எந்தனி நே வர்ணிந்துனு ஸ1ப3ரீ பா4க்3ய(மெந்த)
அனுபல்லவி
1தா3ந்துல வர காந்தலு ஜக3மந்த நிண்டி3யுண்ட3க3 (எ)
சரணம்
கனுலார ஸேவிஞ்சி கம்மனி ப2லமுலனொஸகி3
தனுவு புலகரிஞ்ச பாத3 யுக3முலகு ம்ரொக்கி
இன குல பதி ஸமுக2ம்பு3ன 2புனராவ்ரு2த்தி ரஹித
பத3முனு பொந்தி3ன த்யாக3ராஜ நுதுராலி புண்யம்பு3னு (எ)
பொருள் - சுருக்கம்
- எங்ஙனம் நான் வருணிப்பேன் சபரியின் பேற்றினை?
- முனிவர்களின் உயர் மனைவியர் புவியெங்கும் நிறைந்திருக்க, எங்ஙனம் நான் வருணிப்பேன் சபரியின் பேற்றினை?
- கண்ணார சேவித்து, இனிய பழங்களையளித்து, மெய்ச்சிலிர்க்க, திருவடி இணையினுக்கு வணங்கி, பரிதி குலத் தலைவனின் முன்னிலையில், மறு பிறப்பற்ற பதத்தினையடைந்த, தியாகராசனால் போற்றப் பெற்றவளின் புண்ணியத்தினை எங்ஙனம் நான் வருணிப்பேன், சபரியின் பேற்றினை?
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
எந்தனி/ நே/ வர்ணிந்துனு/ ஸ1ப3ரீ/ பா4க்3யமு/-(எந்த)
எங்ஙனம்/ நான்/ வருணிப்பேன்/ சபரியின்/ பேற்றினை/
அனுபல்லவி
தா3ந்துல/ வர/ காந்தலு/ ஜக3மு/-அந்த/ நிண்டி3/-உண்ட3க3/ (எ)
முனிவர்களின்/ உயர்/ மனைவியர்/ புவி/ எங்கும்/ நிறைந்து/ இருக்க/ எங்ஙனம்...
சரணம்
கனுலார/ ஸேவிஞ்சி/ கம்மனி/ ப2லமுலனு/-ஒஸகி3/
கண்ணார/ சேவித்து/ இனிய/ பழங்களை/ யளித்து/
தனுவு/ புலகரிஞ்ச/ பாத3/ யுக3முலகு/ ம்ரொக்கி/
மெய்/ சிலிர்க்க/ திருவடி/ இணையினுக்கு/ வணங்கி/
இன/ குல/ பதி/ ஸமுக2ம்பு3ன/ புனர்/-ஆவ்ரு2த்தி/ ரஹித/
பரிதி/ குல/ தலைவனின்/ முன்னிலையில்/ மறு/ பிறப்பி/ அற்ற/
பத3முனு/ பொந்தி3ன/ த்யாக3ராஜ/ நுதுராலி/ புண்யம்பு3னு/ (எ)
பதத்தினை/ யடைந்த/ தியாகராசனால்/ போற்றப் பெற்றவளின்/ புண்ணியத்தினை/ எங்ஙனம்...
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
மேற்கோள்கள்
விளக்கம்
1 - தா3ந்துல வர காந்தலு - முனிவர்களின் உயர் மனைவியர் - தியாகராஜர், முனிவர்களின் மனைவியரையும், சபரியையும் ஒப்பிடுகின்றார். இராமன், காட்டில் அத்ரி-அனுஸூயா, ஸரபங்க, ஸுதீக்ஷ்ண, அகத்தியர் ஆகிய முனிவர்களின் ஆசிரமங்களுக்கு சீதையுடன் சென்றான். ஆனால், அப்பெண்மணிகள் யாருக்கும் சபரிக்குக் கிடைத்த பேறு கிடைக்கவில்லை.
இந்தப் பெண்மணிகளை ஒப்பிடுகையில், சபரிக்கு மோக்ஷம் கிட்ட எந்த வித தகுதியும் இருக்கவில்லை. தன்னுடைய குருவின் மீது அவள் கொண்டிருந்த அளவு கடந்த பக்தியும், அவர் (குரு) சொன்னபடி ராமன் ஒரு நாள் வருவான் என்ற அசையாத நம்பிக்கையுமே சபரிக்கு அப்படிப்பட்டதோர் பேற்றினைப் பெறவைத்தன.
வைணவப் பெருந்தகை, வேதாந்த தேசிகன் அவர்களின் 'ரகு4வீர க3த்3யம்' என்ற தோத்திரத்தில், ராமனை, 'சபரியின் மோக்ஷத்திற்கு சாட்சி' (SabarI mOksha sAkshi bhUta) என்று வருணிக்கின்றார். அதாவது, ராமன் அவளுக்கு மோக்ஷம் அளிக்கவில்லை. அவள் ராமன் வருமுன்பே, அதற்குத் தகுதி பெற்றுவிட்டாள். ராமன் வெறும் சாட்சி மாத்திரமே. சபரியின் பேறுதான் என்னே! இதனைத்தான் சான்றோர் 'என் கடன் பணி செய்து கிடப்பதே' என்றனரோ? இதனால்தானோ, தியாகராஜர் சபரியின் பேற்றினை வருணிக்க சொற்கள் இல்லை 'எந்தனி நே வர்ணிந்து' என்கிறார்! ரகு4வீர க3த்3யம் (சுருக்கம்).
2 - ஆவ்ரு2த்தி - பிறப்பு இறப்பு எனும் சுழல்.
பரிதி குலத் தலைவன் - இராமன்
Top
Updated on 28 Feb 2009
No comments:
Post a Comment