Sunday, April 5, 2009

தியாகராஜ கிருதி - நீ முத்3து3 மோமு - ராகம் கமலா மனோஹரி - Nee Muddu Momu - Raga Kamalaa Manohari

பல்லவி
நீ முத்3து3 மோமு ஜூபவே

அனுபல்லவி
நா மீத3 நெனருஞ்சி
நளின த3ள நயன (நீ)

சரணம்
சரணம் 1
உரமுன நின்னுஞ்சுகொனே கானி
உரக31யன நாது3ல்லமு ரஞ்ஜில்ல (நீ)


சரணம் 2
புலகரிஞ்ச நினு பூஜ ஸேது கானி
கலனைன மருவ சுக்கல ராயனி போலு (நீ)


சரணம் 3
மருலு கொன்னானு மத3ன ஜனக
4ர ஸுதா ரமண ஸ்ரீ த்யாக3ராஜுனிகி (நீ)


பொருள் - சுருக்கம்
தாமரையிதழ்க் கண்ணா! அரவணைத் துயில்வோனே! காமனையீன்றோனே! புவி மகள் கேள்வா!
  • என் மீது கனிவு கொண்டு, மதி நிகர் உனதெழில் முகத்தினைக் காண்பிப்பாய்!

  • உரத்திலுன்னை இருத்திக் கொண்டாலன்றி எனதுள்ளம் மகிழாது;

  • (மெய்ப்) புல்லரிக்க உன்னை வழிபடுவேன்; அன்றியும், கனவிலும் மறவேன்;

  • (உன்மீது) காதல் கொண்டேன்;

  • தியாகராசனுக்கு உனதெழில் முகத்தினைக் காண்பிப்பாய்!



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
நீ/ முத்3து3/ மோமு/ ஜூபவே/
உனது/ எழில்/ முகத்தினை/ காண்பிப்பாய்/


அனுபல்லவி
நா/ மீத3/ நெனரு/-உஞ்சி/ நளின/ த3ள/ நயன/ (நீ)
என்/ மீது/ கனிவு/ கொண்டு/ தாமரை/ இதழ்/ கண்ணா/ உனது...


சரணம்
சரணம் 1
உரமுன/ நின்னு/-உஞ்சுகொனே/ கானி/
உரத்தில்/ உன்னை/ இருத்திக் கொண்டால்/ அன்றி/

உரக3/ ஸ1யன/ நாது3/-உல்லமு/ ரஞ்ஜில்ல/ (நீ)
அரவணை/ துயில்வோனே/ எனது/ உள்ளம்/ மகிழாது/ உனது...


சரணம் 2
புலகரிஞ்ச/ நினு/ பூஜ ஸேது/ கானி/
(மெய்ப்) புல்லரிக்க/ உன்னை/ வழிபடுவேன்/ அன்றியும்/

கலனைன/ மருவ/ சுக்கல/ ராயனி/ போலு/ (நீ)
கனவிலும்/ மறவேன்/ விண்மீன்களின் /மன்னன் (மதி)/ நிகர்/ உனது...


சரணம் 3
மருலு/ கொன்னானு/ மத3ன/ ஜனக/
(உன்மீது) காதல்/ கொண்டேன்/ காமனை/ யீன்றோனே/

4ர/ ஸுதா/ ரமண/ ஸ்ரீ த்யாக3ராஜுனிகி/ (நீ)
புவி/ மகள்/ கேள்வா/ தியாகராசனுக்கு/ உனது...


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)

மேற்கோள்கள்

விளக்கம்
உரம் - மார்பு - உள்ளம்
புவி மகள் - சீதை

Top


Updated on 05 Apr 2009

No comments: