Friday, February 27, 2009

தியாகராஜ கிருதி - இந்து3காயீ தனுவுனு பெஞ்தினதி3 - ராகம் முகா2ரி - Indukaayee Tanuvunu Penchinadi - Raga Mukhaari

பல்லவி
இந்து3காயீ தனுவுனு பெஞ்சினதி3(ந்து3கா)

சரணம்
சரணம் 1
நீ ஸேவகு லேக நீது3 செந்தகு ராக
ஆஸ தா3ஸுடை3 அடுயிடு திருகு3ட(ந்து3கா)


சரணம் 2
நிரதமு நீ த்3ரு2ஷ்டி நேனார்ஜிஞ்சக
ஒருல பா4மலனு ஓர ஜூபுலு ஜூசுட(ந்து3கா)


சரணம் 2
ஸாரெகு நாம ஸ்மரணமு ஸேயக
ஊரி மாடலெல்லனூரக வத3ருட(ந்து3கா)


சரணம் 4
கரமுலதோ பூஜ 1கா3விம்பக3 டா3சி
4ரலோன லேனி து3ர்தா3னமுலகு சாசுட(ந்து3கா)


சரணம் 5
வாரமு நீ க்ஷேத்ர வரமுல ஜுட்டக
2பூ4ரிகி முந்து33 பாரி பாரி திருகு3ட(ந்து3கா)


சரணம் 6
நீவாட3னி பேருனிந்து3 வஹிஞ்சக
நாவாட3னி யமுடு3 நவ்வுசு பா3தி4ஞ்சுட(ந்து3கா)


சரணம் 7
ராவய்ய ஸ்ரீ த்யாக3ராஜ வினுத நின்னு
பா4விஞ்சக ப்ரொத்3து3 பார-கொ3ட்டுகொன(ந்து3கா)


பொருள் - சுருக்கம்
தியாகராசனால் போற்றப் பெற்றோனே!
    இதற்கா இவ்வுடம்பை வளர்த்தது?
  • உனது சேவைக்கில்லாது, உன்னருகில் வாராது, ஆசைக்கடிமையாகி, அங்குமிங்கும் திரிவதற்கா இவ்வுடம்பை வளர்த்தது?

  • இடையறாது, உனது கண்ணோட்டத்தினை யீட்டாது, பிறர் மனைவியரை ஓரக்கண்ணால் நோக்குதற்கா இவ்வுடம்பை வளர்த்தது?

  • எவ்வமயமும் (உனது) நாமத்தினை நினைவு கூராது, ஊர்க்கதைகளைப் பயனின்றி பிதற்றுதற்கா இவ்வுடம்பை வளர்த்தது?

  • கரங்களினால் பூசை செய்வதற்கு மறைத்து, புவியில் இல்லாத தீய கொடைகளுக்கு (கரங்களை) நீட்டுதற்கா இவ்வுடம்பை வளர்த்தது?

  • நாளுமுனது புண்ணியத் தலங்களை வலம் வராது, பூரிதானத்திற்கு முன்னால் ஒடியோடித் திரிதற்கா இவ்வுடம்பை வளர்த்தது?

  • உன்னவனென பெயரிங்கு வகிக்காது, என்னவனென எமன் நகைத்துக்கொணடு துன்புறத்தற்கா இவ்வுடம்பை வளர்த்தது?

  • உன்னை யெண்ணாது பொழுது வீணாக்குதற்கா இவ்வுடம்பை வளர்த்தது?

வாருமைய்யா!


பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
இந்து3கா/-ஈ/ தனுவுனு/ பெஞ்சினதி3/
இதற்கா/ இந்த/ உடம்பை/ வளர்த்தது/


சரணம்
சரணம் 1
நீ/ ஸேவகு/ லேக/ நீது3/ செந்தகு/ ராக/
உனது/ சேவைக்கு/ இல்லாது/ உன்/ அருகில்/ வாராது/

ஆஸ/ தா3ஸுடை3/ அடு/-இடு/ திருகு3டந்து3கா/
ஆசைக்கு/ அடிமையாகி/ அங்கும்/ இங்கும்/ திரிவதற்கா/...


சரணம் 2
நிரதமு/ நீ/ த்3ரு2ஷ்டி/ நேனு/-ஆர்ஜிஞ்சக/
இடையறாது/ உனது/ கண்ணோட்டத்தினை/ நான்/ ஈட்டாது/

ஒருல/ பா4மலனு/ ஓர/ ஜூபுலு/ ஜூசுடந்து3கா/
பிறர்/ மனைவியரை/ ஓர/ கண்ணால்/ நோக்குதற்கா/...


சரணம் 3
ஸாரெகு/ நாம/ ஸ்மரணமு/ ஸேயக/
எவ்வமயமும்/ நாமத்தினை/ நினைவு/ கூராது/

ஊரி/ மாடலு/-எல்ல/-ஊரக/ வத3ருடந்து3கா/
ஊர்/ கதைகளை/ எல்லாம்/ பயனின்றி/ பிதற்றுதற்கா/....


சரணம் 4
கரமுலதோ/ பூஜ/ கா3விம்பக3/ டா3சி/
கரங்களினால்/ பூசை/ செய்வதற்கு/ மறைத்து/

4ரலோன/ லேனி/ து3ர்தா3னமுலகு/ சாசுடந்து3கா/
புவியில்/ இல்லாத/ தீய கொடைகளுக்கு/ நீட்டுதற்கா/...


சரணம் 5
வாரமு/ நீ/ க்ஷேத்ர வரமுல/ ஜுட்டக/
நாளும்/ உனது/ புண்ணியத் தலங்களை/ வலம் வராது/

பூ4ரிகி/ முந்து33/ பாரி பாரி/ திருகு3டந்து3கா/
பூரிதானத்திற்கு/ முன்னால்/ ஒடியோடி/ திரிதற்கா/...


சரணம் 6
நீவாடு3/-அனி/ பேருனு/-இந்து3/ வஹிஞ்சக/
உன்னவன்/ என/ பெயர்/ இங்கு/ வகிக்காது/

நாவாடு3/-அனி/ யமுடு3/ நவ்வுசு/ பா3தி4ஞ்சுடந்து3கா/
என்னவன்/ என/ எமன்/ நகைத்துக்கொண்டு/ துன்புறுத்தற்கா/...


caraNam 7
ராவய்ய/ ஸ்ரீ த்யாக3ராஜ/ வினுத/ நின்னு/
வாருமைய்யா/ ஸ்ரீ தியாகராசனால்/ போற்றப் பெற்றோனே/ உன்னை/

பா4விஞ்சக/ ப்ரொத்3து3/ பார-கொ3ட்டுகொனந்து3கா/
எண்ணாது/ பொழுது/ வீணாக்குதற்கா/....


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
இப்பாடலின் அனைத்து சரணங்களின் கடைசியாக வரும் (பல்லவியுடன் சேர்க்கும்) சொல், திருவாளர் CR. ராமானுஜாச்சாரியாரின் 'The Spiritual Heritage of Tyagaraja' என்ற புத்தகத்திலிருந்து ஏற்கப்பட்டவையாகும்.

1 - கா3விம்பக3 - கா3விம்பக : 'கா3விம்பக' - எதிர்மறை - இச்சொல் சரியென்றால் 'கரங்களினால் பூசை செய்யாது மறைத்து' என்று மொழி பெயர்க்கப்படும்.

Top

மேற்கோள்கள்
2 - பூ4ரிகி - பூரிதானம் - வேள்விக்குப்பின் வழங்கப்படும் கொடை. விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தில் 'பூ4ரி த4க்ஷிண' என்றோர் பெயருண்டு. அதன் விளக்கம் அறிய விஷ்ணு ஸஹஸ்ர நாமம் உரை (502) நோக்கவும்.

Top

விளக்கம்
பக்தி நெறியில், தொண்டன் தன்னை இழிவுபடுத்திக் கொண்டு, தன்னுடைய குறைபாடுகளைக் களைய இறைவனை வேண்டுதற்கு 'ஆத்ம க3ர்ஹண' என்று கூறப்படும். ஆனால், உண்மையில் அப்படிப்பட்ட இழிந்த நிலையில் தான் இல்லாத போழ்தும் ஆதி சங்கரரைப் போன்ற மகான்கள் உலகோருக்காக தம்மை அங்ஙனம் இழிவு படுத்திக்கொள்வதுமுண்டு. உதாரணமாக, ஆதி சங்கரர் இயற்றிய 'சிவானந்த லஹரி' என்ற உயர்ந்த பக்தி நூலில் ஒரு செய்யுளின் பொருள் பின்வருமாறு -

"இறைவா..... மிக்கு சபல சித்தமுடைய இந்த மனக்குரங்கு எவ்வமயமும் அறிவீனமெனும் அடவியில் திரிகின்றது; இளம் பெண்டிரின் மலையுச்சி நிகர் தனங்களில் நடமிடுகின்றது; உலக ஆசைகளெனும் மரக்கிளைகளில், பல திசைகளிலும் தன்னிச்சையாகத் திரிகின்றது. என்னுடைய இந்த மனக்குரங்கினை காணிக்கையாக ஏற்றுக்கொண்டு, அதனை பக்தியெனும் கயிற்றினால் கட்டி, உம்முடைய ஆளுகையில் கொண்டுவாரும்." (20) (ஸ்வாமி தபஸ்யானந்தாவின் ஆங்கில உரையின் தமிழாக்கம்.)

ஆதி சங்கரர் அத்வைதத்தின் உச்சத்தினைக் கண்டவர். ஜீவன் முக்தரான அவருக்கு இம்மாதிரி அவஸ்தைகள் இருப்பதற்கு ஏது இல்லை. ஆனால், அவர் தன்னை உலகோரின் நிலையில் வைத்து, உலகோர் உய்வதற்காக, இம்மாதிரி பக்தி நூல்களை இயற்றியுள்ளார்.


பூசை செய்வதற்கு மறைத்து - பூசை செய்யாது என

Top


Updated on 28 Feb 2009

No comments: