தே3ஹி தவ பத3 ப4க்திம் வைதே3ஹி பதித பாவனி மே ஸதா3
அனுபல்லவி
ஐஹிகாமுஷ்மிக ப2லதே3
கமலாஸனானன்யஜ1 வர ஜனனீ (தே3ஹி
சரணம்
சரணம் 1
கலஸ1 2வாராஸி1 ஜனிதே கனக பூ4ஷண லஸிதே
3கலஸ1ஜ கீ3த முதி3தே 4காகுத்ஸ்த2 ராஜ ஸஹிதே (தே3ஹி)
சரணம் 2
அகி2லாண்ட3 ரூபிணி அளி குல நிப4 வேணி
மக2 ஸம்ரக்ஷண ராணி மம பா4க்3ய காரிணி (தே3ஹி)
சரணம் 3
ஸ1ரணாக3த பாலனே 5ஸ1த முக2 மத3 த3மனே
தருணாருணாப்3ஜ நயனே த்யாக3ராஜ ஹ்ரு2த்ஸத3னே (தே3ஹி)
பொருள் - சுருக்கம்
- வைதேகி! வீழ்ந்தோரை புனிதப்படுத்துபவளே!
- இம்மை, மறுமை பயனளிப்பவளே! மலரோன், காமனையீன்ற தூயவளே!
- குடக்கடலில் உதித்தவளே! பொன்னணிகலன்களுடன் திகழ்பவளே! குடமுனி இசையில் மகிழ்பவளே! காகுத்த மன்னன் உடனுறையே!
- அனைத்தண்ட உருவினளே! கரு வண்டின நிகர் குழலினளே! வேள்வி காத்தோன் அரசியே! எனது பேற்றின் காரணமே!
- புகலடைந்தோரைக் காப்பவளே! இராவணனின் செருக்கழித்தவளே! இளங்காலை நிகர் கமலக் கண்ணாளே! தியாகராசன் இதயத்துறையே!
- தருவாயுனது திருவடிப் பற்றினை எனக்கு, எவ்வமயமும்.
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
தே3ஹி/ தவ/ பத3/ ப4க்திம்/ வைதே3ஹி/ பதித/ பாவனி/ மே/ ஸதா3/
தருவாய்/ உனது/ திருவடி/ பற்றினை/ வைதேகி/ வீழ்ந்தோரை/ புனிதப்படுத்துபவளே/ எனக்கு/ எவ்வமயமும்/
அனுபல்லவி
ஐஹிக/-ஆமுஷ்மிக/ ப2லதே3/
இம்மை/ மறுமை/ பயனளிப்பவளே/
கமல-ஆஸன/-அனன்யஜ/ வர/ ஜனனீ/ (தே3ஹி)
மலரோன்/ காமனை/ தூய/ ஈன்றவளே/
சரணம்
சரணம் 1
கலஸ1/ வாராஸி1/ ஜனிதே/ கனக/ பூ4ஷண/ லஸிதே/
குட/ கடலில்/ உதித்தவளே/ பொன்/ அணிகலன்களுடன்/ திகழ்பவளே/
கலஸ1ஜ/ கீ3த/ முதி3தே/ காகுத்ஸ்த2/ ராஜ/ ஸஹிதே/ (தே3ஹி)
குடமுனி/ இசையில்/ மகிழ்பவளே/ காகுத்த/ மன்னன்/ உடனுறையே/
சரணம் 2
அகி2ல/-அண்ட3/ ரூபிணி/ அளி/ குல/ நிப4/ வேணி/
அனைத்து/ அண்ட/ உருவினளே/ கரு வண்டு/ இன/ நிகர்/ குழலினளே/
மக2/ ஸம்ரக்ஷண/ ராணி/ மம/ பா4க்3ய/ காரிணி/ (தே3ஹி)
வேள்வி/ காத்தோன்/ அரசியே/ எனது/ பேற்றின்/ காரணமே/
சரணம் 3
ஸ1ரண/-ஆக3த/ பாலனே/ ஸ1த/ முக2/ மத3/ த3மனே/
புகல்/ அடைந்தோரை/ காப்பவளே/ நூறு/ முகன் (இராவணனின்)/ செருக்கு/ அழித்தவளே/
தருண/-அருண/-அப்3ஜ/ நயனே/ த்யாக3ராஜ/ ஹ்ரு2த்/-ஸத3னே/ (தே3ஹி)
இளம்/ காலை (நிகர்)/ கமல/ கண்ணாளே/ தியாகராசன்/ இதயத்து/ உறையே/
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
மேற்கோள்கள்
1 - அனன்யஜ - காமன்
3 - கலஸ1ஜ கீ3த முதி3தே - அகத்தியரின் இசையினில் மகிழ்பவள் - அகத்தியர் இசையில் வல்லவர் என தியாகராஜர் தனது 'ஸங்கீ3த ஞானமு' என்ற கீர்த்தனையில் குறிப்பிடுகின்றார். 'அகத்தியரும் இசையும்' நோக்கவும் -
அகத்தியர் இயற்றியது -
அகத்திய னவயவ பேதநா லேழனுள்
ஒரோ வொன்றை யிரண்டின் டுஞற்றி
அவற்றை நான்கொடு நந்நான் காக்கிச்
சிவன்சிவை முறையே வொருமையைத் தெரிந்து
ராச சேகர வழுதிக் கிசைத்தனன். ....56
அகத்தியர் வீணை இசையில் ராவணனைத் தோற்கடித்தார்
Top
4 - காகுத்ஸ்த2 - காககுத்தன் - இக்ஷ்வாகு குலத்தினில் தோன்றிய மன்னன் - 'புரஞ்சயன்', 'இந்திர வாகன்' என்றும் பெயருடையவன். 'காகுத்தன்' என்ற சொல்லுக்கு '(இந்திரனெனும்) எருதின் திமிலில் நிற்பவன்' எனப் பொருள். பாகவத புராணம், புத்தகம் 9, அத்தியாயம் 6 நோக்கவும்.
5 - ஸ1த முக2 - நூறு முகத்தோன் - இவ்விடத்தில், இச்சொல் ராவணனைக் குறிக்கும். ஆனந்த ராமாயணத்தினில் 'நூறு முக ராவணன்' என கூறப்பட்டுள்ளது
Top
விளக்கம்
2 - வாராஸி1 - இவ்விடத்தில், இச்சொல்லுக்கு 'கடல்' என்று பொருளாகும். சம்ஸ்கிருத அகராதியின்படி 'வாரிராஸி1' அல்லது 'வார்ராஸி1' சரியான சொல்லாகும். தியாகராஜர் மற்ற கீர்த்தனங்களில் கூட இச்சொல்லினை 'கடல்' என்ற பொருளில் பயன்படுத்துகின்றார்.
குடக்கடல் - பாற்கடல்
குடமுனி - அகத்தியர்
காகுத்த மன்னன், வேள்வி காத்தோன் - இராமன்
Top
Updated on 13 May 2009
No comments:
Post a Comment