Wednesday, February 25, 2009

தியாகராஜ கிருதி - பட்டி விடு3வ - ராகம் மஞ்ஜரி - Patti Viduva - Raga Manjari

பல்லவி
பட்டி விடு3வ ராது3 நா 1செயி
பட்டி
விடு32ராது3

அனுபல்லவி
புட்டின நாடே3 நிஜ ப4க்தினி மெட3
கட்டி கு3ட்டு செத3ரக ப்3ரோசி செயி (ப)

சரணம்
நித்யானித்யமுலனு போ3தி4ஞ்சி
க்ரு2த்யாக்ரு2த்யமுலனு தெலிபிஞ்சி
ப்ரத்யேகுடு3 நீவனி கனிபிஞ்சி
ப்4ரு2த்யுடை3ன த்யாக3ராஜு செயி (ப)


பொருள் - சுருக்கம்
எனது கையினைப் பற்றி விடலாகாது
  • பிறந்த நாள் முதலே, உண்மையான பற்றினைக் கழுத்தினில் கட்டி,

  • மானம் சிதறாமற் காத்து,

  • அழியாதது மற்றும் அழிவனவற்றினைப் போதித்து,

  • செய்யத் தக்கவை தகாதவற்றினைத் தெரிவித்து,

  • ஒவ்வொருவனும் நீயேயெனக் காட்டி,

அடிமையான இத்தியாகராசனின் கையினைப் பற்றி விடலாகாது


பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
பட்டி/ விடு3வ/ ராது3/ நா/ செயி/
பற்றி/ விடல்/ ஆகாது/ எனது/ கையினை/

பட்டி/ விடு3வ/ ராது3/
பற்றி/ விடல்/ ஆகாது/


அனுபல்லவி
புட்டின/ நாடே3/ நிஜ/ ப4க்தினி/ மெட3/
பிறந்த/ நாள் முதலே/ உண்மையான/ பற்றினை/ கழுத்தினில்/

கட்டி/ கு3ட்டு/ செத3ரக/ ப்3ரோசி/ செயி/ (ப)
கட்டி/ மானம்/ சிதறாமற்/ காத்து/ கையினை/ பற்றி...


சரணம்
நித்ய/-அனித்யமுலனு/ போ3தி4ஞ்சி/
அழியாதது/ அழிவனவற்றினை/ போதித்து/

க்ரு2த்ய/-அக்ரு2த்யமுலனு/ தெலிபிஞ்சி/
செய்யத் தக்கவை/ செய்யத் தகாதவற்றினை/ தெரிவித்து/

ப்ரத்யேகுடு3/ நீவு/ அனி/ கனிபிஞ்சி/
ஒவ்வொருவனும்/ நீயே/ என/ காட்டி/

ப்4ரு2த்யுடை3ன/ த்யாக3ராஜு/ செயி/ (ப)
அடிமையான/ தியாகராசனின்/ கையினை/ பற்றி...


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
2 - ராது3 - ராது3 நா செயி

மேற்கோள்கள்

விளக்கம்
1 - செயி பட்டி - கைப்பற்றி - திருமணம் செய்துகொண்டு - இந்த கிருதி நாயகி பா4வத்தில் அமைந்துள்ளது

கழுத்தினில் கட்டுதல் - பிணைத்தல்
Top


Updated on 25 Feb 2009

No comments: