Tuesday, February 3, 2009

தியாகராஜ கிருதி - த3ய லேனி - ராகம் நாயகி - Daya Leni - Raga Naayaki

பல்லவி
3ய லேனி ப்3ரதுகேமி 131ரத2 ராம நீ (த3)

அனுபல்லவி
வயஸு நூரைனயீ வஸுத4னேலின கானி (த3)

சரணம்
ராஜாதி4ராஜ ரதி ராஜ ஸ1த லாவண்ய
பூஜ ஜபமுல வேள பொந்து3கா3னெது3
ராஜில்லி லோகாந்தரங்க3 மர்மமு தெலிபி
2ராஜி ஸேயனி த்யாக3ராஜ 3ஸன்னுத நீது3 (த3)


பொருள் - சுருக்கம்
தசரதராமா! அரசர்க்கரசே! நூறு இரதிபதிகளின் எழிலோனே! தியாகராசனால் சிறக்க போற்றப்பெற்றோனே!
  • வயது நூறாயினும்,

  • இவ்வுலகத்தை ஆண்டிடினும்

  • பூசை, செப வேளையில், பொருத்தமாக எதிரில் ஒளிர்ந்து, உலகத்தின் உள் மருமத்தினைத் தெரிவித்து, ஆற்றாத,

உனது தயையற்ற பிழைப்பென்ன?


பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
3ய/ லேனி/ ப்3ரதுகு/-ஏமி/ த31ரத2/ ராம/ நீ/ (த3)
தயை/ அற்ற/ பிழைப்பு/ என்ன/ தசரத/ ராமா/ உனது/


அனுபல்லவி
வயஸு/ நூரு/-ஐன/-ஈ/ வஸுத4னு/-ஏலின கானி/ (த3)
வயது/ நூறு/ ஆயினும்/ இந்த/ உலகத்தை/ ஆண்டிடினும்/ தயை...


சரணம்
ராஜ/-அதி4ராஜ/ ரதி/ ராஜ/ ஸ1த/ லாவண்ய/
அரசர்க்கு/ அரசே/ ரதி/ பதிகள்/ நூறின்/ எழிலோனே/

பூஜ/ ஜபமுல/ வேள/ பொந்து3கா3னு/-எது3ட/
பூசை/ செப/ வேளையில்/ பொருத்தமாக/ எதிரில்/

ராஜில்லி/ லோக/-அந்தரங்க3/ மர்மமு/ தெலிபி/
ஒளிர்ந்து/ உலகத்தின்/ உள்/ மருமத்தினை/ தெரிவித்து/

ராஜி ஸேயனி/ த்யாக3ராஜ/ ஸன்னுத/ நீது3/ (த3)
ஆற்றாத/ தியாகராசனால்/ சிறக்க போற்றப்பெற்றோனே/ உனது/ தயை...


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - 31ரத2 ராம - தா31ரதீ2 ராம.

3 - ஸன்னுத நீது3 - ஸன்னுத.

மேற்கோள்கள்

விளக்கம்
2 - ராஜி - ஆற்றுதல் - இது உருது மொழிச்சொல்லின் திரிபு (rAzi). இச்சொல்லுக்கு சம்மதம், ஆற்றுதல் ஆகிய பொருள் கொள்ளப்படும்.

ரதிபதி - மன்மதன்
Top


Updated on 03 Feb 2009

No comments: