Wednesday, May 13, 2009

தியாகராஜ கிருதி - நிஜமுக3 நீ - ராகம் ஸ1ஹான - Nijamuga Nee - Raga Sahaana

பல்லவி
நிஜமுக3 நீ 1மஹிம தெல்ப லேரு

அனுபல்லவி
4ஜன ஸேயுமனி பலிகிரி கானி
2அஜ க3ஜ ஸிம்ஹ 3ஸ்ரு2கா3லாந்தரமனி (நிஜ)

சரணம்
4பு3த்3தி4யனு தல்லினி விஷய விடுலகு
ப்ரொத்3து3னொஸகி3 பைகமுலார்ஜிஞ்சே
5ஸித்3து4லு ஸுஜனுல ஸப4கு ரா நேரனி
5பெத்33லு ஸ்ரீ 6த்யாக3ராஜ வினுத ராம (நிஜ)


பொருள் - சுருக்கம்
தியாகராசனால் போற்றப் பெற்ற இராமா!
  • நிசமாக உனது மகிமையினைத் தெரிவிக்க மாட்டார்

    • 'பஜனை செய்வீர்' எனப் பகர்ந்தனர்; ஆயின்,

    • ஆடு - யானை, சிங்கம் - ஓநாய்களின் வேறுபாடென

  • நிசமாக உனது மகிமையினைத் தெரிவிக்க மாட்டார்

    • அறிவெனும் தாயினை விடயங்களெனும் காமுகர்களுக்கு காலைமுதல் அளித்து, பணம் தேட்டும் 'சித்தர்கள்',

    • நல்லோரின் அவைக்கு வர நேராத 'பெரியோர்கள்',

  • நிசமாக உனது மகிமையினைத் தெரிவிக்க மாட்டார்



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
நிஜமுக3/ நீ/ மஹிம/ தெல்ப/ லேரு/
நிசமாக/ உனது/ மகிமையினை/ தெரிவிக்க/ மாட்டார்/


அனுபல்லவி
4ஜன/ ஸேயுமு/-அனி/ பலிகிரி/ கானி/
பஜனை/ செய்வீர்/ என/ பகர்ந்தனர்/ ஆயின்/

அஜ/ க3ஜ/ ஸிம்ஹ/ ஸ்ரு2கா3ல/-அந்தரமு/-அனி/ (நிஜ)
ஆடு/ யானை/ சிங்கம்/ ஓநாய்(களின்)/ வேறுபாடு/ என/ நிசமாக...


சரணம்
பு3த்3தி4/-அனு/ தல்லினி/ விஷய/ விடுலகு/
அறிவு/ எனும்/ தாயினை/ விடயங்களெனும்/ காமுகர்களுக்கு/

ப்ரொத்3து3ன/-ஒஸகி3/ பைகமுலு/-ஆர்ஜிஞ்சே/
காலைமுதல்/ அளித்து/ பணம்/ தேட்டும்/

ஸித்3து4லு/ ஸுஜனுல/ ஸப4கு/ ரா/ நேரனி/
'சித்தர்கள்'/ நல்லோரின்/ அவைக்கு/ வர/ நேராத/

பெத்33லு/ ஸ்ரீ த்யாக3ராஜ/ வினுத/ ராம/ (நிஜ)
'பெரியோர்கள்'/ ஸ்ரீ தியாகராசனால்/ போற்றப் பெற்ற/ இராமா/ நிசமாக...


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - மஹிம - மஹிமலு

3 - ஸ்ரு2கா3 - ஸ்1ரு2கா3ல : 'ஸ்1ரு2கா3ல' என்ற சம்ஸ்கிருத சொல்லின் தெலுங்கு திரிபு 'ஸ்ரு2கா3ல'

4 - பு3த்3தி4யனு - பு3த்3த்4யனு

6 - த்யாக3ராஜ வினுத ராம - த்யாக3ராஜ வினுத

Top

மேற்கோள்கள்


விளக்கம்
2 - அஜ க3ஜ ஸிம்ஹ ஸ்ரு2கா3லாந்தர - ஆடு - யானை மற்றும் சிங்கம் - ஓநாய் இவற்றின் வேறுபாடு : 'ராம' என்ற நாமம் பிறவிக்கடலைக் கடத்துவிக்கும் 'தாரக நாம'மாகும். தனது அறிவினை, செல்வம் தேட்டுதலில் ஈடுபடுத்துவோர் இதனை அறியவியலர். அதனால், அவர்கள் ஊருக்குத்தான் உபதேசம் செய்வர் - அதுவும் அறைகுறையாக.

தியாகராஜர், 'ப4க்தி பி3ச்சமிய்யவே' என்ற கீர்த்தனையில், 'கெட்டித்தனமுடைத்தோருக்கு, வேதாகம, புராணங்களின் பிரசங்கத் திறமை ஏற்படுவதனால் என்ள பயன்' என்கின்றார்.

'அஜாமிள'னின் கதையில் (பாகவத புராணம், புத்தகம் 6, அத்தியாயம் 2) நாராயணனின் நாமத்தினை தெரிந்தோ, தெரியாமலோ, ஓர்முறை சொன்னாலும், அதுவும் இறக்கும் தறுவாயில் கூறினால், நமன் பிடியிலிருந்து தப்பலாம், என்று கூறப்பட்டது. அப்படியிருக்க, இறைவனின் நாம பஜனையில் உள்ள பயனை முழுவதுமாக உணராமல் மனிதர்கள் இருப்பதனை தியாகராஜர் குறை கூறுகின்றார்.

Top

4 - பு3த்3தி4யனு தல்லினி விஷய விடுலகு - தியாகராஜரின் 'மனஸு விஷய நட விடுலகு' என்ற 'நாடகுரஞ்சி' கீர்த்தனையையும் நோக்கவும்.

கடோபநிடதத்தில் கூறப்பட்டது (I-iii) -

"புலன்கள் குதிரைகளெனக் கூறுவர்; புலன்களால் நுகரப்படுபவை பாட்டைகளாம். அறிவு எனும் தேரோட்டி, புலன்களெனும் குதிரைகளை, மனமெனும் கடிவாளத்தினை சரிவர இயக்கி, நேர் வழியில் தேரினை நடத்த, வீடு சேரலாம். அங்ஙனமன்றி, கடிவாளமில்லாத குதிரைகள், தத்தம் பாட்டைகளில் செல்ல நேர, தேர் வழி தவறி வீழந்து நொறுங்கும்.

கடோபநிடத விளக்கம் நோக்கவும்.

தியாகராஜர், அறிவினை தாயென்று (பு3த்3தி4யனு தல்லி) கூறி, அவ்வறிவு, புலன்களை அடக்கியாளாது, அவற்றின் வழி செல்ல (விஷய விடுலகு ஒஸக3), எங்ஙனம் தாரக நாமத்தின் மகிமையினை உணரமுடியும், என்று கேட்கின்றார்.

5 - ஸித்3து4லு - பெத்33லு - சித்தர்கள், பெரியோர்கள் - இவை கேலிச் சொற்கள்.

மாட்டார் - இயலார் என
விடயம் - புலன்களால் நுகரப்படுபவை

Top


Updated on 14 May 2009

2 comments:

V Govindan said...

(Comment received by me thru email)

திரு கோவிந்தன் அவர்களே

மஹிம தெல்ப லேரு என்பதற்கு உன் பெருமையை/ஆற்றலைக் கூற இயலார் என்பது பொருத்தமாக இருக்கும் என்று எண்ணுகிறேன்.
பணம்/ தேட்டும்/ - தேடும் என்பது சரி.
குதிரைகளெனக் கூறவர்- கூறுவர் என்பது சரி.

வணக்கம்
கோவிந்தசாமி

V Govindan said...

திரு கோவிந்தசாமி அவர்களுக்கு,

தமிழ் அகராதியின்படி, 'மாட்டார்' என்பதற்கு 'இயலார்' என்றும் பொருள்.

(மாட்டார், appel. n. [pl.] Incapable or incompetent persons, ஏலாதார்)

'தேடுதல்' என்பது இவ்விடத்தில் பொருந்தாது. 'பணம் தேட்டல்' (ArjincE) என்பதே சரியான வழக்கு.

'கூறவது' என்ற தவற்றினைத் திருத்திவிட்டேன். சுட்டிக் காட்டியதற்கு நன்றி.

வணக்கம்,
கோவிந்தன்