1ஏமானதிச்சேவோ ஏமெஞ்சினாவோ
அனுபல்லவி
நா மாடலு வினவோ ராம நா தல வ்ராலேமோ (ஏ)
சரணம்
யஸ1மாயுவு ஸத்3ப4க்தியு ஏகாந்த சித்தமு
2ஸு-ஸ1ரீரமொஸங்கே3 பா4ஸுர த்யாக3ராஜ 3நுத (ஏ)
பொருள் - சுருக்கம்
இராமா! புகழ், ஆயுள், தூய பற்று, ஓர்-நோக்க சித்தம், நல்லுடலும் அருளும், சுடரொளிரும், தியாகராசனால் போற்றப் பெற்றோனே!
- என்ன ஆணையிட்டுள்ளாயோ?
- என்ன எண்ணியுள்ளாயோ?
- எனது சொல் கேளாயோ?
- எனது தலையெழுத்தென்னவோ?
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ஏமி/-ஆனதி/-இச்சேவோ/ ஏமி/-எஞ்சினாவோ/
என்ன/ ஆணை/ இட்டுள்ளாயோ/ என்ன/ எண்ணியுள்ளாயோ/
அனுபல்லவி
நா/ மாடலு/ வினவோ/ ராம/ நா/ தல/ வ்ராலு/-ஏமோ/ (ஏ)
எனது/ சொல்/ கேளாயோ/ இராமா/ எனது/ தலை/ எழுத்து/ என்னவோ/
சரணம்
யஸ1மு/-ஆயுவு/ ஸத்3/-ப4க்தியு/ ஏக/-அந்த/ சித்தமு/
புகழ்/ ஆயுள்/ தூய/ பற்று/ ஓர்/-நோக்க/ சித்தம்/
ஸு-ஸ1ரீரமு/-ஒஸங்கே3/ பா4ஸுர/ த்யாக3ராஜ/ நுத/ (ஏ)
நல்லுடலும்/ அருளும்/ சுடரொளிரும்/ தியாகராசனால்/ போற்றப் பெற்றோனே/
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - ஏமானதிச்சேவோ - ஏமானதிச்செத3வோ
2 - ஸு-ஸ1ரீரமொஸங்கே3 - ஸு-ஸ1ரீரமொஸங்கெ3டு3
3 - நுத - வினுத
Top
மேற்கோள்கள்
விளக்கம்
Updated on 11 May 2009
No comments:
Post a Comment