1காருபா3ரு ஸேயுவாரு
2க3லரே நீவலெ ஸாகேத நக3ரினி
அனுபல்லவி
ஊரிவாரு தே3ஸ1 ஜனுலு வர
முனுலுப்பொங்கு3சுனு பா4வுகுலய்யே (கா)
சரணம்
3நெலகு மூடு3 வானலகி2ல வித்3யல
நேர்பு கலிகி3 தீ3ர்கா4யுவு கலிகி3
சலமு க3ர்வ ரஹிதுலுகா3 லேதா3
ஸாது4 த்யாக3ராஜ வினுத ராம (கா)
பொருள் - சுருக்கம்
சாது தியாகராசனால் போற்றப் பெற்ற, இராமா!
- அரசாட்சி செய்பவர் உளரோ, உன்னைப் போன்று, சாகேத நகரத்தினை?
- ஊரார், குடிமக்கள் மற்றும் உயர் முனிவர்கள் பொங்கி மகிழ்ந்து, பேறுறும் (வண்ணம்) அரசாட்சி செய்பவர் உளரோ, உன்னைப் போன்று, சாகேத நகரத்தினை?
- மாதம் மும்மாரியும்,
- அனைத்து வித்தைகளின் தேர்ச்சியுமுண்டாகி,
- நீண்ட ஆயுளுடைத்தோராகி,
- சூதும், செருக்கும் அற்றவராகத் திகழவில்லையா?
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
காருபா3ரு/ ஸேயுவாரு/
அரசாட்சி/ செய்பவர்/
க3லரே/ நீ/ வலெ/ ஸாகேத/ நக3ரினி/
உளரோ/ உன்னை/ போன்று/ சாகேத/ நகரத்தினை/
அனுபல்லவி
ஊரிவாரு/ தே3ஸ1 ஜனுலு/ வர/
ஊரார்/ குடிமக்கள்/ உயர்/
முனுலு/-உப்பொங்கு3சுனு/ பா4வுகுலு-அய்யே/ (கா)
முனிவர்கள்/ பொங்கி மகிழ்ந்து/ பேறுறும் (வண்ணம்)/ அரசாட்சி...
சரணம்
நெலகு/ மூடு3 வானலு/-அகி2ல/ வித்3யல/
மாதம்/ மும்மாரியும்/ அனைத்து/ வித்தைகளின்/
நேர்பு/ கலிகி3/ தீ3ர்க4/-ஆயுவு/ கலிகி3/
தேர்ச்சி/ உண்டாகி/ நீண்ட/ ஆயுள்/ உடைத்தோராகி/
சலமு/ க3ர்வ/ ரஹிதுலுகா3/ லேதா3/
சூதும்/ செருக்கும்/ அற்றவராக/ திகழவில்லையா/
ஸாது4/ த்யாக3ராஜ/ வினுத/ ராம/ (கா)
சாது/ தியாகராசனால்/ போற்றப் பெற்ற/ இராமா/
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
மேற்கோள்கள்
3 - நெலகு மூடு3 வானலு - மும்மாரி - இறைவனின் நாமங்களை உரைப்பதனால் உண்டாகும் நன்மைகளை, 'ஓங்கி உலகளந்த' என்று தொடங்கும் ஆண்டாளின் திருப்பாவையை நோக்கவும்.
வால்மீகி ராமாயணம், யுத்த காண்டம், 128-வது அத்தியாயத்தில் (ராமன் முடி சூடல்) ராமனுடைய ஆட்சியில் மக்கள் எப்படி வாழ்ந்தனர் என்பது விவரிக்கப்பட்டுள்ளது. அதனை, தியாகராஜர் இந்த பாடலில் சுருக்கமாக உரைக்கின்றார்.
மும்மாரியினைக் குறித்து, 'விவேக சிந்தாமணி' என்னும் தமிழ் நூலில் கூறப்படுவது -
26. வேதமோதிய வேதியர்க் கோர்மழை
நீதிமன்னர் நெறியினுக் கோர்மழை
மாதர் கற்புடை மங்கையர்க் கோர்மழை
மாதமூன்று மழையெனப் பெய்யுமே
Top
விளக்கம்
1 - காருபா3ரு - இது 'கார்-ஓ-பா3ர்' என்ற உருது மொழிச் சொல்லின் திரிபாகும். இச்சொல்லுக்கு, 'வியாபாரம்', 'விவகாரம்', 'பணி நடத்துதல்' ஆகிய பொருட்களுண்டு; 'அரசாட்சி' என்று நேரிடையாக பொருள் இல்லை. உருது அகராதி - 'kAr-O-bAr' நோக்கவும்
2 - க3லரே - இச்சொல் 'இலரே' என்று அடித்துச் சொல்வதாகவும், 'உளரோ' என்று வியப்பதாகவும் கொள்ளலாம். ஆனால், பரம்பரையாக, இதற்கு 'உளரோ' என்ற பொருள் கொள்ளப்பட்டுள்ளது. அங்ஙனமே இங்கும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.
Top
Updated on 01 Mar 2009
No comments:
Post a Comment