ஸனாதன பரம பாவன
க4னா-க4ன வர்ண கமலானன
அனுபல்லவி
தனவாட3னேயபி4மானமு
தை3வமைன நீகேல 1கல்க3தோ3 (ஸ)
சரணம்
ராஜாதி4பான்வய ஸாக3ர
ராஜு நீவை விலஸில்லிதே
2தேஜரில்லகா3 க்ரு2ப ஜூதுவே
ஈ ஜகா3ன த்யாக3ராஜ ஸன்னுத (ஸ)
பொருள் - சுருக்கம்
முதல்-முடிவற்றோனே! முற்றிலும் தூயோனே! கார்முகில் வண்ணா! கமல முகத்தோனே! தியாகராசனால் போற்றப் பெற்றோனே!
- உன்னவனென்ற நேசம், தெய்வமான உனக்கேன் தோன்றாதோ?
- பேரரசர்கள் குலமெனும் கடலின் மதி நீயாக ஒளிர்வாயாகில், மாட்சிமையாக கருணை செய்வாயே, இவ்வுலகில்.
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ஸனாதன/ பரம/ பாவன/
முதல்-முடிவற்றோனே/ முற்றிலும்/ தூயோனே/
க4னா-க4ன/ வர்ண/ கமல/-ஆனன/
கார்முகில்/ வண்ணா/ கமல/ முகத்தோனே/
அனுபல்லவி
தனவாடு3/-அனே/-அபி4மானமு/
உன்னவன்/ என்ற/ நேசம்/
தை3வமைன/ நீகு/-ஏல/ கல்க3தோ3/ (ஸ)
தெய்வமான/ உனக்கு/ ஏன்/ தோன்றாதோ/
சரணம்
ராஜ-அதி4ப/-அன்வய/ ஸாக3ர/
பேரரசர்கள்/ குலமெனும்/ கடலின்/
ராஜு/ நீவை/ விலஸில்லிதே/
மதி/ நீயாக/ ஒளிர்வாயாகில்/
தேஜரில்லகா3/ க்ரு2ப/ ஜூதுவே/
மாட்சிமையாக/ கருணை/ செய்வாயே/
ஈ/ ஜகா3ன/ த்யாக3ராஜ/ ஸன்னுத/ (ஸ)
இந்த/ உலகில்/ தியாகராசனால்/ போற்றப் பெற்றோனே/
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - கல்க3தோ3 - கலுக3து3
மேற்கோள்கள்
விளக்கம்
2 - தேஜரில்லகா3 - மாட்சிமையாக - எல்லோரும் கண்டு வியக்கும் வண்ணம்.
இப்பாடல் நிந்தா3-ஸ்துதி எனப்படும் இறைவனை இகழ்ந்து-புகழலாகும்
Top
Updated on 06 Feb 2009
No comments:
Post a Comment