ஏமனி பொக3டு3து3ரா ஸ்ரீ ராம நி(ன்னேமனி)
அனுபல்லவி
ஸ்ரீமந்-நபோ4-மணி வம்ஸ1 லலாம
பு4வன வாஸி மா ராம நி(ன்னேமனி)
சரணம்
1ஸி1வுனிகி தாமஸ கு3ணமிச்சி கமல
ப4வுனிகி ராஜஸ கு3ணமொஸகி3 ஸ1சீ
த4வுனி க3ர்வ ஹ்ரு2த3யுனிகா3 ஜேஸின
தா3ஸ1ரதீ2 த்யாக3ராஜ வினுத நி(ன்னேமனி)
பொருள் - சுருக்கம்
ஸ்ரீ ராமா! உயர் பகலவன் குலத்திலகமே! புவி வாசியாகிய எமது இராமா! தசரதன் மைந்தா! தியாகராசனால் போற்றப் பெற்றோனே!
- உன்னை என்னவென்று புகழ்வேனய்யா?
- சிவனுக்குத் தாமத குணத்தினை (அழித்தல்) அளித்து,
- மலரோனுக்கு இராசத குணம் (படைத்தல்) வழங்கி,
- சசி மணாளனைச் செருக்குடை இதயத்தோனாக்கினாய்.
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ஏமனி/ பொக3டு3து3ரா/ ஸ்ரீ ராம/ நின்னு/-(ஏமனி)
என்னவென்று/ புகழ்வேனய்யா/ ஸ்ரீ ராமா/ உன்னை/
அனுபல்லவி
ஸ்ரீமத்/-நபோ4/-மணி/ வம்ஸ1/ லலாம/
உயர்/ விண்/ மணி் (பகலவன்)/ குல/ திலகமே/
பு4வன/ வாஸி/ மா/ ராம/ நின்னு/-(ஏமனி)
புவி/ வாசியாகிய/ எமது/ இராமா/ உன்னை/ என்னவென்று...
சரணம்
ஸி1வுனிகி/ தாமஸ/ கு3ணமு/-இச்சி/
சிவனுக்கு/ தாமத/ குணத்தினை (அழித்தல்)/ அளித்து/
கமல ப4வுனிகி/ ராஜஸ/ கு3ணமு/-ஒஸகி3/ ஸ1சீ/
மலரோனுக்கு/ இராசத/ குணம் (படைத்தல்)/ வழங்கி/ சசி/
த4வுனி/ க3ர்வ/ ஹ்ரு2த3யுனிகா3/ ஜேஸின/
மணாளனை/ செருக்குடை/ இதயத்தோனாக/ ஆக்கிய
தா3ஸ1ரதீ2/ த்யாக3ராஜ/ வினுத/ நின்னு/-(ஏமனி)
தசரதன் மைந்தா/ தியாகராசனால்/ போற்றப் பெற்ற/ உன்னை/ என்னவென்று...
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
மேற்கோள்கள்
விளக்கம்
1 - ஸி1வுனிகி தாமஸ கு3ணமிச்சி - சிவனுக்குத் தாமத குணத்தினை அளித்து - இராசத குணம் படைத்தலையும், சத்துவ குணம் காத்தலையும், தாமத குணம் அழித்தலையும் குறிக்கும். அதன்படி, ராமன் - விஷ்ணுவாகிய தன்னிடம் காத்தலெனும் தொழிலை நிறுத்திக் கொண்டதாகப் பொருளாகும்.
சசி மணாளன் - இந்திரன்
Top
Updated on 01 Apr 2009
No comments:
Post a Comment