Thursday, May 14, 2009

தியாகராஜ கிருதி - ரகு4 பதே ராம - ராகம் ஸ1ஹான - Raghupate Rama - Raga Sahana

பல்லவி
ரகு4 பதே ராம ராக்ஷஸ பீ4

அனுபல்லவி
ப்4ரு2கு3 ஸுத மத3 ஹரண முனி ப்3ரு2ந்த3 வந்தி3த சரண (ரகு4)

சரணம்
சரணம் 1
ஸரஸீ-ருஹ நயன ஸஜ்ஜன ஹ்ரு23ய நிகேதன
4ரணீ த4ர தீ4ர ஸீதா மனோ-ஹர
நிரவதி4 ஸுக2தா3ப்ரமேய நிருபம நாரத3 ஸுகே3
கர த்4ரு2த ஸ1ர ஜால நீல க4ன வர்ணாமர பால (ரகு4)


சரணம் 2
தருணாருண நிப4 சரண தரணி வம்ஸ1 விபூ4ஷண
வருணாலய மத33மன வாரணாவன
கருணா-கர கி3ரீஸ1 சாப க2ண்ட3ன நிர்ஜித தாப
1பரிபூர்ணாவதார பர பா4மினீ தூ3ர (ரகு4)


சரணம் 3
ஹரி ஹய பங்கஜ ப4வ நுத புர வைரி 2பராஸ1 ஹித
3நர வர வேஷ ஸுகே3ய தாரக நாம-தே4
ஸ்வர ஜித க4ன ரவ பரேஸ11த பா4ஸ்கர ஸங்காஸ1
பரிபாலித த்யாக3ராஜ பாஹி ப4க்த ஸமாஜ (ரகு4)


பொருள் - சுருக்கம்
  • ஓ இரகு பதி! இராமா! அரக்கருக்கு அச்சமூட்டுவோனே!

  • பிருகு மைந்தன் மதத்தினை யொடுக்கியோனே! முனிவர்கள் தொழும் திருவடியோனே!

  • கமலக்கண்ணா!நல்லோர் இதயத்துறையே! புவியைச் சுமந்த தீரனே! சீதையின் உள்ளம் கவர்வோனே! இடையறா சுகமருளும் அளவிடற்கரியனே! ஒப்பற்ற, நாரதரால் சிறக்க பாடப் பெற்றோனே! எண்ணற்ற அம்புகள் கையிலேந்துவோனே! கார்முகில் நீல வண்ணத்தோனே! அமரரைக் காப்போனே!

  • இளங்காலை நிகர் செந்திருவடியோனே! பரிதி குல அணிகலனே! கடலரசனின் செருக்கை அடக்கியோனே! வாரணத்தைக் காத்தோனே!கருணாகரனே! கிரீசனின் அம்பை முறித்தவனே! துயர் வென்றோனே! பரிபூரண அவதாரமே! பிறன் மனைக்கு தூரமானவனே!

  • பொற்குதிரையோன், மலரோனால் போற்றப் பெற்றோனே! புரமெரித்தோன், பராசரருக்கு இனியவனே! உயர் மனித வேடத்தோனே! சிறக்க பாடல் பெற்றோனே! தாரக நாமத்தோனே! குரலில் இடியினை மிக்கோனே! மேலான தெய்வமே! நூறு பரிதிகள் நிகரொளியோனே! தியாகராசனைப் பேணுவோனே! தொண்டர் சமூகத்துறைவோனே!

    • காப்பாய்.



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ரகு4/ பதே/ ராம/ ராக்ஷஸ/ பீ4ம/
ஓ இரகு/ பதி/ இராமா/ அரக்கருக்கு/ அச்சமூட்டுவோனே/


அனுபல்லவி
ப்4ரு2கு3/ ஸுத/ மத3/ ஹரண/ முனி ப்3ரு2ந்த3/ வந்தி3த/ சரண/ (ரகு4)
பிருகு/ மைந்தன்/ மதத்தினை/ யொடுக்கியோனே/ முனிவர்கள்/ தொழும்/ திருவடியோனே/


சரணம்
சரணம் 1
ஸரஸீ-ருஹ/ நயன/ ஸஜ்ஜன/ ஹ்ரு23ய/ நிகேதன/
கமல/ கண்ணா/ நல்லோர்/ இதயத்து/ உறையே/

4ரணீ/ த4ர/ தீ4ர/ ஸீதா/ மனோ/-ஹர/
புவியை/ சுமந்த/ தீரனே/ சீதையின்/ உள்ளம்/ கவர்வோனே/

நிரவதி4/ ஸுக23/-அப்ரமேய/ நிருபம/ நாரத3/ ஸுகே3ய/
இடையறா/ சுகமருளும்/ அளவிடற்கரியனே/ ஒப்பற்ற/ நாரதரால்/ சிறக்க பாடப் பெற்றோனே/

கர/ த்4ரு2த/ ஸ1ர/ ஜால/ நீல/ க4ன/ வர்ண/-அமர/ பால/ (ரகு4)
கையில்/ ஏந்துவோனே/ அம்புகள்/ எண்ணற்ற/ நீல/ கார்முகில்/ வண்ணத்தோனே/ அமரரை/ காப்போனே/


சரணம் 2
தருண/-அருண/ நிப4/ சரண/ தரணி/ வம்ஸ1/ விபூ4ஷண/
இளம்/ காலை (சிகப்பு)/ நிகர்/ திருவடியோனே/ பரிதி/ குல/ அணிகலனே/

வருண-ஆலய/ மத3/ த3மன/ வாரண/-அவன/
கடலரசனின்/ செருக்கை/ அடக்கியோனே/ வாரணத்தை/ காத்தோனே/

கருணா-கர/ கி3ரி/ -ஈஸ1/ சாப/ க2ண்ட3ன/ நிர்ஜித/ தாப/
கருணாகரனே/ கிரி/ ஈசனின்/ அம்பை/ முறித்தவனே/ வென்றோனே/ துயரினை/

பரிபூர்ண/-அவதார/ பர/ பா4மினீ/ தூ3ர/ (ரகு4)
பரிபூரண/ அவதாரமே/ பிறன்/ மனைக்கு/ தூரமானவனே/


சரணம் 3
ஹரி/ ஹய/ பங்கஜ ப4வ/ நுத/ புர/ வைரி/ பராஸ1ர/ ஹித/
பொற்/ குதிரையோன்/ மலரோனால்/ போற்றப் பெற்றோனே/ புரம்/ எரித்தோன்/ பராசரருக்கு/ இனியவனே/

நர/ வர/ வேஷ/ ஸுகே3ய/ தாரக/ நாம-தே4ய/
மனித/ உயர்/ வேடத்தோனே/ சிறக்க பாடல் பெற்றோனே/ தாரக/ நாமத்தோனே/

ஸ்வர/ ஜித/ க4ன/ ரவ/ பர/-ஈஸ1/ ஸ1த/ பா4ஸ்கர/ ஸங்காஸ1/
குரலில்/ மிக்கோனே/ கார்முகில்/ இடியினை/ மேலான/ தெய்வமே/ நூறு/ பரிதிகள்/ (நிகர்) ஒளியோனே/

பரிபாலித/ த்யாக3ராஜ/ பாஹி/ ப4க்த/ ஸமாஜ/ (ரகு4)
பேணுவோனே/ தியாகராசனை/ காப்பாய்/ தொண்டர்/ சமூகத்துறைவோனே/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
3 - நர வர வேஷ ஸுகே3ய தாரக நாம-தே4 - நர வர வேஷ தாரக நாம-தே4ய.

Top

மேற்கோள்கள்

விளக்கம்
1 - பரிபூர்ணாவதார - கிருஷ்ணாவதாரத்தைத்தான் பொதுவாக 'பூரணாவதாரம்' என்பர். ஆனால், தியாகராஜர், ராமாவதாரத்தினை 'பூரணாவதாரம்' என்கின்றார்.

2 - பராஸ1 - பராசரர் - பராசர முனிவர் - வியாசரின் தந்தை

பிருகு மைந்தன் - பரசுராமன்
புவியைச் சுமந்தோன் - வராக (பன்றி) அவதாரம்
வாரணம் - யானை
கிரீசன், புரமெரித்தோன் - சிவன்
பொற்குதிரையோன் - இந்திரன்
தாரக நாமம் - பிறவிக்கடலை தாண்டுவிக்கும் 'ராம' நாமம்
குரலில் இடியினை - குரல் முழக்கத்தினில்

Top


Updated on 14 May 2009

No comments: