Thursday, February 5, 2009

தியாகராஜ கிருதி - ஸ்ரீ மானினீ - ராகம் பூர்ண ஷட்3ஜம் - Sri Manani - Raga Poorna Shadjam

பல்லவி
ஸ்ரீ 1மானினீ மனோஹர
சிர காலமைன 2மாடயொகடிரா
வேமாரு பல்க ஜாலரா

அனுபல்லவி
ஸ்ரீமந்துலௌ நீ ஸோத3ருலு
ஸேயு ரீதி பாத3 ஸேவ கோரிதினி (ஸ்ரீ)

சரணம்
34ர்மாத்3யகி2ல புருஷார்த2முலு
4தா3ஸா1ர்ஹுனி 5ரூபமப்3பி3
மர்மம்பு3 6வேரேயுன்னதி3
7மன்னிம்புமிக த்யாக3ராஜ நுத (ஸ்ரீ)


பொருள் - சுருக்கம்
மனைவி சீதையின் உள்ளம் கவர்ந்தோனே! யாதவ குலத்தோனே! தியாகராசனால் போற்றப் பெற்றோனே!
  • பல காலமாயினும் சொல் ஒன்றுதானய்யா; ஆயிரம் முறை பகரவியலேனய்யா

  • பெருந்தகைகளான நினது சோதரர்கள் புரிவது போன்ற திருவடி சேவையினைக் கோரினேன்;

  • அறம் முதலாகிய நால்வகை புருஷார்த்தங்களும், யாதவ குலத்தோனின் உருவத்தினை யுற்ற மருமமும் வேறாயுள்ளன;

  • (அல்லது) அறம் முதலாகிய நால்வகை புருஷார்த்தங்களும், உனதுருவத்தினை யுற்ற மருமமும் வேறாயுள்ளன;

  • மன்னிப்பாயினி.



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ஸ்ரீ/ மானினீ/ மனோஹர/
சீதை (இலக்குமி)யின்/ மனைவி/ உள்ளம் கவர்ந்தோனே/

சிர/ காலமு/-ஐன/ மாட/-ஒகடிரா/
பல/ காலம்/ ஆயினும்/ சொல்/ ஒன்றுதானய்யா/

வே/ மாரு/ பல்க/ ஜாலரா/
ஆயிரம்/ முறை/ பகர/ இயலேனய்யா/


அனுபல்லவி
ஸ்ரீமந்துலௌ/ நீ/ ஸோத3ருலு/
பெருந்தகைகளான/ நினது/ சோதரர்கள்/

ஸேயு/ ரீதி/ பாத3/ ஸேவ/ கோரிதினி/ (ஸ்ரீ)
புரிவது/ போன்ற/ திருவடி/ சேவையினை/ கோரினேன்/


சரணம்
4ர்ம/-ஆதி3/-அகி2ல/ புருஷ-அர்த2முலு/
அறம்/ முதலாகிய/ அனைத்து (நால்வகை)/ புருஷார்த்தங்களும்/

தா3ஸா1ர்ஹுனி/ ரூபமு/-அப்3பி3ன/
யாதவ குலத்தோனின்/ உருவத்தினை/ உற்ற/
(அல்லது)
தா3ஸா1ர்ஹ/ நீ/ ரூபமு/-அப்3பி3ன/
யாதவ குலத்தோனே/ உனது/ உருவத்தினை/ உற்ற/

மர்மம்பு3/ வேரே/-உன்னதி3/
மருமமும்/ வேறாக/ உள்ளன/

மன்னிம்புமு/-இக/ த்யாக3ராஜ/ நுத/ (ஸ்ரீ)
மன்னிப்பாய்/ இனி/ தியாகராசனால்/ போற்றப் பெற்றோனே/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
2 - மாடயொகடிரா - மாடயொகடேரா

4 - தா3ஸா1ர்ஹுனி - தா3ஸா1ர்ஹ நீ

Top

மேற்கோள்கள்
4 - தா3ஸா1ர்ஹ - யாதவ குலத்தோன் - கண்ணன் - விஷ்ணு ஸஹஸ்ர நாமம் (511) நோக்கவும்.

முக்தியின் படிகள் - நிலைகள்

ஸாலோக்ய - ஸாமீப்ய - ஸாரூப்ய - ஸாயுஜ்ய முக்தி நிலைகள்

தங்கிய சாரூபந் தானெட்டாம் யோகமாந்
தங்குஞ் சன்மார்க்கந் தனிலன்றிக் கைகூடா
அங்கத் துடல்சித்தி சாதன ராகுவர்
இங்கிவ ராக விழிவற்ற யோகமே - திருமந்திரம் (1510)
Top

விளக்கம்
1 - மானினீ - இச்சொல்லுக்கு மனைவி என்றும் பொருளுண்டு - சீதை அல்லது இலக்குமி என்று கொள்ளலாம்.

3 - 4ர்மாத்3யகி2ல புருஷார்த2முலு - நால்வகை புருஷார்த்தங்கள் - அறம், பொருள், இன்பம், வீடு

5 - ரூபமப்3பி3 - ஸாரூப்யம் - உருவத்தினை யுறுதல்
கிருதி 'ஸிக்3கு3மாலி நாவலெ'-யில் தியாகராஜர் உரைப்பது - 'உல்லமுனனு கனி நீவு நேனையுண்ட33 தெலிய லேது3' - 'உள்ளத்தினில் உன்னைக் கண்டு நீயே நானாகியிருக்கத் தெரியவில்லை' : 'நீவு நேனையுண்டக3' - 'ஸாரூப்யம்'

ஸாலோக்ய - (இறைவனின் உலகத்திலிருத்தல்) - ஸாமீப்ய - (இறைவனின் அண்மை) - ஸாரூப்ய - (இறைவனின் உருவத்தினை அடைதல்) - ஸாயுஜ்ய - (இறைவனுடன் ஒன்றாகுதல்) - ஆதி சங்கரரின் சிவானந்த லஹரி (28) நோக்கவும்

Top

ஸாரூப்யம் என்றாலென்ன? - "கஜேந்திரன் இறைவனின் கரங்களால் நேரடியாக தீண்டப்பட்டதனால், அவன் உடனே அனைத்து அறிவீனங்கள் மற்றும் உலக பிணைப்புகளினின்றும் விடுபட்டதுமன்றி, ஸாரூப்ய முக்தியெனப்படும் இறைவனுடைய அனைத்து உருவ இலக்கணங்களையும் - பீதாம்பரம், நான்கு கரங்கள் ஆகியவை - பெற்றான்". பாகவத புராணம் - புத்தகம் 8 - அத்தியாயம் 4, செய்யுள் 6 நோக்கவும்

கபில முனிவராக அவதரித்த விஷ்ணு உரைத்தது - "உண்மையான தொண்டன் ஸாலோக்ய - ஸாமீப்ய - ஸாரூப்ய - ஸாயுஜ்ய முக்திகளை, இறைவனே அவற்றினை அளித்தாலும், ஏற்கமாட்டான்" (இறைவனின் தொண்டு மற்றும் அவன் புகழ் பாடுதலையே விழைவான்) - பாகவத புராணம் - புத்தகம் 3 - அத்தியாயம் 29, செய்யுள் 13 நோக்கவும்

ஸிஸுபால வதத்தினைக் குறித்து, நாரதரிடம் தருமன் கேள்வி கேட்டது - "ஓர் அரக்கனாகிய ஸிஸுபாலன் கண்ணனிடன் அத்தனை பகைமை கொண்டிருந்த போதும், கடைசியில், இறைவனின் உடலில் ஒன்றியது மிக்கவும் ஆச்சரியமாக இருக்கின்றது. இந்த ஸாயுஜ்ய முக்தி யாவற்றினையும் கடந்தோருக்கும் கிட்டாதவொன்று. ஆகவே, இறைவனின் பகைவனுக்கு எப்படி கிட்டியது?" பாகவத புராணம் - புத்தகம் 7 - அத்தியாயம் 1, செய்யுள் 16 நோக்கவும்

Top

6 - வேரேயுன்னதி3 - வேறாயுள்ளது - இங்கு தியாகராஜர் எதனை, எதனுடன் ஒப்பிடுகின்றார் என சரியாக விளங்கவில்லை. புருஷார்தங்களையும் (முதல் வரி) ஸாரூப்யத்தினையாமா (2-வது வரி) அல்லது திருவடி சேவையை (அனுபல்லவி) புருஷார்த்தம் - ஸாரூப்யம் - இரண்டினையும் சேர்த்தா?

'ஸிக்3கு3மாலி நாவலெ' கிருதியில் கூறியபடி அவர் ஸாரூப்யத்தினை விழைந்தது உண்மையே. எனவே புருஷார்த்தங்களினால் கிடைக்கும் முக்தியை (வீடு) விட ஸாரூப்யத்தினை விரும்புவதாகவும் கொள்ளலாம். அல்லது புருஷார்த்தங்களினால் கிடைக்கும் முக்தி அல்லது ஸாரூப்ய நிலைகளையோ விழையாது திருவடி சேவையினை மட்டுமே விரும்புகின்றார் எனவும் கொள்ளலாம்.

Top

சில புத்தகங்களில் 'பாத சேவையினை' அவர் விழைவதாக பொருள் கொள்ளப்பட்டுள்ளது. சரியான பொருள் கொள்வதற்கு, பாடாந்தரமாகிய தா3ஸா1ர்ஹுனி - தா3ஸா1ர்ஹ நீ - இடைஞ்சலாக உள்ளது.

ஆயினும், அனுபல்லவியில், திட்டவட்டமாக 'பாத சேவையினையே கோரினேன்' - 'சொல் ஒன்றுதான் - ஆயிரம் முறை பகரவியலேன்' (பல்லவி) - இவற்றினை ஆதாரமாகக் கொண்டு, அவர் பாத சேவையன்றி வேறெதனையும் விழையவில்லை எனத் தெரிகின்றது.

7 - மன்னிம்புமிக - மன்னிப்பாய் - இது அவர், இறைவனிடம், விட்டுக்கொடுக்காமல், (ஆயிரம் முறை பகரவியலேன்) பதில் சொல்வதற்கு, மன்னிப்பு கேட்கின்றார். சில புத்தகங்களில் அவர் தனது தவறுகளை மன்னிக்க வேன்டுகின்றார் என பொருள் கொள்ளப்பட்டுள்ளது. அது சரியன்று எனத் தோன்றுகின்றது.

Top


Updated on 06 Feb 2009

No comments: