தலசினந்தனே நா தனுவேமோ 1ஜ2ல்லனெரா
அனுபல்லவி
ஜலஜ வைரி த4ராதி3 விதீ4ந்த்3ருல
செலிமி பூஜலந்தி3ன நினு நே (தல)
சரணம்
சரணம் 1
2ரோடிகி கட்ட தகி3ன நீ லீலலு
மூடிகெக்குவைன நீது3 கு3ணமுலு
கோடி மத3ன 3லாவண்யமுலைன
ஸாடி கானி நீ தி3வ்ய ரூபமுனு (தல)
சரணம் 2
4நித்3ராலஸ்ய ரஹித ஸ்ரீ ராம
ப4த்3ரானிலஜ ஸுலப4 ஸம்ஸாரச்-
சி2த்3ரார்தினி தீர்சு ஸ1க்தினி விதி4
5ருத்3ராது3ல நுதமௌ சரிதம்பு3னு (தல)
சரணம் 3
6பாத3 விஜித முனி தருணீ ஸா1ப
மோத3 த்யாக3ராஜ வினுத 7த4ரா-ப
8நாத3 ப்3ரஹ்மானந்த3 ரூப
9வேத3 ஸாரமௌ நாமதே4யமுனு (தல)
பொருள் - சுருக்கம்
உறக்கம், களைப்பற்ற இராமா! உயர் வாயு மைந்தனுக்கெளியோனே! திருவடியினால் அகலியை சாபத்தினைக் களைந்தோனே! களிக்கும் தியாகராசனால் போற்றப் பெற்றோனே! புவியாள்வோனே!(அல்லது) பூதேவி மணாளா! நாதப் பேரானந்த உருவே!
- நினைத்தவுடனேயே எனது மெய்ச்சிலிர்க்குதய்யா!
- திங்களணிவோன், பிரமன், இந்திரன் முதலானோரின் நட்பும், வழிபாட்டினையும் பெற்ற உன்னை நான் நினைத்தவுடனேயே எனது மெய்ச்சிலிர்க்குதய்யா!
- உரலில் கட்டுதற்குட்பட்ட உனது திருவிளையாடல்களையும்,
- மூவரினும் மேன்மையான உனது குணங்களையும்,
- கோடி மதனர்களின் எழிலாகிலும் ஈடாகாத உனது தெய்வீக உருவத்தினையும்,
- சமுசாரத்தினால் துளைக்கப்பட்டோரின் துயர் களையும் வல்லமையையும்,
- விதி, உருத்திரன் ஆகியோரால் புகழப்பட்ட நடத்தையையும்,
- மறைகளின் சாரமான (உனது) நாமத்தினையும்
- நினைத்தவுடனேயே எனது மெய்ச்சிலிர்க்குதய்யா!
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
தலசின/-அந்தனே/ நா/ தனுவு/-ஏமோ ஜ2ல்லு-அனெரா/
நினைத்த/ உடனேயே/ எனது/ மெய்/ சிலிர்க்குதய்யா/
அனுபல்லவி
ஜலஜ வைரி/ த4ர/-ஆதி3/ விதி4/-இந்த்3ருல/
கமலப் பகை (திங்கள்)/ அணிவோன்/ முதலானோர்/ பிரமன்/ இந்திரன்/
செலிமி/ பூஜலு/-அந்தி3ன/ நினு/ நே/ (தல)
நட்பும்/ வழிபாட்டினையும்/ பெற்ற/ உன்னை/ நான்/ நினைத்தவுடனேயே...
சரணம்
சரணம் 1
ரோடிகி/ கட்ட/ தகி3ன/ நீ/ லீலலு/
உரலில்/ கட்டுதற்கு/ உட்பட்ட/ உனது/ திருவிளையாடல்களையும்/
மூடிகி/-எக்குவைன/ நீது3/ கு3ணமுலு/
மூவரினும்/ மேன்மையான/ உனது/ குணங்களையும்/
கோடி/ மத3ன/ லாவண்யமுலு-ஐன/
கோடி/ மதனர்களின்/ எழிலாகிலும்/
ஸாடி/ கானி/ நீ/ தி3வ்ய/ ரூபமுனு/ (தல)
ஈடு/ ஆகாத/ உனது/ தெய்வீக/ உருவத்தினையும்/ நினைத்தவுடனேயே...
சரணம் 2
நித்3ரா/-ஆலஸ்ய/ ரஹித/ ஸ்ரீ ராம/
உறக்கம்/ களைப்பு/ அற்ற/ ஸ்ரீ ராமா/
ப4த்3ர/-அனிலஜ/ ஸுலப4/ ஸம்ஸார/-
உயர்/ வாயு மைந்தனுக்கு/ எளியோனே/ சமுசாரத்தினால்/
சி2த்3ர/-ஆர்தினி/ தீர்சு/ ஸ1க்தினி/ விதி4/
துளைக்கப்பட்டோரின்/ துயர்/ களையும்/ வல்லமையையும்/ விதி/
ருத்3ர/-ஆது3ல/ நுதமௌ/ சரிதம்பு3னு/ (தல)
உருத்திரன்/ ஆகியோரால்/ புகழப்பட்ட/ நடத்தையையும்/ நினைத்தவுடனேயே...
சரணம் 3
பாத3/ விஜித/ முனி/ தருணீ/ ஸா1ப/
திருவடியினால்/ களைந்தோனே/ முனிவன்/ மனைவி (அகலியை)/ சாபத்தினை!
மோத3/ த்யாக3ராஜ/ வினுத/ த4ரா-ப/
களிக்கும்/ தியாகராசனால்/ போற்றப் பெற்றோனே/ புவியாள்வோனே/ (அல்லது) பூதேவி மணாளா/
நாத3/ ப்3ரஹ்ம/-ஆனந்த3/ ரூப/
நாத/ பேரானந்த/ உருவே/ (அல்லது) நாதப்பிரமமே/ ஆனந்த/ உருவே/
வேத3/ ஸாரமௌ/ நாமதே4யமுனு/ (தல)
மறைகளின்/ சாரமான/ நாமத்தினை/ நினைத்தவுடனேயே...
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - ஜ2ல்லனெரா - ஜல்லனெரா : தெலுங்கு அகராதியன்படி, 'ஜ2ல்லனெரா' சரியாகும்
3 - லாவண்யமுலைன - லாவண்யமுனைன
5 - ருத்3ராது3ல - ஸ1க்ராது3ல
Top
மேற்கோள்கள்
2 - ரோடிகி கட்ட தகி3ன - உரலில் கட்டுதற்குட்பட்ட - யசோதை கண்ணனை உரலில் கட்டிய நிகழ்ச்சி - பாகவத புராணம், 10-வது புத்தகம், 9-வது அத்தியாயம் நோக்கவும்
4 - நித்3ராலஸ்ய ரஹித - உறக்கம், களைப்பு அற்ற - விசுவாமித்திர முனிவர், ராமனுக்கும் லக்ஷ்மணனுக்கும் 'ப3லா அதிப3லா' என்ற மந்திரத்தினை போதித்து, உறக்கத்தினையும் களைப்பினையும் வெல்லச் செய்தார் - வால்மீகி ராமாயணம், பால காண்டம், அத்தியாயம் 22 நோக்குக.
6 - பாத3 விஜித முனி தருணீ ஸா1ப - கௌதம முனிவர் தமது மனைவி அகலியைக்கு அளித்த சாபத்தினை, ராமன் தனது திருவடிகளால் போக்கினான் - வால்மீகி ராமாயணம், பால காண்டம், அத்தியாயம் 49 நோக்குக.
Top
விளக்கம்
7 - த4ரா-ப - இதனை 'புவியாள்வோன்' என்றோ 'பூதேவி மணாளன்' என்றோ பொருள் கொள்ளலாம்
8 - நாத3 ப்3ரஹ்மானந்த3 ரூப - இதனை 'நாதப் பேரானந்த உருவே' என்றோ 'நாதப் பிரமமே' - 'ஆனந்த உருவே' என்றோ பொருள் கொள்ளலாம்.
9 - வேத3 ஸாரமௌ நாமதே4யமுனு - 'ராம' நாமம், பிரணவத்திற்கு ஈடான, பிறவிக்கடலைத் தாண்டுவிக்கும், படகு (தாரகம்) எனப்படும். பிரணவம், மறைகளுக்கு மூலமாகும். எனவே, தியாகராஜர் 'ராம' நாமத்தினை, மறைகளின் சாரம் என்கிறார்.
Top
திங்களணிவோன் - சிவன்
மூவர் - அரி, அரன், பிரமன்
வாயு மைந்தன் - அனுமன்
சமுசாரம் - பிறவிக் கடல்
விதி - பிரமன்
உருத்திரன் - சிவன்
Top
Updated on 03 Mar 2009
No comments:
Post a Comment