ உனக்கு/ தருமமா/


சரணம் 6
பங்கஜ/ வத3னமா/ பா3கு33/ ஜூடு3மா/ (ஸ்ரீ)
தாமரை/ வதனத்தோனே/ நன்கு/ (என்னை) நோக்குவாய்/


சரணம் 7
ஏ/ ஜன்ம/ பாபமோ/ எவ்வரி/ ஸா1பமோ/ (ஸ்ரீ)
எந்த/ பிறவியின்/ பாவமோ/ எவருடைய/ சாபமோ/


சரணம் 8
ஏ நாடி/ கோபமோ/ நெரிய/ நா/ பாபமோ/ (ஸ்ரீ)
என்றைய/ கோபமோ/ (அல்லது) மிக்கு/ எனது/ பாவமோ/


சரணம் 9
என்னாள்ளு/-ஈ/ தீ3னத/ இதி3/ நீகு/ யோக்3யதா/ (ஸ்ரீ)
எத்தனை நாள்/ இந்த/ இழிவு/ இஃது/ உனக்கு/ தகுமா/


சரணம் 10
பலிகி/ பொ3ங்கவு-அட/ பரம/ ஸா1ந்துட3வு-அட/ (ஸ்ரீ)
சொல்/ தவறமாட்டாயாம்/ மிக்கு/ அமைதியானவனாம்/


சரணம் 11
4க்த/ காந்துடு3-அட/ பத்3ம/ நேத்ருடு3-அட/ (ஸ்ரீ)
தொண்டர்களின்/ கணவனாம்/ தாமரை/ கண்ணனாம்/


சரணம் 12
ஸர்வமு/ நீவு-அட/ ஸத்ய/ ரூபுடு3-அட/ (ஸ்ரீ)
யாவும்/ நீயாம்/ உண்மையின்/ உருவாம்/


சரணம் 13
ராக3/ விரஹித/ த்யாக3ராஜ/ நுத/ (ஸ்ரீ)
பற்று/ அற்றவனே/ தியாகராசனால்/ போற்றப் பெற்றோனே/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - ராத3யா - ராத3

2 - ஸாமி - ஸ்வாமி

3 - தாளத3யா - தாளத3

4 - மர்மமா - கர்மமா

சில புத்தகங்களில் 4 மற்றும் 5-வது சரணங்கள் மாற்றி கொடுக்கப்பட்டுள்ளன. பொருளின் கோர்வையை நோக்குகையில் அங்ஙனம் மாற்றினால் தவறாகும்.

Top

மேற்கோள்கள்

விளக்கம்



Updated on 20 May 2009

No comments: