Friday, April 3, 2009

தியாகராஜ கிருதி - ஆட3 மோடி3 - ராகம் சாருகேஸி1 - Aada Modi - Charukesi Raga

பல்லவி
ஆட3 மோடி3 13லதே3 ராமய்ய மாட(லாட3)

அனுபல்லவி
தோடு3 நீட3 நீவேயனுசுனு ப4க்தி
கூடி3ன பாத3மு பட்டின நாதோ மாட(லாட3)

சரணம்
சது3வுலன்னி தெலிஸி 21ங்கராம்ஸு1டை3
ஸத3யுடா3ஸு13 ஸம்ப4வுடு3 ம்ரொக்க
கத3லு 3தம்முனி பல்க ஜேஸிதிவி கா3கனு
4த்யாக3ராஜு ஆடி3 மாட(லாட3)


பொருள் - சுருக்கம்
இராமய்யா! கருணையுடையோனே!

  • சொல் பகரப் பிணங்கலாகுமா?

  • தொடர் நிழல் நீயேயென, பத்தியுடன் கூடிய, (உனது) திருவடியைப் பற்றிய, என்னுடன் சொல் பகரப் பிணங்கலாகுமா?

  • கல்வியனைத்தும் கற்று, சங்கரனுடைய இயல்பினனாக வாயுவுக்குப் பிறந்தவன் வணங்க, விவரங்கள் தம்பியைப் பகரச் செய்தாயன்றோ?

  • (எனவே,) தியாகராசன் பகர்ந்தாலும் சொல் பகரப் பிணங்கலாகுமா?



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ஆட3/ மோடி33லதே3/ ராமய்ய/ மாடலு/-(ஆட3)
பகர/ பிணங்கலாகுமா/ இராமய்யா/ சொல்/ பகர...


அனுபல்லவி
தோடு3/ நீட3/ நீவே/-அனுசுனு/ ப4க்தி/
தொடர்/ நிழல்/ நீயே/ யென/ பத்தியுடன்/

கூடி3ன/ பாத3மு/ பட்டின/ நாதோ/ மாடலு/-(ஆட3)
கூடிய/ (உனது) திருவடியை/ பற்றிய/ என்னுடன்/சொல்/ பகர...


சரணம்
சது3வுலு/-அன்னி/ தெலிஸி/ ஸ1ங்கர/-அம்ஸு1டை3/
கல்வி/ யனைத்தும்/ கற்று/ சங்கரனுடைய/ இயல்பினனாக/

ஸத3யுட3/-ஆஸு13/ ஸம்ப4வுடு3/ ம்ரொக்க/
கருணையுடையோனே/ வாயுவுக்கு/ பிறந்தவன்/ வணங்க/

கத3லு/ தம்முனி/ பல்க/ ஜேஸிதிவி/ கா3கனு/
விவரங்கள்(கதைகள்)/ தம்பியை/ பகர/ செய்தாய்/ அன்றோ?

த்யாக3ராஜு/ ஆடி3ன/ மாடலு/-(ஆட3)
(எனவே,) தியாகராசன்/ பகர்ந்தாலும்/ சொல்/ பகர...


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - 3லதே3 - க3லதா3
Top

மேற்கோள்கள்
2 - 1ங்கராம்ஸு1டை3 - அனுமன் சிவனுடைய இயல்பினனாகத் தோன்றினான். இதுகுறித்து அனுமனின் கதையினை நோக்கவும்.

3 - தம்முனி பல்க ஜேஸிதிவி - அனுமனை முதல்முறையாக ராமனும் இலக்குவனும் சந்தித்தபோது, ராமன், அனுமனை நேரிடையாகப் புகழாமல், இலக்குவனிடம் பகர்ந்தான். இலக்குவனையே அனுமனின் கேள்விக்கு விடையளிக்கவும் பகர்ந்தான். வால்மீகி ராமாயணம், கிஷ்கிந்தா காண்டம், அத்தியாயம் 3- நோக்கவும்.
Top

விளக்கம்
4 த்யாக3ராஜு ஆடி3 - சரணத்தில் கூறிய உதாரணத்தினை நோக்குகையில், தியாகராஜர் ராமனிடமிருந்து நேரிடையான பதில் கிடைக்காவிட்டாலும் மறைமுகமாவது பகரலாமல்லவா என்று கேட்பது போல் தோன்றுகின்றது.

வாயுவுக்குப் பிறந்தவன் - அனுமன்
விவரங்கள் - அனுமனின் கேள்விகளுக்கு பதில்
Top


Updated on 03 Apr 2009

No comments: