1கி3ரிபை நெலகொன்ன ராமுனி
கு3ரி தப்பக கண்டி
அனுபல்லவி
பரிவாருலு விரி ஸுரடுலசே
நிலப3டி3 விஸருசு கொஸருசு ஸேவிம்பக3 (கி3ரி)
சரணம்
புலகாங்கிதுடை3 ஆனந்தா3ஸ்1ருவுல
நிம்புசு மாடலாட3 வலெனனி
2கலுவரிஞ்ச கனி 3பதி3 பூடலபை
காசெத3னனு த்யாக3ராஜ வினுதுனி (கி3ரி)
பொருள் - சுருக்கம்
- பரிவாரத்தினர் மலர் விசிறிகளுடன் நின்று, விசிறிக்கொண்டும், வேண்டிக்கொண்டும், சேவிக்க,
- புல்லரிப்புற்று, ஆனந்தக் கண்ணீர் பெருக்கி, உரையாட வேணுமெனப் பிதற்றக் கண்டு,
- பத்து வேளைக்குப் பின் காப்பேனெனும், தியாகராசனால் போற்றப் பெற்றோனை,
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
கி3ரி/ பை/ நெல/ கொன்ன/ ராமுனி/
மலை/ மீது/ நிலை/ பெற்ற/ இராமனை/
கு3ரி/ தப்பக/ கண்டி/
குறி/ தவறாது/ கண்டேன்/
அனுபல்லவி
பரிவாருலு/ விரி/ ஸுரடுலசே/
பரிவாரத்தினர்/ மலர்/ விசிறிகளுடன்/
நிலப3டி3/ விஸருசு/ கொஸருசு/ ஸேவிம்பக3/ (கி3ரி)
நின்று/ விசிறிக்கொண்டும்/ வேண்டிக்கொண்டும்/ சேவிக்க/ மலை மீது...
சரணம்
புலக/-அங்கிதுடை3/ ஆனந்த3/-அஸ்1ருவுல/
புல்லரிப்பு/ உற்று/ ஆனந்த/ கண்ணீர்/
நிம்புசு/ மாடலு-ஆட3/ வலெனு/-அனி/
பெருக்கி/ உரையாட/ வேணும்/ என/
கலுவரிஞ்ச/ கனி/ பதி3/ பூடல/ பை/
பிதற்ற/ கண்டு/ பத்து/ வேளைக்கு/ பின்/
காசெத3னு/-அனு/ த்யாக3ராஜ/ வினுதுனி/ (கி3ரி)
காப்பேன்/ எனும்/ தியாகராசனால்/ போற்றப் பெற்றோனை/ மலை மீது...
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
2 - கலுவரிஞ்ச - எல்லா புத்தகங்களிலும் இவ்வாறே கொடுக்கப்பட்டிருந்தாலும், 'கலவரிஞ்ச' என்பது சரியான சொல்லாகும்
Top
மேற்கோள்கள்
1 - கி3ரிபை நெலகொன்ன - மலை - இலங்கையில் வானர சேனை தங்கிய 'சுவேல' மலை - "இறக்கும் தறுவாயில், 'சுவேல மலை ராமனை' தியானித்தால், அவனுக்கு வைகுண்டம் கிடைக்குமென, கந்த புராணத்தினில் கூறப்பட்டுள்ளது. இதை அறிந்த தியாகராஜர், அந்த ராமனை தியானித்து, இந்த கீர்த்தனையைப் பாடினார்" - (சொற்பொழிவின் தமி்ழாக்கம்) 'சுவேல மலை ராமன்'
இலங்கை நகரத்தினை, 'சுவேல' மலை மீதேறி, ராமன் பார்வையிட்டான் என, வால்மீகி ராமாயணம், யுத்த காண்டம், அத்தியாயம் 38-ல் காணலாம்.
Top
விளக்கம்
3 - பதி3 பூடல - பத்து வேளை - 'பூட' என்ற சொல்லுக்கு 'நாள்' என்றோ அல்லது, 'நாளின் ஒரு பகுதி' யென்றோ பொருள் கொள்ளலாம். ஓர் பகல் - ஓர் இரவை, இரண்டு வேளைகளாகக் கொண்டால், 'பத்து வேளை' என்பது ஐந்து நாட்களைக்குறிக்கும். ஆனால், இது பத்து நாட்களாகவும் இருக்கலாம்.
சூரியனைக் குறிக்கும், 'பூட' என்ற தெலுங்கு சொல்லும், 'பூடன்' எனும் தமிழ் சொல்லும், 'பூஷ' என்ற சம்ஸ்கிருத சொல்லின் திரிபென்றும், 'பகல்' எனும் தமிழ்ச் சொல்லும் 'பகலு' எனும் தெலுங்கு சொல்லும் 'ப4க3' என்னும் சம்ஸ்கிருத சொல்லின் திரிபென்றும் கருத ஏதுவிருக்கின்றது. 'பூஷ' மற்றும் 'ப4க3' பன்னிரண்டு ஆதித்தியர்கள் பட்டியலில் சேரும்.
தியாகராஜர், தனது பூதவுடலை துறக்குமுன் இயற்றிய 'பரிதாபமு கனி' என்ற பாடலில், இப்பாடலில் இறைவனிடம் தான் பெற்ற வாக்குறுதியினை நினைவூட்டி, 'கருணை கொள்வாய்' என்று வேண்டுகின்றார்.
Top
Updated on 12 May 2009
No comments:
Post a Comment