செந்தனே ஸதா3யுஞ்சுகோவய்ய
அனுபல்லவி
மந்துகெக்கு ஸ்ரீமந்துடௌ3
ஹனுமந்து ரீதிகா3 ஸ்ரீ காந்த (செந்தனே)
சரணம்
தலசின பனுலனு நே தெலிஸி
1தலதோ நட3சி ஸந்தஸில்லுது3ரா
பலுமாரு பல்க 2பனி லேது3ரா ராம
ப4ரதுனி வலெ த்யாக3ராஜ நுத (செந்தனே)
பொருள் - சுருக்கம்
மா மணாளா! ராமா! தியாகராசனால் போற்றப் பெற்றோனே!
- அருகிலேயே (என்னை) எவ்வமயமும் வைத்துக்கொள்ளுமைய்யா!
- மாட்சிமையில் மிக்கு மேன்மையான அனுமனைப் போன்று, அருகிலேயே (என்னை) எவ்வமயமும் வைத்துக்கொள்ளுமைய்யா!
- (நீ) எண்ணிய பணிகளை நானறிந்து, தலையால் நடந்து, களிப்பேனய்யா;
- பன்முறை பகரத் தேவையில்லையைய்யா;
- பரதனைப் போன்று அருகிலேயே (என்னை) எவ்வமயமும் வைத்துக்கொள்ளுமைய்யா!
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
செந்தனே/ ஸதா3/-உஞ்சுகோ/-அய்ய/
அருகிலேயே/ (என்னை) எவ்வமயமும்/ வைத்துக்கொள்ளும்/ ஐயா/
அனுபல்லவி
மந்துகு/-எக்கு/ ஸ்ரீமந்துடௌ3/
மாட்சிமையில்/ மிக்கு/ மேன்மையான/
ஹனுமந்து/ ரீதிகா3/ ஸ்ரீ/ காந்த/ (செந்தனே)
அனுமனை/ போன்று/ மா/ மணாளா/ அருகிலேயே...
சரணம்
தலசின/ பனுலனு/ நே/ தெலிஸி/
(நீ) எண்ணிய/ பணிகளை/ நான்/ அறிந்து/
தலதோ/ நட3சி/ ஸந்தஸில்லுது3ரா/
தலையால்/ நடந்து/ களிப்பேனய்யா/
பலுமாரு/ பல்க/ பனி/ லேது3ரா/ ராம/
பன்முறை/ பகர/ தேவை/ இல்லையைய்யா/ ராமா/
ப4ரதுனி/ வலெ/ த்யாக3ராஜ/ நுத/ (செந்தனே)
பரதனை/ போன்று/ தியாகராசனால்/ போற்றப் பெற்றோனே/ அருகிலேயே...
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
2 - பனி லேது3ரா ராம - பனி லேது3ரா - பனி லேது3 ராம
Top
மேற்கோள்கள்
விளக்கம்
1 - தலதோ நட3சி - தலையால் நடந்து - முழுமனதுடனும் பணிவுடனும் இயற்றுதல்
காரைக்காலம்மையார் கைலாயம் செல்கையில், காலால் அங்கு நடக்கக் கூடாதென தலையால் நடந்து சென்றாராம். 12-வது திரமுறை - 24 - காரைக்காலம்மையார் புராணம், செய்யுள் 55 நோக்கவும்.
Top
Updated on 29 Apr 2009
No comments:
Post a Comment