Sunday, March 8, 2009

தியாகராஜ கிருதி - தப்பக3னே - ராகம் ஸு1த்3த4 ப3ங்கா3ள - Tappagane - Raga Suddha Bangaala

பல்லவி
1தப்பக3னே வச்சுனா 2தனுவுகு லம்பட நீ க்ரு2

அனுபல்லவி
மெப்புலகை 3கொப்புலு-க3 4மேடி ஜனுல ஜூசி ப4ஜன (த)

சரணம்
ரூகலகை பைகி மஞ்சி கோகலகையாஹாரமுனகு
நூகலகை 5த்4யானிஞ்சிதி த்யாக3ராஜ நுதுனி ப4ஜன (த)


பொருள் - சுருக்கம்
  • உடலுக்கு ஆசையினை விடாமலே, வருமோ உனது கிருபை?

  • பெயருக்கென, கொப்புகளுடை மேன்மக்களைக் கண்டு (செய்யப்படும்), வழிபாட்டினை விடாமலே, வருமோ உனது கிருபை?

  • பணத்திற்கென, அணிய சிறந்த ஆடைகளுக்கென, ஊணுக்கு நொய்க்கென தியானித்தேன்;

  • தியாகராசனால் போற்றப் பெற்றோனின் வழிபாட்டினை விட்டாலே, வருமோ (உனது) கிருபை?



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
தப்பக3னே/ வச்சுனா/ தனுவுகு/ லம்பட/ நீ/ க்ரு2ப/
விடாமலே/ வருமோ/ உடலுக்கு/ ஆசையினை/ உனது/ கிருபை/


அனுபல்லவி
மெப்புலகை/ கொப்புலு-க3ல/ மேடி ஜனுல/ ஜூசி/ ப4ஜன/ (த)
பெயருக்கென/ கொப்புகளுடை/ மேன்மக்களை/ கண்டு/ வழிபாட்டினை/ விடாமலே...


சரணம்
ரூகலகை/ பைகி/ மஞ்சி/ கோகலகை/-ஆஹாரமுனகு/
பணத்திற்கென/ அணிய/ சிறந்த/ ஆடைகளுக்கென/ ஊணுக்கு/

நூகலகை/ த்4யானிஞ்சிதி/ த்யாக3ராஜ/ நுதுனி/ ப4ஜன/ (த)
நொய்க்கென/ தியானித்தேன்/ தியாகராசனால்/ போற்றப் பெற்றோனின்/ வழிபாட்டினை/ விட்டாலே...


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - தப்பக3னே - தப்பகனே : 'தப்பக3னே' என்றால் 'விட்டாலே'; 'தப்பகனே' என்றால் 'விடாமலே' - எதிர்ப்பதம். இவ்விரண்டுமே இந்த கீர்த்தனையில் பயன்படுத்தப்பட்டுள்ளது. பல்லவியிலும், அனுபல்லவியினை பல்லவியோடு இணைக்கையிலும் 'விடாமலே' (தப்பகனே) என்ற பொருளும், சரணத்தினைப் பல்லவியுடன் இணைக்கையில் 'விட்டாலே' (தப்பக3னே) என்ற பொருளும் கொள்ளப்படும்.

Top

மேற்கோள்கள்

விளக்கம்
2 - தனுவுகு லம்பட - 'லம்பட' என்ற வடமொழிச்சொல்லுக்கு 'ஆசை' என்றும், அதே தெலுங்கு சொல்லுக்கு 'துன்பம்' என்று பொருள். ஆனால் 'லம்படுடு3' என்ற தெலுங்கு சொல்லுக்கு 'பேராசைக்காரன்' என்று பொருள். இச்சொல்லுக்கு முன் வரும் 'தனுவுகு' - அதாவது உடலுக்கு - என்ற சொல்லை உத்தேசித்து 'ஆசை' யென்ற பொருள்தான் (உடலுக்கு ஆசை) இங்கு பொருந்தும்.

அனுபல்லவியையும், சரணத்தினையும் பல்லவியுடன் இணைக்கையில், 'தனுவுக்கு லம்பட' என்ற சொற்கள் மிகுதியாகும். ஆனால், தியாகராஜரின் கிருதிகளில் காணப்படுவது என்னவென்றால், அவர், ஒரு பதத்தினை பல்லவியில் பயன்படுத்தி, அதனை, அனுபல்லவியிலும், சரணத்திலும் விவரிப்பார். அதன்படி, 'உடலுக்கு ஆசை' என்ற பல்லவி சொற்கள் விரிந்து, அனுபல்லவியில் - 'பெயருக்கென' (மெப்புலகை) என்றும், சரணத்தில் 'பணம், ஆடை, உணவு' (ரூகலகை, கோகலகை, நூகலகை) என்றும் காணப்படுகின்றன. பெயர் (புகழ்), பணம், ஆடை, உணவு ஆகிய யாவுமே உடலுக்கு ஆசையினால் விளைவதன்றோ?

எல்லா புத்தகங்களிலும், 'தனுவுகு லம்பட' என்ற சொற்களை 'உடலுக்குத் துன்பம்' என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ஆனால், பல்லவி சொல் 'வச்சுனா' (வருமா) என்பதனை கவனித்திற்கொண்டு, இப்பொருள் பொருந்தாது. அப்படியே, பல்லவியில் பொருள் கொண்டாலும், அனுபல்லவியினையும், சரணத்தினையும் பல்லவியுடன் இணைக்கையில், அத்தகைய பொருள் கொள்ள இயலாது.

Top

3 - கொப்பு - அரசர் அல்லது செல்வந்தர் மாளிகைக் கூரையுச்சிக் கலயம் - இச்சொல்லுக்கு (ஆண், பெண் இருபாலாரின்) 'தலைக்கொண்டை' என்றும் பொருளுண்டு. ஆகவே, தலைப்பாகையினை, சூசகமாக 'கொப்பு' என்றும் கொள்ளலாம். இங்கு, 'மேன்மக்கள்' (மேடி ஜனுலு) என்று சொன்னாலே போதும். ஆனால் 'கொப்புக3ல' என்று தியாகராஜர் கூறவதன் நோக்கமென்ன என்று விளங்கவில்லை. 'கொப்பு' என்ற தமிழ்ச்சொல்லுக்கு, 'கொம்பு' என்றும் பொருள்படும். தமிழ் நாட்டில், கருவம் பிடித்தவனை, 'அவனுக்குத் தலையில் கொம்பு முளைத்திருக்கின்றதோ?' என்று கேலி செய்வார்கள். அந்த பொருளில் தியாகராஜர் பயன்படுத்திகின்றாரா என்று விளங்கவில்லை. எனவே பொதுப்படையாக 'கூரையுச்சிக் கலயம்' என்ற பொருள் கொள்ளப்பட்டது.

4- மேடி ஜனுல - மேன்மக்கள் - அரசர் அல்லது செல்வந்தர் - (இகழ்ச்சியாக)

5 - த்4யானிஞ்சிதி - தியானித்தேன் - இது கேலியாகப் பகர்வது. இச்சொல்லினை, 'தியாகராஜ நுதுனி' (தியாகராஜனால் போற்றப்பெற்றோனை)-உடன் - தியாகராஜனால் போற்றப்பெற்றோனை தியானித்தேன் - என பொருள்பட, இணைக்கலாகாது. அப்படிச் செய்தால், இக்கிருதியின் நோக்கத்திற்கு எதிராகும்.

மேன்மக்களைக் கண்டு - அவர்கள் புகழ்வதற்கென

Top


Updated on 09 Mar 2009

No comments: