Saturday, April 4, 2009

தியாகராஜ கிருதி - மேனு ஜூசி - ராகம் ஸரஸாங்கி3 - Menu Joochi - Raga Sarasaangi

பல்லவி
மேனு ஜூசி மோஸ போகவே மனஸா
லோனி 1ஜாட3லீலாகு3 காதா3

அனுபல்லவி
ஹீனமைன மல மூத்ர ரக்தமுல-
கிரவஞ்சு மாயா-மயமைன சான (மேனு)

சரணம்
2கனுலனேடியம்ப-கோல சேத கு3ச்சி
2சனுலனேடி கி3ருல ஸி1ரமுனுஞ்சி
பனுலு சேதுரட த்யாக3ராஜ நுதுனி
பா33 நீவு ப4ஜன சேஸுகொம்மி ஸ்த்ரீல (மேனு)


பொருள் - சுருக்கம்
  • மேனியைக் கண்டு மோசம் போகாதே; உட்குறிப்புக்கள் இவ்விதமன்றோ?

  • ஈனமான மலம், மூத்திரம், குருதிகளுக்கு, உறுதியான கரையிட்ட, மாயை மயமான பெண்டிர் மேனியைக் கண்டு மோசம் போகாதே

    • கண்களெனும் அம்பினால் துளைத்து, மார்பகங்களெனும் குன்றுகளில் தலைவைத்து, பணிகள் செய்வராம்;

    • தியாகராசனால் போற்றப் பெற்றோனை நன்கு நீ வழிபாடு செய்வாயே;

    • மடந்தையர் மேனியைக் கண்டு மோசம் போகாதே, மனமே!



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
மேனு/ ஜூசி/ மோஸ/ போகவே/ மனஸா/
மேனியை/ கண்டு/ மோசம்/ போகாதே/ மனமே/

லோனி/ ஜாட3லு/-ஈலாகு3/ காதா3/
உள்/ குறிப்புக்கள்/ இவ்விதம்/ அன்றோ/


அனுபல்லவி
ஹீனமைன/ மல/ மூத்ர/ ரக்தமுலகு/-
ஈனமான/ மலம்/ மூத்திரம்/ குருதிகளுக்கு/

இரவு/-அஞ்சு/ மாயா/-மயமைன/ சான/ (மேனு)
உறுதியான/ கரையிட்ட/ மாயை/ மயமான/ பெண்டிர்/ மேனியை...


சரணம்
கனுலு/-அனேடி/-அம்ப-கோல சேத/ கு3ச்சி/
கண்கள்/ எனும்/ அம்பினால்/ துளைத்து/

சனுலு/-அனேடி/ கி3ருல/ ஸி1ரமுனு/-உஞ்சி/
மார்பகங்கள்/ எனும்/ குன்றுகளில்/ தலை/ வைத்து/

பனுலு/ சேதுரட/ த்யாக3ராஜ/ நுதுனி/
பணிகள்/ செய்வராம்/ தியாகராசனால்/ போற்றப் பெற்றோனை/

பா33/ நீவு/ ப4ஜன/ சேஸுகொம்மி/ ஸ்த்ரீல/ (மேனு)
நன்கு/ நீ/ வழிபாடு/ செய்வாயே/ மடந்தையர்/ மேனியை...


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
2 - கனுலனேடி - கனுலனெடி3 : இரண்டு சொற்களுமே சரியாகும்.

2 - சனுலனேடி - சனுலனெடி3 : இரண்டு சொற்களுமே சரியாகும்.

Top

மேற்கோள்கள்

விளக்கம்
1 ஜாட3லீலாகு3 - உட்குறிப்புகள் இவ்விதம் - அனுபல்லவியில் விவரிக்கப்பட்டவை.

இப்பாடல் 'ஸரஸாங்கி்' என்ற ராகத்தில் இயற்றப்பெற்றுள்ளது. 'ஸரஸாங்கி' என்றால் 'இனிய அங்கங்களையுடையவள்' என்று பொருள். தியாகராஜர், தன் அறிவுரையை வழங்குதற்காக, இந்த ராகத்தினை வேண்டுமென்றே தேர்ந்தெடுத்தாரா என்று கேட்கத்தோன்றுகின்றது.

Top


Updated on 04 Apr 2009

No comments: