Tuesday, December 23, 2008

பாஹி கல்யாண ராம - காபி - Paahi Kalyana Rama - Raga Kaapi

பல்லவி
பாஹி கல்யாண ராம பாவன கு3ண ராம

சரணம்
சரணம் 1
நா ஜீவாதா4ரமு நா ஸு1பா4காரமு (பா)

சரணம் 2
நா நோமு ப2லமு நா மேனு ப3லமு (மா)

சரணம் 3
நா வம்ஸ14னமு 1நாதை3தோ3-தனமு (பா)

சரணம் 4
நா சித்தானந்த3மு நா ஸுக2 கந்த3மு (பா)

சரணம் 5
நாது3 ஸந்தோஷமு நா முத்3து3 வேஷமு (பா)

சரணம் 6
நா மனோ-ஹரமு நாது3 ஸ்1ரு2ங்கா3ரமு (பா)

சரணம் 7
நா-பாலி பா4க்3யமு நாது3 வைராக்3யமு (பா)

சரணம் 8
நாது3 ஜீவனமு நாது3 யௌவனமு (பா)

சரணம் 9
ஆக3ம ஸாரமு அஸுர தூ3ரமு (பா)

சரணம் 10
முல்லோகாதா4ரமு முத்யால ஹாரமு (பா)

சரணம் 11
தே3வாதி3 தை3வமு து3ர்ஜனாபா4வமு (பா)

சரணம் 12
பரமைன ப்3ரஹ்மமு பாபேப4 ஸிம்ஹமு (பா)

சரணம் 13
இதி3 2நிர்விகல்பமு 3ஈஸ்1வர ஜன்மமு (பா)

சரணம் 14
இதி3 ஸர்வோன்னதமு இதி3 4மாயாதீதமு (பா)

சரணம் 15
ஸாக3ர கு3ப்தமு 5த்யாக3ராஜாப்தமு (பா)


பொருள் - சுருக்கம்
கல்யாணராமா! புனித குண இராமா!
காவாய்.
  • நீயெனது வாழ்வின் அடிப்படை; எனதினிய உருவம்;

  • நீயெனது நோன்பின் பயன்; எனதுடல் வலிமை;

  • நீயெனது குலச் செல்வம்; எனது மங்களம்;

  • நீயெனதுள்ளக் களிப்பு; எனது சுகத்தின் மூலம்;

  • நீயெனது மகிழ்ச்சி; எனதினிய வேடம்;

  • நீயெனது மனத்தைப் பறித்தவன்; எனது சிங்காரம்;

  • நீயெனது பங்கிற் பேறு; எனது பற்றற்ற தன்மை;

  • நீயெனது வாழ்வு; எனதிளமை;

  • நீ ஆகமங்களின் சாரம்; அரக்கருக்கு தூரம்;

  • நீ மூவுலகுக்கும் ஆதாரம்; எனது முத்து மாலை;

  • நீ வானோருக்குமிறைவன்; தீயோரையொறுத்தவன்;

  • நீ பரம்பொருள்; பாவங்களெனும் கரிக்கு சிங்கம்;

  • இது நிருவிகற்பம்; இறைவனின் தோற்றம்;

  • இது யாவற்றிலும் உத்தமமானது; இது மாயையினைக் கடந்தது;

  • இது கடலரசனின் இரகசியம்; தியாகராஜன் நண்ணியது.



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
பாஹி/ கல்யாண/ ராம/ பாவன/ கு3ண/ ராம
காவாய்/ கல்யாண/ ராமா/ புனித/ குண/ ராமா/


சரணம்
சரணம் 1
நா/ ஜீவ/-ஆதா4ரமு/ நா/ ஸு14/-ஆகாரமு/ (பா)
எனது/ வாழ்வின்/ அடிப்படை/ எனது/ இனிய/ உருவம்/


சரணம் 2
நா/ நோமு/ ப2லமு/ நா/ மேனு/ ப3லமு/ (மா)
எனது/ நோன்பின்/ பயன்/ எனது/ உடல்/ வலிமை/


சரணம் 3
நா/ வம்ஸ1/ த4னமு/ நாது3/-ஐதோ3-தனமு/ (பா)
எனது/ குல/ செல்வம்/ எனது/ மங்களம்/


சரணம் 4
நா/ சித்த/-ஆனந்த3மு/ நா/ ஸுக2/ கந்த3மு/ (பா)
எனது/ உள்ள/ களிப்பு/ எனது/ சுகத்தின்/ மூலம்/


சரணம் 5
நாது3/ ஸந்தோஷமு/ நா/ முத்3து3/ வேஷமு/ (பா)
எனது/ மகிழ்ச்சி/ எனது/ இனிய/ வேடம்/


சரணம் 6
நா/ மனோ/ ஹரமு/ நாது3/ ஸ்1ரு2ங்கா3ரமு/ (பா)
எனது/ மனத்தை/ பறித்தவன்/ எனது/ சிங்காரம்/


சரணம் 7
நா/-பாலி/ பா4க்3யமு/ நாது3/ வைராக்3யமு/ (பா)
எனது/ பங்கிற்/ பேறு/ எனது/ பற்றற்ற தன்மை/


சரணம் 8
நாது3/ ஜீவனமு/ நாது3/ யௌவனமு/ (பா)
எனது/ வாழ்வு/ எனது/ இளமை/


சரணம் 9
ஆக3ம/ ஸாரமு/ அஸுர/ தூ3ரமு/ (பா)
ஆகமங்களின்/ சாரம்/ அரக்கருக்கு/ தூரம்/


சரணம் 10
முல்லோக/ ஆதா4ரமு/ முத்யால/ ஹாரமு/ (பா)
மூவுலகுக்கும்/ ஆதாரம்/ முத்து/ மாலை/


சரணம் 11
தே3வ-ஆதி3/ தை3வமு/ து3ர்ஜன/-அபா4வமு/ (பா)
வானோருக்கு/ இறைவன்/ தீயோரை/ யொறுத்தவன்/


சரணம் 12
பரமைன ப்3ரஹ்மமு/ பாப/-இப4/ ஸிம்ஹமு/ (பா)
பரம்பொருள்/ பாவங்களெனும்/ கரிக்கு/ சிங்கம்/


சரணம் 13
இதி3/ நிர்விகல்பமு/ ஈஸ்1வர/ ஜன்மமு/ (பா)
இது/ நிருவிகற்பம்/ இறைவனின்/ தோற்றம்/


சரணம் 14
இதி3/ ஸர்வ/-உன்னதமு/ இதி3/ மாய/-அதீதமு/ (பா)
இது/ யாவற்றிலும்/ உத்தமமானது/ இது/ மாயையினை/ கடந்தது/


சரணம் 15
ஸாக3ர/ கு3ப்தமு/ த்யாக3ராஜ/ ஆப்தமு/ (பா)
கடலரசனின்/ இரகசியம்/ தியாகராசன்/ நண்ணியது/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)

மேற்கோள்கள்

விளக்கம்
இப்பாடல் ப்ரஹ்லாத பக்தி விஜயம் எனப்படும் நாட்டிய நாடகத்தில் ப்ரஹ்லாதன் பாடுவதாக.

1 - 3தோ3-தனமு - தெலுங்கு மொழியில் 'ஐதோ-தனம்' என்பது திருமணமான சுமங்கலியைக் குறிக்கும். இச்சொல்லுக்கு ஐந்து அலங்காரப் பொருள்களையுடையவள் என்று பொருள். ஐந்து பொருள்களாவது - தாலி, மஞ்சள், குங்குமம், வளையல்கள், காதணி - பனையோலையினாலானது. இப்பனையோலைக் காதணிக்கு வடமொழியில் 'தாடங்கம்' என்று பெயர். தாடங்கத்தின் மகிமையைப் பற்றி 'ஸௌந்தர்ய லஹரி'யில் கூறப்பட்டுள்ளது. இதுபற்றிய காஞ்சி மகாமுனிவரின் விரிவுரை நோக்கவும்.
Top

2 - நிர்விகல்பமு - வேறுபாடற்ற சமாதி நிலையைக் குறிக்கும் - பதஞ்சலி யோக சூத்திரம் நோக்கவும். ப்ரஹ்லாதன் 5000 ஆண்டுகள் நிர்விகல்ப ஸமாதியில் இருந்ததாகக் கூறப்படுகின்றது். இது குறித்து ஸ்வாமி சிவாநந்தாவின் விளக்கவுரை (பக்கம் 59) நோக்கவும்.

3 - ஈஸ்1வர ஜன்மமு - ஈஸ்வரன் - இறைவனின் இலக்கணத்தினை பதஞ்சலி யோக சூத்திரத்தில் நோக்கவும்.
Top

4 - மாயாதீதமு - மாயையினைக் கடந்த நிலை - இது குறித்து பகவத் கீதை, அத்தியாயம் 7, 14-வது செய்யுள் நோக்கவும்.

கண்ணன் கூறியது - "(முக்)குணங்கள் உடைத்த எனது மாயை கடத்தற்கரியது; எனது தொண்டு பூண்டவர்கள் மட்டுமே இதனைக் கடக்கவியலும்." (ஸ்வாமி ஸ்வரூபாநந்தாவின் ஆங்கில உரையின் தமிழாக்கம்).

5 - த்யாக3ராஜாப்தமு - சில புத்தகங்களில் இச்சொல்லுக்கு 'தியாகராஜனின் நண்பன்' என்று பொருள் கூறப்பட்டுள்ளது. 'ஆப்த' அல்லது 'ஆப்துடு' என்ற சொல்லுக்கு அத்தகைய பொருள் கொள்ளலாம். ஆனால் 'ஆப்தமு' என்ற சொல்லுக்கு 'நண்ணியது' என்ற பொருள் பொருந்தும்.

Top


Updated on 24 Dec 2008

No comments: