மனஸா ஸ்ரீ ராமுனி த3ய லேக
மாயமைன 1வித4மேமே
அனுபல்லவி
க4ன 2து3ரிதமுலகொடி3 3கட்டி நா
கார்யமுலனு செரசிதிவோ (ம)
சரணம்
பர தா3ரல பர த4னமுலகாஸ-
படி3 செடி3 திரிகி3திவோ லேக
பர ஜீவாத்முல ஹிம்ஸிஞ்சிதிவோ
வர த்யாக3ராஜ நுதுனி மரசிதிவோ (ம)
பொருள் - சுருக்கம்
மனமே!
- இராமனின் தயையில்லாது மாயமான விதமென்னடி?
- கொடிய குற்றங்களிழைக்க முனைந்து, எனது காரியங்களைச் சிதைத்தாயோ?
- பிற பெண்டிருக்கு, பிறர் பொருளுக் காசைப்பட்டு, கெட்டுத் திரிந்தாயோ யன்றி
- பிற உயிர்களைத் துன்புறுத்தினாயோ?
- உயர் தியாகராசனால் போற்றப் பெற்றோனை மறந்தாயோ?
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
மனஸா/ ஸ்ரீ ராமுனி/ த3ய/ லேக/
மனமே/ ஸ்ரீ ராமனின்/ தயை/ யில்லாது/
மாயமைன/ வித4மு/-ஏமே/
மாயமான/ விதம்/ என்னடி/
அனுபல்லவி
க4ன/ து3ரிதமுலகு/-ஒடி3 கட்டி/ நா/
கொடிய/ குற்றங்கள்/ இழைக்க முனைந்து/ எனது/
கார்யமுலனு/ செரசிதிவோ/ (ம)
காரியங்களை/ சிதைத்தாயோ/?
சரணம்
பர/ தா3ரல/ பர/ த4னமுலகு/-
பிற/ பெண்டிருக்கு/ பிறர்/ பொருளுக்கு/
ஆஸபடி3/ செடி3/ திரிகி3திவோ/ லேக/
ஆசைப்பட்டு/ கெட்டு/ திரிந்தாயோ/ யன்றி/
பர/ ஜீவாத்முல/ ஹிம்ஸிஞ்சிதிவோ/
பிற/ உயிர்களை/ துன்புறுத்தினாயோ/
வர/ த்யாக3ராஜ/ நுதுனி/ மரசிதிவோ/ (ம)
உயர்/ தியாகராசனால்/ போற்றப் பெற்றோனை/ மறந்தாயோ/
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - வித4மேமே - வித4மேமி - மனத்தினை பெண்பாலில் விளிப்பது, தியாகராஜரின் கிருதிகளில் நிறைய காணப்படும். அதன்படி பெண்பால் விளித்தலாகிய 'வித4மேமே' ஏற்கப்பட்டது.
2 - து3ரிதமுலகொடி3 கட்டி - து3ரிதமுல கோட கட்டி : சில புத்தகங்களில், இரண்டாவதாக கொடுக்கப்பட்டுள்ளதனை ஏற்று 'பாவங்களெனும் கோட்டை கட்டி' என்று பொருள் கொள்ளப்பட்டுள்ளது. தெலுங்கில், 'ஒடி3 கட்டி' என்றால் 'இழைக்க முனைந்து' என்று பொருள். இவ்விடத்தில் 'ஒடி3 கட்டி' என்று ஏற்பதுதான் பொருந்தும். அதன்படி 'து3ரிதமுலகொடி3 கட்டி' ஏற்கப்பட்டது. 'து3ரிதமுல கோட கட்டி' என்பது, பொருள் தெரியாததனால் திணிக்கப்பட்டதாகக் கருதப்படுகின்றது.
3 - கட்டி நா - கட்டின நா : இவ்விடத்தில் 'கட்டி நா' என்பதுதான் பொருந்தும்.
Top
மேற்கோள்கள்
விளக்கம்
பிற பெண்டிருக்கு - பிறன் மனைக்கு என்றும் கொள்ளலாம்
உயர் - இறைவனைக் குறிக்கும்
Top
Updated on 02 Apr 2009
No comments:
Post a Comment