Monday, March 9, 2009

தியாகராஜ கிருதி - தொலி நே ஜேஸின - ராகம் ஸு1த்3த4 ப3ங்கா3ள - Toli Ne Jesina - Raga Suddha Bangaala

பல்லவி
தொலி நே ஜேஸின பூஜா ப2லமு
தெலிஸெனு நா பாலி தை3வமா

அனுபல்லவி
பலு வித4முல நே தலசி கரக3கா3
பலுகக3 1நீவடு நேனிடு 2காக3 (தொ)

சரணம்
ஸரி வாரலலோ சௌக ஜேஸி
உத3ர போஷகுலனு பொருகு3ன ஜேஸி
ஹரி தா3ஸ ரஹித புரமுன வேஸி
3ரி சூபகுண்ட33 த்யாக3ராஜார்சித (தொ)


பொருள் - சுருக்கம்
என்பங்கிற் தெய்வமே! தியாகராசனால் போற்றப் பெற்றோனே!
  • தொன்று நான் செய்த வழிபாட்டின் பயன் தெரிந்தது,

  • பல விதமாக, நான் நினைத்து உருகியிருக்க, பகராது, நீயங்கும் நானிங்குமாவதற்கு, தொன்று நான் செய்த வழிபாட்டின் பயன் தெரிந்தது;

    • சரி சமமானோரில் துச்சப்படுத்தி,

    • வயிறு வளர்ப்போரை அண்டையராக்கி,

    • அரியின் தொண்டரற்ற ஊரில் (என்னை) எறிந்து,

    • புகலிடம் காட்டாதிருக்க,

  • தொன்று நான் செய்த வழிபாட்டின் பயன் தெரிந்தது.



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
தொலி/ நே/ ஜேஸின/ பூஜா/ ப2லமு/
தொன்று/ நான்/ செய்த/ வழிபாட்டின்/ பயன்/

தெலிஸெனு/ நா/ பாலி/ தை3வமா/
தெரிந்தது/ என்/ பங்கிற்/ தெய்வமே/


அனுபல்லவி
பலு/ வித4முல/ நே/ தலசி/ கரக3கா3/
பல/ விதமாக/ நான்/ நினைத்து/ உருகியிருக்க/

பலுகக3/ நீவு/-அடு/ நேனு/-இடு/ காக3/ (தொ)
பகராது/ நீ/ அங்கும்/ நான்/ இங்கும்/ ஆவதற்கு/ தொன்று...


சரணம்
ஸரி வாரலலோ/ சௌக ஜேஸி/
சரி சமமானோரில்/ துச்சப்படுத்தி/

உத3ர/ போஷகுலனு/ பொருகு3ன/ ஜேஸி/
வயிறு/ வளர்ப்போரை/ அண்டையர்/ ஆக்கி/

ஹரி/ தா3ஸ/ ரஹித/ புரமுன/ வேஸி/
அரியின்/ தொண்டர்/ அற்ற/ ஊரில்/ (என்னை) எறிந்து/

3ரி/ சூபக/-உண்ட33/ த்யாக3ராஜ/-அர்சித/ (தொ)
புகலிடம்/ காட்டாது/ இருக்க/ தியாகராசனால்/ போற்றப் பெற்றோனே/ தொன்று...


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
2 - காக3 - கா3க : 'காக3' இவ்விடத்தில் பொருந்தும்

மேற்கோள்கள்

விளக்கம்
1 - நீவடு நேனிடு - இறைவன், தன்னிடமிருந்து, முகத்தினை வேறுபக்கம் திருப்பிக்கொண்டான், என்று கூறுகின்றார்.

வயிறு வளர்ப்போர் - உலகியலோர்

Top


Updated on 09 Mar 2009

2 comments:

Govindaswamy said...

திரு கோவிந்தன் அவர்களே
நீவடு நேனிடு காக என்பதற்கு ’நீயங்கும் நானிங்குமாவதற்கு’  என்று பொருள் கொடுத்துள்ளீர்.  நீயங்கும் நானிங்குமாக/ நானிங்குமாகியிருக்க அல்லது நானிங்குமாகிவிட என்பது பொருத்தமாய் இருக்கும் என்று எண்ணுகிறேன்.
வணக்கம்
கோவிந்தசாமி

V Govindan said...

திரு கோவிந்தசாமி அவர்களுக்கு,

இந்த சொற்களின் கருத்தினை விளக்கத்தில் கொடுத்துள்ளேன்.

வணக்கம்
கோவிந்தன்