Wednesday, February 4, 2009

தியாகராஜ கிருதி - லாவண்ய ராம - ராகம் பூர்ண ஷட்3ஜம் - Laavanya Rama - Raga Poorna Shadjam

பல்லவி
லாவண்ய ராம 1கனுலார ஜூட3வே அதி (லா)

அனுபல்லவி
2ஸ்ரீ வனிதா சித்த குமுத3 ஸீ1த-கர 1தானன்யஜ3 (லா)

சரணம்
நீ மனஸு நீ ஸொக3ஸு நீ 4தி3னுஸு வேரே
5தாமஸ மத தை3வமேல த்யாக3ராஜ நுத தி3வ்ய (லா)


பொருள் - சுருக்கம்
மிக்கு எழிலுடை இராமா! மனைவி இலக்குமி (அல்லது சீதை) உள்ளக் குமுதத்தின் மதியே! நூறு மதனர்களின் எழிலுடை இராமா! தியாகராசனால் போற்றப் பெற்றோனே? தெய்வீக எழிலுடை இராமா!

  • உனது மனது, உனது சொகுசு, உனது தினுசு வேறாகும்;

  • தாமத மத தெய்வங்களேன்?

  • கண்ணார நோக்குவாய்



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
லாவண்ய/ ராம/ கனுலார/ ஜூட3வே/ அதி/ (லா)
எழிலுடை/ இராமா/ கண்ணார/ நோக்குவாய்/ மிக்கு/ எழிலுடை...


அனுபல்லவி
ஸ்ரீ/ வனிதா/ சித்த/ குமுத3/ ஸீ1த-கர/ ஸ1த/-அனன்யஜ/ (லா)
இலக்குமி (அல்லது சீதை)/ மனைவி/ உள்ள/ குமுதத்தின்/ மதியே/ நூறு/ மதனர்களின்/ எழிலுடை...


சரணம்
நீ/ மனஸு/ நீ/ ஸொக3ஸு/ நீ/ தி3னுஸு/ வேரே/
உனது/ மனது/ உனது/ சொகுசு/ உனது/ தினுசு/ வேறாகும்/

தாமஸ/ மத/ தை3வமு/-ஏல/ த்யாக3ராஜ/ நுத/ தி3வ்ய/ (லா)
தாமத/ மத/ தெய்வங்கள்/ ஏன்/ தியாகராசனால்/ போற்றப் பெற்றோனே/ தெய்வீக/ எழிலுடை...


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
சில புத்தகங்களில், ராகம் 'ருத்3ர ப்ரிய' என்று கொடுக்கப்பட்டுள்ளது

மேற்கோள்கள்
3 - அனன்யஜ - தான்தோன்றி - காமன்

விளக்கம்
1 - கனுலார - கண்ணார - இச்சொல், தொண்டனைக் குறிக்குமானால், 'கண்குளிர' என்றும், இறைவனைக் குறிக்குமானால், 'கருணையுடன்' என்றும் பொருள்படும். இவ்விடம், இச்சொல் இறைவனைக் குறிக்கின்றது.

2 - ஸ்ரீ வனிதா - 'ஸ்ரீ' என்ற சொல்லுக்கு, சில புத்தகங்களில், 'இலக்குமி' என்றும், சில புத்தகங்களில் 'சீதை' என்றும் பொருள் கொள்ளப்பட்டுள்ளது. இரண்டுமே பொருந்தும்.

4 - தி3னுஸு - இது அரபிய மொழிச் சொல்லின் திரிபென்று தெரிகின்றது.

5 - தாமஸ மத - தாமத மதம் - வாம, கௌல மார்க்கங்களைக் குறிக்கும். சிவ வழிபாட்டினையும் 'தாமத மத'மென வைணவர்கள் கூறுவர்.

Top


Updated on 04 Feb 2009

No comments: