பாஹி பரம த3யாளோ ஹரே மாம்
சரணம்
சரணம் 1
ஸுந்த3ரானன முகுந்த3 ராக4வ
புரந்த3ராதி3 நுத மந்த3ராக3 த4ர (பா)
சரணம் 2
பங்கஜாப்த ஹரிணாங்க நயன
ஸ்ரீதா3ங்க ஸு-கு3ண 1மகராங்க ஜனக மாம் (பா)
சரணம் 3
க்ரூர மானவ 2விதா3ர ப4வ்ய-கர
நீரதா3ப4 ஸு-ஸ1ரீர மா-ரமண (பா)
சரணம் 4
3நிர்விகார கு3ண ஸர்வ ரூப த4ர
4பூர்வ தே3வ மத3 க3ர்வ ப4ஞ்ஜன (பா)
சரணம் 5
பூர்ண ரூப கலஸா1ர்ணவ ஸ்தி2த ஸு-
பர்ண வாஹன ஸுவர்ண சேல மாம் (பா)
சரணம் 6
ரக்ஷ மாமனிஸ1மக்ஷராம்ரு2த
ரஸாக்ஷ நிர்ஜர ஸு-பக்ஷ சாப த4ர (பா)
சரணம் 7
ரங்க3 நாயக ஸு1பா4ங்க3 ஸூர்ய குல
புங்க3வாரி மத3 ப4ங்க3 ஸர்வதா3 (பா)
சரணம் 8
நாக3 ஸ1யன ப4வ ரோக3 நாஸ1 5க்ரு2பா
ராக3தே3 வரத3 த்யாக3ராஜ நுத (பா)
பொருள் - சுருக்கம்
- பரம தயாளனே! அரியே!
- எழில் வதனத்தோனே! முகுந்தா! இராகவா! புரந்தராதியரால் போற்றப்பெற்றோனே! மந்தர மலையைச் சுமந்தோனே!
- பரிதி, மதி கண்களோனே! இலக்குமியமர் மடியோனே! நற்பண்புடையோனே! காமனையீன்றோனே!
- கொடிய மானவர்களை யழித்தோனே! பேறரருள்வோனே! கார்முகில் வண்ண எழலுடலோனே! மாரமணா!
- மாற்றமற்றோனே! குணங்களற்றோனே! அனைத்துருவுமேந்துவோனே! அரக்கர் மதச் செருக்கினை யொடுக்கியோனே!
- பூரண உருவத்தோனே! கலசக் கடலிலுறைவோனே! கருட வாகனனே! பொன்னாடையணிவோனே!
- அழிவற்றோனே! அமுதச்சாறு கண்களோனே! தளரா தோள்களோனே! வில்லேந்துவோனே!
- அரங்க நாயகா! மங்கள அங்கமுடைத்தோனே! சூரிய குலத்தின் தலையாய எதிரியின் செருக்கையடக்கியோனே!
- அரவணைத் துயில்வோனே! பிறவி நோயைக் களைவோனே! கருணை மணியே! வரமருள்வோனே! தியாகராசனால் போற்றப்பெற்றோனே!
எவ்வமயமும் என்னைக் காப்பாய்.
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
பாஹி/ பரம/ த3யாளோ/ ஹரே/ மாம்/
காப்பாய்/ பரம/ தயாளனே/ அரியே/ என்னை
சரணம்
சரணம் 1
ஸுந்த3ர/-ஆனன/ முகுந்த3/ ராக4வ/
எழில்/ வதனத்தோனே/ முகுந்தா/ இராகவா/
புரந்த3ர/-ஆதி3/ நுத/ மந்த3ர/-அக3/ த4ர/ (பா)
புரந்தரன்/ ஆகியோரால்/ போற்றப்பெற்றோனே/ மந்தர/ மலையை/ சுமந்தோனே/
சரணம் 2
பங்கஜ-ஆப்த/ ஹரிண-அங்க/ நயன/
கமல-நண்பன் (பரிதி)/ மான்-சின்னமுடைத்த (மதி)/ கண்களோனே/
ஸ்ரீ-த3/-அங்க/ ஸு-கு3ண/ மகர-அங்க/ ஜனக/ மாம்/ (பா)
செல்வம்-அருள்பவள் (இலக்குமி)/ அமர் மடியோனே/ நற்பண்புடையோனே/ மகர-சின்னத்தோன் (காமன்)/ ஈன்றோனே/ என்னை/...
சரணம் 3
க்ரூர/ மானவ/ விதா3ர/ ப4வ்ய/-கர/
கொடிய/ மானவர்களை/ யழித்தோனே/ பேறு /அருள்வோனே!
நீரத3/-ஆப4/ ஸு-ஸ1ரீர/ மா/-ரமண/ (பா)
கார்முகில்/ வண்ண (நிகர்)/ எழலுடலோனே/ மா/ ரமணா/
சரணம் 4
நிர்விகார/ (நிர்)கு3ண/ ஸர்வ/ ரூப/ த4ர/
மாற்றமற்றோனே/ குணங்களற்றோனே/ அனைத்து/ உருவும்/ ஏந்துவோனே/
பூர்வ-தே3வ/ மத3/ க3ர்வ/ ப4ஞ்ஜன/ (பா)
முன்னாள் தேவர்கள் (அரக்கர்)/ மத/ செருக்கினை/ யொடுக்கியோனே/
சரணம் 5
பூர்ண/ ரூப/ கலஸ1/-அர்ணவ/ ஸ்தி2த/
பூரண/ உருவத்தோனே/ கலச/ கடலில்/ உறைவோனே!
ஸு-பர்ண/ வாஹன/ ஸுவர்ண/ சேல/ மாம்/ (பா)
சிறந்த இறக்கையோன் (கருடன்)/ வாகனனே/ பொன்/ ஆடை யணிவோனே/ என்னை/...
சரணம் 6
ரக்ஷ/ மாம்/-அனிஸ1ம்/-அக்ஷர/-அம்ரு2த/
காப்பாய்/ என்னை/ எவ்வமயமும்/ அழிவற்றோனே/ அமுத/
ரஸ/-அக்ஷ/ நிர்ஜர/ ஸு-பக்ஷ/ சாப/ த4ர/ (பா)
சாறு/ கண்களோனே/ தளரா/ தோள்களோனே/ வில்/ ஏந்துவோனே/
சரணம் 7
ரங்க3/ நாயக/ ஸு1ப4/-அங்க3/ ஸூர்ய/ குல/
அரங்க/ நாயகா/ மங்கள/ அங்கமுடைத்தோனே/ சூரிய/ குலத்தின்/
புங்க3வ/-அரி/ மத3/ ப4ங்க3/ ஸர்வதா3/ (பா)
தலையாய/ எதிரியின்/ செருக்கை/ யடக்கியோனே/ எவ்வமயமும்/ என்னை...
சரணம் 8
நாக3/ ஸ1யன/ ப4வ/ ரோக3/ நாஸ1/ க்ரு2பா/
அரவணை/ துயில்வோனே/ பிறவி/ நோயை/ களைவோனே/ கருணை/
ராக3தே3/ வரத3/ த்யாக3ராஜ/ நுத/ (பா)
மணியே/ வரமருள்வோனே/ தியாகராசனால்/ போற்றப்பெற்றோனே/
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
2 - விதா3ர - ரதா4ர - 'ர' என்ற சொல்லுக்கு 'நெருப்பு' என்றும், 'தா4ர' என்ற சொல்லுக்கு 'மழை' என்றும் பொருள் உண்டு. 'ரதா4ர' சரியானால், தியாகராஜர் 'தீய மானவரெனும் நெருப்பினை அணைக்கும் மழை' என்று கூறுவதாகக் கொள்ளலாம்
5 - க்ரு2பா ராக3தே3 - க்ரு2பா ஸாக3ர - கருணை மணியே - 'கருணைக் கடலே' என்றும் கொள்ளலாம். 'ராக3த3' என்ற சொல்லுக்கு 'பளிங்கு' என்று பொருள். 'பளிங்கு' 'மணி' (ரத்தினம்) வகையைச் சேர்ந்தது. சிந்தாமணி விரும்பியதை வழங்கும் என நம்புவர். அது போன்று 'கருணை மணி' என்ற பொருளில் கூறப்படுவதாகக் கொள்ளலாம். பளிங்கு மற்றும் ரத்தினங்கள் - இவைகளின் விவரங்கள் காண்க.
Top
மேற்கோள்கள்
1 - மகராங்க - மகர சின்னத்தோன் - காமன்
4 - பூர்வ தே3வ - தைத்யர்கள் 'திதி'யின் மைந்தர்கள்; தானவர்கள் 'தனு'வின் மைந்தர்கள். திதியும், தனுவும் கசியப முனிவரின் மனைவியர். இரு தாய் மக்களுக்கும் 'தேவர்கள்' என்று பெயர். அவர்களிடை பகை இருந்தது. இரு சாராரும் சேர்ந்தே பாற்கடலைக் கடைந்து அமுது பெற்றனர். ஆனால் தானவர்களுக்கு அமுது கிடைக்காமல் வஞ்சனை செய்யப்பட்ட பின்னர் அவர்களின் பகை தீராததாகியது. அதனால் 'தானவர்கள்' 'முன்னாள் தேவர்கள்' எனப்படுவர். பொதுவாக தானவர்களை அரக்கரென்பர். இது குறித்து ஸ்ரீமத்-பாகவதம், 8-வது புத்தகம், 6-11 அத்தியாயங்கள் நோக்குக.
Top
விளக்கம்
3 - நிர்விகார கு3ண - 'நிர்' எனும் prefix 'விகார' 'குண' ஆகிய இரு சொற்களுக்கும் பொதுவாகும். அன்றேல், 'குண' என்ற சொல்லுக்கு தனிப்பட்ட பொருள் கூறவியலாது. 'நிர்விகார குண' என்று சேர்த்தும் பொருள் கூறுவது முரண்பாடாகும்
புரந்தராதியர் - இந்திரன் முதலானோர்
மா - இலக்குமி
கலசக்கடல் - பாற்கடல்
தளரா தோள்களோனே - 'வானோர் பக்கமிருப்போனே' என்றும் கொள்ளலாம்.
சூரிய குலத்தின் தலையாய எதிரி - இராவணன்
Top
Updated on 25 Dec 2008
No comments:
Post a Comment