சிந்திஸ்துன்னாடே3 யமுடு3
அனுபல்லவி
ஸந்ததமு ஸுஜனுலெல்ல ஸத்3ப4ஜன ஜேயுட ஜூசி (சி)
சரணம்
சரணம் 1
ஸூ1ல பாஸ1 1த்4ரு2த ப4ட ஜாலமுல ஜூசி மரி மீ
2கோலாஹலமுலுடு3கு3 3காலமாயெனனுசு (சி)
சரணம் 2
4வாரிதி4 ஸோ1ஷிம்ப ஜேயு க்ரூர கும்ப4ஜுனி ரீதி
கோ4ர நரகாது3லணசு 5தாரக நாமமுனு தலசி (சி)
சரணம் 3
தா3ரி தெலிய லேக திருகு3வாரலைன சாலுனண்டே
6ஸாரமனி த்யாக3ராஜு ஸங்கீர்தனமு பாடே3ரனுசு (சி)
பொருள் - சுருக்கம்
கவலைப்படுகின்றானே எமன்!
- எவ்வமயமும், நல்லோர் யாவரும், உயர் பஜனை செய்தல் கண்டு, கவலைப்படுகின்றானே எமன்!
- சூலம், பாசக் கயிறேந்தும் படையினரை நோக்கி, 'இனியுங்கள் கூச்சலெல்லாம் அடங்கும் நேரம் வந்துவிட்டது' என கவலைப்படுகின்றானே எமன்!
- கடலை வற்றச் செய்யும் கடும் கும்பமுனி போன்று, கொடிய நரகங்களினை அடக்கும் தாரக நாமத்தினை நினைத்து, கவலைப்படுகின்றானே எமன்!
- வழியறியாது திரிவோராகிலும் போதுமென்றால், (அவரும்) சாரமென தியாகராசனின் சங்கீர்த்தனங்களைப் பாடுகின்றனரென, கவலைப்படுகின்றானே எமன்!
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
சிந்திஸ்துன்னாடே3/ யமுடு3/
கவலைப்படுகின்றானே/ எமன்/
அனுபல்லவி
ஸந்ததமு/ ஸுஜனுலு/-எல்ல/ ஸத்3-ப4ஜன/ ஜேயுட/ ஜூசி/ (சி)
எவ்வமயமும்/ நல்லோர்/ யாவரும்/ உயர் பஜனை/ செய்தல்/ கண்டு/ கவலை...
சரணம்
சரணம் 1
ஸூ1ல/ பாஸ1/ த்4ரு2த/ ப4ட ஜாலமுல/ ஜூசி/ மரி/ மீ/
சூலம்/ பாசக் கயிறு/ ஏந்தும்/ படையினரை/ நோக்கி/ 'இனி/ உங்கள்/
கோலாஹலமுலு/-உடு3கு3/ காலமு/-ஆயெனு/-அனுசு/ (சி)
கூச்சலெல்லாம்/ அடங்கும்/ நேரம்/ வந்துவிட்டது'/ என/ கவலை...
சரணம் 2
வாரிதி4/ ஸோ1ஷிம்ப/ ஜேயு/ க்ரூர/ கும்ப4ஜுனி/ ரீதி/
கடலை/ வற்ற/ செய்யும்/ கடும்/ கும்பமுனி/ போன்று/
கோ4ர/ நரக-ஆது3ல/-அணசு/ தாரக/ நாமமுனு/ தலசி/ (சி)
கொடிய/ நரகங்களினை/ அடக்கும்/ தாரக/ நாமத்தினை/ நினைத்து/ கவலை...
சரணம் 3
தா3ரி/ தெலிய லேக/ திருகு3வாரலு-ஐன/ சாலுனு/-அண்டே/
வழி/ அறியாது/ திரிவோராகிலும்/ போதும்/ என்றால்/ (அவரும்)
ஸாரமு/-அனி/ த்யாக3ராஜு/ ஸங்கீர்தனமு/ பாடே3ரு/-அனுசு/ (சி)
சாரம்/ என/ தியாகராஜனின்/ சங்கீர்த்தனங்களை/ பாடுகின்றனர்/ என/ கவலை...
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - த்4ரு2த - த4ர
2 - கோலாஹலமுலுடு3கு3 - கோலாஹலமுலுடி3கே3
3 - காலமாயெனனுசு - காலமாயெனேயனுசு
Top
மேற்கோள்கள்
4 - வாரிதி4 ஸோ1ஷிம்ப - அகத்திய முனி கடலைக் குடித்த நிகழ்ச்சி, மகாபாரதம், 3-வது புத்தகம், வன பர்வம், 104 மற்றும் 105-வது பகுதிகளில் (sections) கூறப்பட்டுள்ளது. மகாபாரதம் உரை
5 - தாரக நாமமுனு - 'ராம' எனும் நாமம் பிரணவத்திற்கு (ஓம்) ஈடான, பிறவிக்கடலை தாண்டுவிக்கும் படகு (தாரகம்) என கருதப்படும். காஞ்சி மாமுனிவரி்ன் விளக்கம்
Top
விளக்கம்
6 - ஸாரமனி - தன்னுடை கீர்த்தனைகள் 'ராம' நாமத்தின் (தாரகம்) சாரமென தியாகராஜர் கூறுகின்றார்.
கும்பமுனி - அகத்தியர்
வழியறியாது - உய்யும் வழி
போதுமென்றால் - நமன் கொண்டு செல்ல
Top
Updated on 02 Mar 2009
No comments:
Post a Comment