Wednesday, April 29, 2009

தியாகராஜ கிருதி - ஸ1ர ஸ1ர ஸமரைக - ராகம் குந்தள வராளி - Sara Sara Samaraika - Raga Kuntala Varaali

பல்லவி
11ர ஸ1 ஸமரைக ஸூ1
21ரதி4 மத3 விதா3

அனுபல்லவி
ஸுர ரிபு மூல ப3லமனு தூல
கி3ருலகனல ஸமமௌ ஸ்ரீ ராம (ஸ1ர)

சரணம்
தொலி ஜேஸின பாப வன குடா2ரமா
3கலனைனனு ஸேயக3 லேனி
3லு விலுனு விரிசி வெலஸின ஸ்ரீ ரகு4
குல வர ப்3ரோவுமு த்யாக3ராஜ நுத (ஸ1ர)


பொருள் - சுருக்கம்
  • புல்லையும் அம்பாயுடையோனே! களத்தில் தனி சூரனே! கடலின் செருக்கினை அடக்கியோனே!

  • வானோர் பகைவனின் மூல பலமெனும் பஞ்சு மலைகளுக்கு நெருப்பு நிகர் இராமா!

  • முன்செய்த பாவங்களெனும் வனத்தையழிக்கும் கோடரியே! கனவிலும் செய்ய வியலாத, பெரு வில்லினை முறித்துத் திகழ்ந்த இரகு குல வரனே! தியாகராசனால் போற்றப் பெற்றோனே!

    • காப்பாய்.



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
1ர/ ஸ1ர/ ஸமர/-ஏக/ ஸூ1ர/
புல்லையும்/ அம்பாயுடையோனே/ களத்தில்/ தனி/ சூரனே/

1ரதி4/ மத3/ விதா3ர/
கடலின்/ செருக்கினை/ அடக்கியோனே/


அனுபல்லவி
ஸுர/ ரிபு/ மூல/ ப3லமு/-அனு/ தூல/
வானோர்/ பகைவனின்/ மூல/ பலம்/ எனும்/ பஞ்சு/

கி3ருலகு/-அனல/ ஸமமௌ/ ஸ்ரீ ராம/ (ஸ1ர)
மலைகளுக்கு/ நெருப்பு/ நிகர்/ ஸ்ரீ ராமா/


சரணம்
தொலி/ ஜேஸின/ பாப/ வன/ குடா2ரமா/
முன்/ செய்த/ பாவங்களெனும்/ வனத்தை(யழிக்கும்)/ கோடரியே/

கலனு-ஐனனு/ ஸேயக3/ லேனி/
கனவிலும்/ செய்ய/ இயலாத/

3லு/ விலுனு/ விரிசி/ வெலஸின/ ஸ்ரீ ரகு4/
பெரு/ வில்லினை/ முறித்து/ திகழ்ந்த/ ஸ்ரீ ரகு/

குல/ வர/ ப்3ரோவுமு/ த்யாக3ராஜ/ நுத/ (ஸ1ர)
குல/ வரனே/ காப்பாய்/ தியாகராசனால்/ போற்றப் பெற்றோனே/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
3 - கலனைனனு - கலனைன

Top

மேற்கோள்கள்
1 - 1ர ஸ1 - புல்லம்பு - காகாசுரனை வதைக்க இராமன் ஒரு புல் அம்பு எய்தனன். வால்மீகி ராமாயணம், சுந்தர காண்டம், அத்தியாயம் 38 நோக்கவும்

Top

விளக்கம்
2 - 1ரதி4 - இச்சொல்லுக்கு 'அம்புறைத்தூணி' என்றும் 'கடல்' என்றும் பொருள். தியாகராஜர் 'நிரவதி3 ஸுக23' என்ற கீர்த்தனையிலும் 'ஸ1ரதி4' என்ற சொல்லினை, 'கடல்' என்ற பொருளில் பயன்படுத்துகின்றார்.

வானோர் பகைவன் - இராவணன்
வரன் - மணமகன்

Top


Updated on 30 Apr 2009

No comments: