Thursday, February 26, 2009

தியாகராஜ கிருதி - எவருன்னாரு ப்3ரோவ - ராகம் மாளவ ஸ்ரீ - Evarunnaaru Brova - Raga Maalava Sri

பல்லவி
எவருன்னாரு ப்3ரோவ
இந்த தாமஸமேலனய்ய

அனுபல்லவி
விவரம்பு33 தெலுபவய்ய
விஸ்1வேஸ1 ஸ்ரீ பஞ்ச நதீ31 (எ)

சரணம்
மனஸாரக3 த்4யானிம்பனு
மனஸு நிலுபு மர்மம்பு3 தெலிபி
தனவாட3னே தலசி தை4ர்ய-
மொஸகு3 த்யாக3ராஜ வினுத (எ)


பொருள் - சுருக்கம்
அண்டமாள்வோனே! திருவையாற்றப்பா! தியாகராசனால் போற்றப் பெற்றோனே!
  • எவருள்ளனர் காப்பதற்கு? இத்தனைத் தாமதமேனய்யா?

  • விவரமாகத் தெரிவியுமய்யா,

  • மனதார தியானிப்பதற்கு, மனத்தினைக் கட்டும் மருமத்தினைத் தெரிவித்து, தன்னவனென்றே யெண்ணி, தைரியம் அருள்வாய்.



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
எவரு/-உன்னாரு/ ப்3ரோவ/
எவர்/ உள்ளனர்/ காப்பதற்கு/

இந்த/ தாமஸமு/-ஏலனய்ய/
இத்தனை/ தாமதம்/ ஏனய்யா/


அனுபல்லவி
விவரம்பு33/ தெலுபவய்ய/
விவரமாக/ தெரிவியுமய்யா/

விஸ்1வ/-ஈஸ1/ ஸ்ரீ பஞ்ச நதீ3-ஈஸ1/ (எ)
அண்டம்/ ஆள்வோனே/ திருவையாற்றப்பா/


சரணம்
மனஸாரக3/ த்4யானிம்பனு/
மனதார/ தியானிப்பதற்கு/

மனஸு/ நிலுபு/ மர்மம்பு3/ தெலிபி/
மனத்தினை/ கட்டும்/ மருமத்தினை/ தெரிவித்து/

தனவாடு3/-அனே/ தலசி/ தை4ர்யமு/-
தன்னவன்/ என்றே/ எண்ணி/ தைரியம்/

ஒஸகு3/ த்யாக3ராஜ/ வினுத/ (எ)
அருள்வாய்/ தியாகராசனால்/ போற்றப் பெற்றோனே/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)

மேற்கோள்கள்


விளக்கம்
ஸ்ரீ TK கோவிந்த ராவ் அவர்களின் 'Compositions of Tyagaraja' என்ற புத்தகத்தில், இப்பாடல் தியாகராஜரால் இயற்றப்பட்டதா என்ற ஐயமிருப்பதாகவும், இப்பாடலை அவருடைய சில சீட பரம்பரையினர் மட்டுமே பாடுவதாகவும் கூறப்பட்டுள்ளது.

Top


Updated on 26 Feb 2009

No comments: