Monday, December 22, 2008

நித்ய ரூப - ராகம் காபி - Nitya Roopa, Raga Kaapi

பல்லவி
நித்ய ரூப எவரி பாண்டி3த்யமேமி நடு3சுரா

அனுபல்லவி
1ஸத்யமைனயாக்3 மீர ஸாமர்த்2யமு கலதா3 (நி)

சரணம்
பா4னு பக3லு 2ரேயி 3ரத்ன ஸானு ஜுட்டடா3
பூனி 4ஸே1ஷுட3மித பா4ர பூ4மி மோயடா3
வீனுலந்து3 5காஸீ1 பதி நீ நாமமு பல்கடா3
மானி த்யாக3ராஜ வினுத 6மஹிமாஸ்பத3மகு3 நீ முந்து3 (நி)


பொருள் - சுருக்கம்
அழிவற்ற உருவே! தியாகராசனால் போற்றப் பெற்ற மேலோனே!
மகிமைகளின் மூலமான உன்னெதிரில் எவர் புலமையென்ன செல்லுமய்யா? மெய்யான ஆணையை மீறத் திறமையுண்டா?
பரிதி, பகலிரவாக மேருவைச் சுற்றானா? உறுதிபூண்டு, சேடன், மிக்கு பளுவான புவியைத் தாங்கானா? காதுகளில், காசிபதி, உனது நாமத்தினைப் பகரானா?


பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
நித்ய/ ரூப/ எவரி/ பாண்டி3த்யமு/-ஏமி/ நடு3சுரா/
அழிவற்ற/ உருவே/ எவர்/ புலமை/ யென்ன/ செல்லுமய்யா/


அனுபல்லவி
ஸத்யமைன/-ஆக்3ஞ/ மீர/ ஸாமர்த்2யமு/ கலதா3/ (நி)
மெய்யான/ ஆணையை/ மீற/ திறமை/ யுண்டா/


சரணம்
பா4னு/ பக3லு/ ரேயி/ ரத்ன ஸானு/ ஜுட்டடா3/
பரிதி/ பகல்/ இரவாக/ மேருவை/ சுற்றானா/

பூனி/ ஸே1ஷுடு3/-அமித/ பா4ர/ பூ4மி/ மோயடா3/
உறுதிபூண்டு/ சேடன்/ மிக்கு/ பளுவான/ புவியை/ தாங்கானா/

வீனுலு-அந்து3/ காஸீ1/ பதி/ நீ/ நாமமு/ பல்கடா3/
காதுகளில்/ காசி/ பதி/ உனது/ நாமத்தினை/ பகரானா/

மானி/ த்யாக3ராஜ/ வினுத/ மஹிம/-ஆஸ்பத3மகு3/ நீ/ முந்து3/ (நி)
மேலோனே/ தியாகராசனால்/ போற்றப்பெற்ற/ மகிமைகளின்/ மூலமான/ உன்/ எதிரில்/ அழிவற்ற..


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
2 - ரேயி - ரேயு - இவ்விடம் இச்சொல்லுக்கு 'இரவு' என்று பொருள். பிற்குறிப்பிட்ட சொல்லுக்கு அப்படிப்பட்ட பொருளேதுமில்லை எனவே 'ரேயி' ஏற்கப்பட்டது.

Top
மேற்கோள்கள்
3 - ரத்ன ஸானு - மேரு மலை - வட துருவம் தான் மேருமலை என்று கூறுவர். மேரு மலை-1 மற்றும் மேரு மலை-2 நோக்குக.

4 - ஸே1ஷுடு3 - சேடன் - அரி துயிலுமரவு - சேடன் புவியினைத் தாங்குவதாக புராணங்கள் கூறும்.

5 - காஸீ1 பதி - காசிபதி - சிவன் - காசியில் மரணமடைவோருக்கு, மரணத் தறுவாயில் சிவன் மோக்ஷமளிக்கும் 'ராம' என்னும் தாரக நாமத்தினைக் காதுகளில் ஓதுவதாக முக்திகா உபநிடதம் கூறும்.
Top

விளக்கம்
1 - ஸத்யமைனயாக்3 - மெய்யான ஆணை - கடோ2பநிடதச் செய்யுள், II.iii. நோக்குக –
"அவனுக்கு அஞ்சி நெருப்பு எரிகின்றது; அவனுக்கு அஞ்சி பகலவன் ஒளிர்கின்றான்; அவனுக்கு அஞ்சி இந்திரன், காற்று, மற்றும் நமனும் ஓடுகின்றனர்." (Swami Gambhirananda வின் ஆங்கில உரையின் தமிழாக்கம்)

6 - மஹிமாஸ்பத3மகு3 - மகிமைகளின் மூலமாகிய - தியாகராஜர் தனது 'நாரத கா3ன லோல' என்ற 'அடாணா' ராகப் பாடலில் கூறுவது -
"நீயின்றி எந்த உடல் நிலையாக நடக்கும்? நீயின்றி எந்த மரங்கள் திண்ணமாக முளைக்கும்? நீயின்றி எந்த மழை தவறாது பெய்யும்? நீயின்றி தியாகராஜன் உனது பண்புகளை எங்ஙனம் பாடுவான்?"

ப்3ரு2ஹதா3ரண்ய உபநிடதம் - செய்யுள் (III.vii.15) நோக்கவும்
"எவன் அனைத்துயிர்களிலும் உறைகின்றானோ, ஆயின் உள்ளுறையும் எவனை அவ்வுயிர்கள் அறியாவோ, எவனுடைய உடம்பு அவ்வுயிர்கள் ஆமோ, உள்ளிருந்துகொண்டு எவன் அவ்வுயிர்களை இயக்குகின்றானோ, அவனே உள்ளியங்கும் அரசன், உன்னது அழிவற்ற ஆன்மா." (Swami Madhavandanda-வின் ஆங்கில உரையின் தமிழாக்கம்.)

Top



Updated on 23 Dec 2008

No comments: