Showing posts with label Surati Raga. Show all posts
Showing posts with label Surati Raga. Show all posts

Wednesday, August 26, 2009

தியாகராஜ கிருதி - ஸ்1ரு2ங்கா3ரிஞ்சுகொனி - ராகம் ஸுரடி - Srngaarinchukoni - Raga Surati - Nauka Charitram

பல்லவி
ஸ்1ரு2ங்கா3ரிஞ்சுகொனி வெட3லிரி ஸ்ரீ க்ரு2ஷ்ணுனிதோனு

அனுபல்லவி
அங்க3-ரங்க3 வைபோ43முதோ
கோ3பாங்க3னாமணுலெந்தோ ஸொக3ஸுக3 (ஸ்1ரு2)

சரணம்
சரணம் 1
1நவ்வுசு குலுகுசுனொகதெ 2கொப்புன
புவ்வுல
3முடு3சுசுனொகதெ
து3வ்வுசு குருலனுனொகதெ க்ரு2ஷ்ணுனி
ரவ்வ ஜேயுசுனொகதெ வேட்3கக3 (ஸ்1ரு2)


சரணம் 2
மக3டு3 வீட3னுசுனொகதெ 4ரவிகயு
பி3கு3வுன ஜேர்சுசுனொகதெ
5தகு3னு தனகனுசுனொகதெ பாத3
யுக3முலனொத்துசுனொகதெ வேட்3கக3 (ஸ்1ரு2)


சரணம் 3
6ஸொக்குசு ஸோலுசுனொகதெ க்ரு2ஷ்ணுனி
க்3ரக்குன முத்3தி3டு3னொகதெ
பக்ககு3 ரம்மனுசுனொகதெ மடு3புல-
னக்கரனொஸகு3சுனொகதெ வேட்3கக3 (ஸ்1ரு2)


சரணம் 4
பரிமளமுலந்து3சுனொகதெ ஸ்ரீ
ஹரி ஹரியனுசுனுனொகதெ
7உரமுன ஜேர்சுசுனொகதெ பய்யெத3
ஜரிபி வேடு3கொனுசுனொகதெ வேட்3கக3 (ஸ்1ரு2)


சரணம் 5
ஸாரஸாக்ஷயனுசுனொகதெ கனு
ஸைக3னு பிலுசுசுனொகதெ
ராராயனுசுனுனொகதெ த்யாக3-
ராஜ ஸகு23னுசுனொகதெ வேட்3கக3 (ஸ்1ரு2)


பொருள் - சுருக்கம்
  • சிங்காரித்துக் கொண்டு புறப்பட்டனர், கண்ணனுடன்;

  • சீரும் சிறப்பும், கொண்டாட்டமுமாக, ஆயர் பெண்மணிகள், மிக்கு சொகுசாக சிங்காரித்துக் கொண்டு புறப்பட்டனர், கண்ணனுடன்;


    • சிரித்துக்கொண்டும் குலுக்கிக்கொண்டுமொருத்தி,

    • கொண்டையில் மலர்களை முடித்துக்கொண்டொருத்தி,

    • சுருளல்களைச் சீவிக்கொண்டொருத்தி,

    • கண்ணனை கேலி செய்துகொண்டொருத்தி,


    • கணவன் இவனென்றொருத்தி,

    • இரவிக்கையை இறுக்கமாகக் கட்டிக்கொண்டொருத்தி,

    • தகுந்தவன் தனக்கென்றொருத்தி,

    • திருவடி இணையினை ஒற்றிக்கொண்டொருத்தி,


    • தட்டுத் தடுமாறிக் கொண்டொருத்தி,

    • கண்ணனுக்கு திடீரென முத்தமிட்டொருத்தி,

    • பக்கத்தில் வாராயென்றொருத்தி,

    • (வெற்றிலைச்)சுருள்களை அக்கறையுடன் அளித்துக்கொண்டொருத்தி,


    • வாசனைகளை யளித்துக்கொண்டொருத்தி,

    • 'அரி அரி' யென்றொருத்தி,

    • மார்போடணைத்துக் கொண்டொருத்தி,

    • மேலாடையை நகர்த்தி வேண்டிக்கொண்டொருத்தி,


    • 'கமலக்கண்ணா' யென்றொருத்தி,

    • கண் சைகையினால் அழைத்துக் கொண்டொருத்தி,

    • வாடாயென்றொருத்தி,

    • தியாகராசனின் நண்பன் (இவன்) என்றொருத்தி,


  • வேடிக்கையாக, சிங்காரித்துக் கொண்டு, புறப்பட்டனர், கண்ணனுடன்.



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ஸ்1ரு2ங்கா3ரிஞ்சுகொனி/ வெட3லிரி/ ஸ்ரீ க்ரு2ஷ்ணுனிதோனு/
சிங்காரித்துக் கொண்டு/ புறப்பட்டனர்/ கண்ணனுடன்/


அனுபல்லவி
அங்க3-/ரங்க3/ வைபோ43முதோ/
சீரும்/ சிறப்பும்/ கொண்டாட்டமுமாக/

கோ3ப/-அங்க3னாமணுலு/-எந்தோ/ ஸொக3ஸுக3/ (ஸ்1ரு2)
ஆயர்/ பெண்மணிகள்/ மிக்கு/ சொகுசாக/ சிங்காரித்து...


சரணம்
சரணம் 1
நவ்வுசு/ குலுகுசுனு/-ஒகதெ/ கொப்புன/
சிரித்துக்கொண்டும்/ குலுக்கிக்கொண்டும்/ ஒருத்தி/ கொண்டையில்/

புவ்வுல/ முடு3சுசுனு/-ஒகதெ/
மலர்களை/ முடித்துக்கொண்டு/ ஒருத்தி/

து3வ்வுசு/ குருலனு/-ஒகதெ/ க்ரு2ஷ்ணுனி/
சீவிக்கொண்டு/ சுருளல்களை/ ஒருத்தி/ கண்ணனை/

ரவ்வ/ ஜேயுசுனு/-ஒகதெ/ வேட்3கக3/ (ஸ்1ரு2)
கேலி/ செய்துகொண்டு/ ஒருத்தி/ வேடிக்கையாக/ சிங்காரித்து...


சரணம் 2
மக3டு3/ வீடு3/-அனுசுனு/-ஒகதெ/ ரவிகயு/
கணவன்/ இவன்/ என்று/ ஒருத்தி/ இரவிக்கையை/

பி3கு3வுன/ ஜேர்சுசுனு/-ஒகதெ/
இறுக்கமாக/ கட்டிக்கொண்டு/ ஒருத்தி/

தகு3னு/ தனகு/-அனுசுனு/-ஒகதெ/ பாத3/
தகுந்தவன்/ தனக்கு/ என்று/ ஒருத்தி/ திருவடி/

யுக3முலனு/-ஒத்துசுனு/-ஒகதெ/ வேட்3கக3/ (ஸ்1ரு2)
இணையினை/ ஒற்றிக்கொண்டு/ ஒருத்தி/ வேடிக்கையாக/ சிங்காரித்து...


சரணம் 3
ஸொக்குசு/ ஸோலுசுனு/-ஒகதெ/ க்ரு2ஷ்ணுனி/
தட்டுத்/ தடுமாறிக் கொண்டு/ ஒருத்தி/ கண்ணனுக்கு/

க்3ரக்குன/ முத்3து3/-இடு3/-ஒகதெ/
திடீரென/ முத்தம்/ இட்டு/ ஒருத்தி/

பக்ககு3/ ரம்மு/-அனுசுனு/-ஒகதெ/ மடு3புலனு/-
பக்கத்தில்/ வாராய்/ என்று/ ஒருத்தி/ (வெற்றிலைச்)சுருள்களை/

அக்கரனு/-ஒஸகு3சுனு/-ஒகதெ/ வேட்3கக3/ (ஸ்1ரு2)
அக்கறையுடன்/ அளித்துக்கொண்டு/ ஒருத்தி/ வேடிக்கையாக/ சிங்காரித்து...


சரணம் 4
பரிமளமுலு/-அந்து3சுனு/-ஒகதெ/
வாசனைகளை/ அளித்துக்கொண்டு/ ஒருத்தி/

ஸ்ரீ ஹரி/ ஹரி/-அனுசுனு/-ஒகதெ/
'அரி/ அரி'/ யென்று/ ஒருத்தி/

உரமுன/ ஜேர்சுசுனு/-ஒகதெ/ பய்யெத3/
மார்போடு/ அணைத்துக் கொண்டு/ ஒருத்தி/ மேலாடையை/

ஜரிபி/ வேடு3கொனுசுனு/-ஒகதெ/ வேட்3கக3/ (ஸ்1ரு2)
நகர்த்தி/ வேண்டிக்கொண்டு/ ஒருத்தி/ வேடிக்கையாக/ சிங்காரித்து...


சரணம் 5
ஸாரஸ/-அக்ஷ/-அனுசுனு/-ஒகதெ/ கனு/
'கமல/ கண்ணா/ யென்று/ ஒருத்தி/ கண்/

ஸைக3னு/ பிலுசுசுனு/-ஒகதெ/
சைகையினால்/ அழைத்துக் கொண்டு/ ஒருத்தி/

ராரா/-அனுசுனு/-ஒகதெ/ த்யாக3ராஜ/
வாடா/ என்று/ ஒருத்தி/ தியாகராசனின்/

ஸகு2டு3/-அனுசுனு/-ஒகதெ/ வேட்3கக3/ (ஸ்1ரு2)
நண்பன் (இவன்)/ என்று/ ஒருத்தி/ வேடிக்கையாக/ சிங்காரித்து...


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - நவ்வுசு - நவ்வுலு : இவ்விடத்தில் 'நவ்வுசு' சரியான சொல்லாகும்.

3 - முடு3சுசுனு - முடு3குசுனு : 'முடு3குசுனு' சரியான சொல்லாகத் தோன்றவில்லை.

4 - ரவிகயு - ரவிகெ.

5 - தகு3னு - தனுவு : இவ்விடத்தில் 'தகு3னு' பொருந்தும்.

7 - உரமுன ஜேர்சுசுனு - உரமுன ஜொச்சுசுனு : இவ்விடத்தில் 'உரமுன ஜேர்சுசுனு' சரியான சொல்லாகும்.

Top

மேற்கோள்கள்

விளக்கம்
2 - கொப்புன புவ்வுல முடு3சுசுனு து3வ்வுசு குருலனு - கொண்டையில் மலர்களை முடித்துக்கொண்டு - முடிச் சுருளல்களைச் சீவிக்கொண்டு - இவை கோபியர் தங்களுக்கு செய்து கொள்வதாகவோ அல்லது கண்ணனுக்குச் செய்வதாகவோ கொள்ளலாம்.

6 - ஸொக்குசு ஸோலுசுனு - தட்டுத் தடுமாறிக் கொண்டு - பரவசத்தினால்

இந்தப் பாடல் 'நௌக சரித்ரம்' (ஓடக்கதை) எனப்படும் நாட்டிய நாடகத்தின் முதல் பாடலாகும். ஆயர் பெண்மணி்கள் யமுனைக் கரைக்குக் கண்ணனுடன் செல்லும் அழகினை தியாகராஜர் வருணிக்கின்றார்.

Top


Updated on 26 Aug 2009

Tuesday, August 25, 2009

தியாகராஜ கிருதி - வேரெவ்வரே க3தி - ராகம் ஸுரடி - Verevvere Gati - Raga Surati

பல்லவி
வேரெவ்வரே க3தி 1வேமாருலகு ஸீதா பதி

அனுபல்லவி
ஈரேடு3 லோகமுலகாதா4ருட3கு3 நின்னு வினா (வேரெ)

சரணம்
ப்3ரு2ந்தா3ரகாதி3 முனி ப்3ரு2ந்த3 ஸு1க ஸனக
ஸனந்த3ன ஸ்ரீ நாரதா3ரவிந்தோ3த்342ஸ்ரீ ப4
புரந்த3ருலகு த்யாக3ராஜுனிகி நின்னு வினா (வேரெ)


பொருள் - சுருக்கம்
சீதாபதி!
  • வேறெவரே புகல்? ஆயிரம் முறை நீயே;

  • ஈரேழுலகங்களுக்கும் ஆதாரமாகிய உன்னையன்றி, வேறெவரே புகல்?

  • வானோர் முதலாக, முனிவர்கள், சுகர், சனகர், சனந்தனர், நாரதர், மலரோன், சிவன், புரந்தரன் ஆகியோருக்கும், தியாகராசனுக்கும் உன்னையன்றி வேறெவரே புகல்?



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
வேரு/-எவ்வரே/ க3தி/ வே/மாருலகு/ ஸீதா/ பதி/
வேறு/-எவரே/ புகல்/ ஆயிரம்/ முறை/ (நீயே) சீதா/ பதி/


அனுபல்லவி
ஈரு/-ஏடு3/ லோகமுலகு/-ஆதா4ருட3கு3/ நின்னு/ வினா/ (வேரெ)
ஈர்/-ஏழு/ உலகங்களுக்கும்/ ஆதாரமாகிய/ உன்னை/ அன்றி/ வேறெவரே...


சரணம்
ப்3ரு2ந்தா3ரக/-ஆதி3/ முனி ப்3ரு2ந்த3/ ஸு1க/ ஸனக/
வானோர்/ முதலாக/ முனிவர்கள்/ சுகர்/ சனகர்/

ஸனந்த3ன/ ஸ்ரீ நாரத3/-அரவிந்த3-உத்34வ/ ஸ்ரீ ப4வ/
சனந்தனர்/ ஸ்ரீ நாரதர்/ மலரோன்/ ஸ்ரீ சிவன்/

புரந்த3ருலகு/ த்யாக3ராஜுனிகி/ நின்னு/ வினா/ (வேரெ)
புரந்தரன் ஆகியோருக்கும்/ தியாகராசனுக்கும்/ உன்னை/ அன்றி/ வேறெவரே...


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
2 - ஸ்ரீ ப4 - ப4வ.

மேற்கோள்கள்

விளக்கம்
1 - வேமாருலகு - ஆயிரம் முறை - ஐயமற.

சனகர், சனந்தனர் - பிரமனின் புதல்வர்கள்

மலரோன் - பிரமன்

புரந்தரன் - இந்திரன்

Top


Updated on 26 Aug 2009

தியாகராஜ கிருதி - ராம தை3வமா - ராகம் ஸுரடி - Rama Daivamaa - Raga Surati

பல்லவி
ராம தை3வமா 1ராக ராக லோப4மா

அனுபல்லவி
மோமு ஜூபுமா ஜக3ன்-மோஹன-கரமா (ராம)

சரணம்
சரணம் 1
தொ3ங்க3 ஜாட3லேல இல்லு ப3ங்கா3ராயெனா
2ரங்க3டா3 விபீ4ஷணுனிகி 3பங்க3 நாமமிடி3 ரீதி (ராம)


சரணம் 2
வென்ன தா பு4ஜிஞ்சி 4கோ3ப கன்ய முக2முன
தின்னக3னலந்தி3னட்டு தீ3ன ரக்ஷகா ஸீதா (ராம)


சரணம் 3
நேர்பு ஜூபுமா அங்க3லார்பு பா3புமா
ஓர்பு க3ல்கு3 த்யாக3ராஜு ஒக பாரி ஸ1ரணண்டே (ராம)


பொருள் - சுருக்கம்
இராம தெய்வமா! பல்லுலகையும் மயக்குவோனே! எளியோரைக்காப்போனே! சீதாராம தெய்வமா!
  • வர வர கஞ்சத்தனமா?

  • கள்ளச் சைகைகளேனோ? இல்லம் பொன்னாகியதோ?

    • அரங்கன் அவ்விபீடணனுக்குப் பட்டை நாமமிட்டது போன்றும்,

    • வெண்ணை, தான் தின்று, இடைச்சியரின் முகத்தினில் நன்கு பூசியது போன்றும்,

  • வர வர கஞ்சத்தனமா?


  • முகத்தினைக் காட்டுவாய்.

  • திறமையைக் காட்டுவாய்.

  • துயரத்தைப் போக்குவாய்.


  • பொறுமையுடைத் தியாகராசன் ஒரு முறைப் புகலெனினும் வர வர கஞ்சத்தனமா?



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ராம/ தை3வமா/ ராக/ ராக/ லோப4மா/
இராம/ தெய்வமா/ வர/ வர/ கஞ்சத்தனமா/


அனுபல்லவி
மோமு/ ஜூபுமா/ ஜக3ன்/-மோஹன-கரமா/ (ராம)
முகத்தினை/ காட்டுவாய்/ பல்லுலகையும்/ மயக்குவோனே/


சரணம்
சரணம் 1
தொ3ங்க3/ ஜாட3லு/-ஏல/ இல்லு/ ப3ங்கா3ரு/-ஆயெனா/
கள்ள/ சைகைகள்/ ஏனோ/ இல்லம்/ பொன்/ ஆகியதோ/

ரங்க3டு3/-ஆ/ விபீ4ஷணுனிகி/ பங்க3/ நாமமு/-இடி3ன/ ரீதி/ (ராம)
அரங்கன்/ அந்த/ விபீடணனுக்கு/ பட்டை/ நாமம்/ இட்டது/ போன்று/ இராம...


சரணம் 2
வென்ன/ தா/ பு4ஜிஞ்சி/ கோ3ப கன்ய/ முக2முன/
வெண்ணை/ தான்/ தின்று/ இடைச்சியரின்/ முகத்தினில்/

தின்னக3னு/-அலந்தி3ன/-அட்டு/ தீ3ன/ ரக்ஷகா/ ஸீதா/ (ராம)
நன்கு/ பூசியது/ போன்று/ எளியோரை/ காப்போனே/ சீதா/ ராம...


சரணம் 3
நேர்பு/ ஜூபுமா/ அங்க3லார்பு/ பா3புமா/
திறமையை/ காட்டுவாய்/ துயரத்தை/ போக்குவாய்/

ஓர்பு/ க3ல்கு3/ த்யாக3ராஜு/ ஒக/ பாரி/ ஸ1ரணு/-அண்டே/ (ராம)
பொறுமை/ உடைய/ தியாகராசன்/ ஒரு/ முறை/ புகல்/ எனினும்/ இராம...


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - ராக ராக லோப4மா - எல்லா புத்தகங்களிலும், இதற்கு, 'வர வர (of late, gradually) கஞ்சத்தனமா' என்று பொருள் கொள்ளப்பட்டுள்ளது. 'வர வர' என்பதற்கு, தெலுங்கில், 'ரானு ரானு' என்று கூறுவர். மேலும், எல்லா புத்தகங்களிலும், 'ராக3 ராக3' என்றுதான் கொடுக்கப்பட்டுள்ளது. இதுவும் தவறாகும். புத்தகங்களில் கொடுக்கப்பட்டுள்ள பொருள் பாரம்பரியமாக வருகின்றதெனக் கருதி, அதனையே ஏற்றக்கொள்ளப்பட்டது. ஆயின், 'ராக3 ராக3' என்பதிற்கு பதிலாக 'ராக ராக' என்று மாற்றப்பட்டுள்ளது.

4 - கோ3ப கன்ய - கோ3பி கன்ய.

Top

மேற்கோள்கள்
2 - ரங்க3டு3 விபீ4ஷணுனிகி - அரங்கன் விபீடணனுக்கு - இராமனின் முடி சூட்டு விழாவுக்கு வந்திருந்த வீபீடணனுக்கு, இராமன், தன் குலத்தோர் வழிபடும் ரங்க விமானத்தினைப் பரிசாக அளித்தான். விமானத்தினை இலங்கைக்குக் கொண்டுசெல்கையில், மதியக் கடன்களுக்காக காவேரிக் கரையில் விபீடணன் கீழே வைத்துவிட்டான். அதனால் அரங்கன் அங்கேயே நிலைபெற்றான். இது குறித்து, திருவரங்கத் தல புராணம் நோக்கவும். இதனைத் தான், தியாகராஜர், 'விபீடணனை ஏமாற்றியது போன்று' என்று கேலி செய்கின்றார்.

Top

விளக்கம்
3 - பங்க3 நாமமிடி3 - பட்டை நாமமிட்ட - 'பட்டை நாமம்' என்பது வைணவர்கள் இடும் திருமண் சின்னத்தினைக் குறிக்கும். ஆனால், இச்சொல் 'ஏமாற்றுதலை'க் குறிப்பதாகச் சொல்வழக்கில் பயன்படுத்தப்படுகின்றது.

Top


Updated on 25 Aug 2009

Monday, August 24, 2009

தியாகராஜ கிருதி - ராமசந்த்3ர - ராகம் ஸுரடி - Ramachandra - Raga Surati

பல்லவி
ராமசந்த்3ர நீ த3ய ராமயேல ராத3

அனுபல்லவி
காம கோடி 1ஸுந்த3ராகார த்4ரு2த மந்த3
ப்ரேம மீர முந்த3ர பிலுவ ராகயுந்து3ரா (ரா)

சரணம்
சரணம் 1
கானனம்பு3 தாபமோ 2கைக மீதி3 கோபமோ
நேனு ஜேயு பாபமோ நீகு ஸ1க்தி 3லோபமோ (ரா)


சரணம் 2
4ஆட33ன்ன ரோஸமோ அல 5நாடு3பாஸமோ
மேட3 லேனி வாஸமோ மேமு ஜேயு தோ3ஸமோ (ரா)


சரணம் 3
கல்லலைன நேயமா கண்டே நீகு ஹேயமா
தல்லடி3ல்ல ந்யாயமா த்யாக3ராஜ கே3யமா (ரா)


பொருள் - சுருக்கம்
இராமசந்திரா! இராமா! மதன கோடி எழிலுருவத்தோனே! மந்தர மலையைச் சுமந்தோனே! தியாகராசனால் பாடப் பெற்றோனே!

  • உனது தயை ஏன் வாராதய்யா?

  • காதல் மீர அழைத்தால், எதிரில் வாராமலிருப்பரோ?


    • கானகத் துயரமோ?

    • கைகேயி மீதான கோபமோ?

    • நான் செய்யும் பாவமோ?

    • உனக்கு வல்லமை குறைவோ?

    • (அன்று) மனைவி பகன்ற நாணமோ?

    • அந்நாளையப் பட்டினியாலோ?

    • (அடவியில்) மேடையற்ற வாசத்தினாலோ?

    • யாம் செய்யும் குற்றமோ?


  • (எனது) கள்ளமான நேயமா?

  • கண்டாலுனக்கு வெறுப்போ?

  • (நான்) தடுமாறுதல் சரியாமோ?



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ராமசந்த்3ர/ நீ/ த3ய/ ராம/-ஏல/ ராது3-அய/
இராமசந்திரா/ உனது/ தயை/ இராமா/ ஏன்/ வாராதய்யா/


அனுபல்லவி
காம/ கோடி/ ஸுந்த3ர/-ஆகார/ த்4ரு2த/ மந்த3ர/
மதன/ கோடி/ எழில்/ உருவத்தோனே/ சுமந்தோனே/ மந்தர மலையை/

ப்ரேம/ மீர/ முந்த3ர/ பிலுவ/ ராக/-உந்து3ரா/ (ரா)
காதல்/ மீர/ எதிரில்/ அழைத்தால்/ வாராமல்/ இருப்பரோ/


சரணம்
சரணம் 1
கானனம்பு3/ தாபமோ/ கைக/ மீதி3/ கோபமோ/
கானக/ துயரமோ/ கைகேயி/ மீதான/ கோபமோ/

நேனு/ ஜேயு/ பாபமோ/ நீகு/ ஸ1க்தி/ லோபமோ/ (ரா)
நான்/ செய்யும்/ பாவமோ/ உனக்கு/ வல்லமை/ குறைவோ/


சரணம் 2
ஆட3தி3/-அன்ன/ ரோஸமோ/ அல/ நாடு3/-உபாஸமோ/
(அன்று) மனைவி/ பகன்ற/ நாணமோ/ அந்த/ நாளைய/ பட்டினியாலோ/

மேட3/ லேனி/ வாஸமோ/ மேமு/ ஜேயு/ தோ3ஸமோ/ (ரா)
(அடவியில்) மேடை/ அற்ற/ வாசத்தினாலோ/ யாம்/ செய்யும்/ குற்றமோ/


சரணம் 3
கல்லலைன/ நேயமா/ கண்டே/ நீகு/ ஹேயமா/
(எனது) கள்ளமான/ நேயமா/ கண்டால்/ உனக்கு/ வெறுப்போ/

தல்லடி3ல்ல/ ந்யாயமா/ த்யாக3ராஜ/ கே3யமா/ (ரா)
(நான்) தடுமாறுதல்/ சரியாமோ/ தியாகராசனால்/ பாடப் பெற்றோனே/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - ஸுந்த3ராகார த்4ரு2த மந்த3 - ஸுந்த3ர கர த்4ரு2த மந்த3ர : 'கர த்4ரு2த மந்த3ர' என்றால் 'மந்தர மலையைக் கையில் ஏந்தியவனே' என்று பொருளாகும். விஷ்ணு, தனது கூர்மாவதாரத்தில் (ஆமை), முதுகின் மீது மந்தர மலையைச் சுமந்தார். எனவே, 'கையில் ஏந்தியவனே' (கர த்4ரு2த) என்று கூறுவது தவறாகும். இதற்குமுன் வரும், 'காம கோடி' என்ற சொற்களினால், 'ஸுந்த3ர கர' (அழகான கையோன்) என்று கூறவதும் தவறாகும். எனவே 'கர' என்ற சொல் முன்னும் இணைக்க முடியாது; பின்னும் இணைக்க முடியாது. எனவே 'ஸுந்த3ர கர த்4ரு2த மந்த3ர' என்பது தவறாகும்.

2 - கைக மீதி3 - கைக மீத3 - கைக மீது3 : 'கைக மீதி3' என்பதே சரியெனத் தோன்றுகின்றது.

3 - லோபமோ - லோப4மோ : இவ்விடத்தில் 'லோபமோ' என்ற சொல்லே பொருந்தும்.

4 - ஆட33ன்ன - ஆடு33ன்ன : தெலுங்கில் 'ஆட3தி3', 'ஆடு3தி3' என்ற இரண்டு சொற்களுக்கும் 'பெண்' என்றே பொருள்.

Top

மேற்கோள்கள்
4 - ஆட33ன்ன ரோஸமோ - (அன்று) மனைவி (பெண்) பகன்ற நாணமோ? - பதினான்கு வருடங்கள் காட்டில் வாழவேண்டுமென, கைகேயி மூலமான, தனது தந்தையின் ஆணையின்படி, இராமன், காடு செல்ல முனைந்தபோது, சீதையும், தான் 'உடன் வருவேன்' என்று சொன்னாள். இராமன், காட்டில் உள்ள சிரமங்களைப்பற்றிக் கூறி, அவளை அழைத்துச் செல்ல மறுத்தான். சீதை, தனக்கு, திருமணத்திற்கு முன்பே, தான் காட்டில் வாழ வேண்டி வருமென, ஒரு பிக்ஷிணி கூறியதையும் பகன்று, தான் காட்டிற்கு வருவேன் என்று கூறினாள். இராமன் அதற்கும் ஒப்பாததனால், இராமனை 'நீ ஆண்மகனா?' என்று இழிசொல் பகன்றாள். அதன்பின்தான், இராமன், சீதையைக் காட்டிற்கு அழைத்துச் செல்ல, ஒப்புதல் அளித்தான். இதனைத்தான், தியாகராஜர், இப்பாடலில் குறிப்பிட்டு, 'அதனால் ஏற்பட்ட நாணமா?' என்று கேட்கின்றார். வால்மீகி ராமாயணம், அயோத்தியா காண்டம், அத்தியாயங்கள் 28 - 30 நோக்கவும்.

தியாகராஜர், தமது 'ரமா ரமண பா4ரமா' என்ற 'வஸந்த பைரவி' இகழ்ச்சியான புகழ்ச்சிக் கீர்த்தனையில், சீதையின், 'நீ ஆண்மகனா?' என்ற இழிசொல்லை, தானும் இராமனிடம் கேட்கின்றார் - 'புமானுட3னி காத3னி தெல்புமா' - 'நீ ஆண்மகனா அல்லவா என்று தெரிவிப்பாய்' என்கிறார்.

Top

விளக்கம்
5 - உபாஸமோ - 'உபவாஸம்' எனப்படும் 'நோன்பிற்காக பட்டனியிருத்தலை' சொல்வழக்கில் 'உபாஸம்' என்பர். இவ்விடத்தில், இராமன், கிழங்குகளையும், கனிகளையும் உண்டு வனவாசம் செய்ததனைச் சுட்டுகின்றார் கேலியாக.

மேடை - உப்பரிகை

Top


Updated on 24 Aug 2009

Sunday, August 23, 2009

தியாகராஜ கிருதி - மா குலமுன - ராகம் ஸுரடி - Ma Kulamuna - Raga Surati - Nauka Charitram

பல்லவி
மா குலமுனகிஹ பரமொஸகி31நீகு மங்க3ளம் ஸு14 மங்க3ளம்

அனுபல்லவி
2மாகுல ப்3ரோசின மத3ன ஜனக நீகு மங்க3ளம் ஸு14 மங்க3ளம் (மா)

சரணம்
சரணம் 1
மத33ஜ க3மன மானித ஸத்3-கு3ண நீகு மங்க3ளம் ஸு14 மங்க3ளம்
மத3 மோஹ ரஹித மஞ்ஜுள 3ரூப த4 நீகு மங்க3ளம் ஸு14 மங்க3ளம் (மா)


சரணம் 2
மனஸிஜ வைரி மானஸ ஸத3ன நீகு மங்க3ளம் ஸு14 மங்க3ளம்
மனவினி வினி மம்மேலுகொன்ன நீகு மங்க3ளம் ஸு14 மங்க3ளம் (மா)


சரணம் 3
மா மனஸுன நெலகொன்ன க்ரு2ஷ்ண நீகு மங்க3ளம் ஸு14 மங்க3ளம்
4மா மனோஹர பாலித த்யாக3ராஜ நீகு மங்க3ளம் ஸு14 மங்க3ளம் (மா)


பொருள் - சுருக்கம்
  • எமது குலத்திற்கு இம்மையும் மறுமையும் அளித்தவுனக்கு மங்களம், சுப மங்களம்!

  • மரங்களைக் காத்த, மதனையீன்றோனே, உனக்கு மங்களம், சுப மங்களம்!

  • மத கரி நடையோனே, மதிக்கப்பெற்ற நற்பண்புகளோனே, உனக்கு மங்களம், சுப மங்களம்!

  • செருக்கும், மயக்கமுமற்றோனே, அழகிய உருக்கொண்டோனே, உனக்கு மங்களம், சுப மங்களம்!

  • காமன் பகைவனின் மனத்தி லுறைவோனே, உனக்கு மங்களம், சுப மங்களம்!

  • வேண்டுதலையேற்று, எம்மையாண்டுகொண்ட உனக்கு மங்களம், சுப மங்களம்!

  • எம்முள்ளத்தினில் நிலைபெற்ற கண்ணா, உனக்கு மங்களம், சுப மங்களம்!

  • இலக்குமி மனம் கவர்வோனே, தியாகராசனைக் காப்போனே, உனக்கு மங்களம், சுப மங்களம்!



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
மா/ குலமுனகு/-இஹ/ பரமு/-ஒஸகி3ன/ நீகு/ மங்க3ளம்/ ஸு14/ மங்க3ளம்/
எமது/ குலத்திற்கு/ இம்மையும்/ மறுமையும்/ அளித்த/ உனக்கு/ மங்களம்/ சுப/ மங்களம்/


அனுபல்லவி
மாகுல/ ப்3ரோசின/ மத3ன/ ஜனக/ நீகு/ மங்க3ளம்/ ஸு14/ மங்க3ளம்/ (மா)
மரங்களை/ காத்த/ மதனை/ ஈன்றோனே/ உனக்கு/ மங்களம்/ சுப/ மங்களம்/


சரணம்
சரணம் 1
மத3/ க3ஜ/ க3மன/ மானித/ ஸத்3-கு3ண/ நீகு/ மங்க3ளம்/ ஸு14/ மங்க3ளம்/
மத/ கரி/ நடையோனே/ மதிக்கப்பெற்ற/ நற்பண்புகளோனே/ உனக்கு/ மங்களம்/ சுப/ மங்களம்/

மத3/ மோஹ/ ரஹித/ மஞ்ஜுள/ ரூப/ த4ர/ நீகு/ மங்க3ளம்/ ஸு14/ மங்க3ளம்/ (மா)
செருக்கும்/ மயக்கமும்/ அற்றோனே/ அழகிய/ உரு/ கொண்டோனே/ உனக்கு/ மங்களம்/ சுப/ மங்களம்/


சரணம் 2
மனஸிஜ/ வைரி/ மானஸ/ ஸத3ன/ நீகு/ மங்க3ளம்/ ஸு14/ மங்க3ளம்/
காமன்/ பகைவனின்/ மனத்தில்/ உறைவோனே/ உனக்கு/ மங்களம்/ சுப/ மங்களம்/

மனவினி/ வினி/ மம்மு/-ஏலுகொன்ன/ நீகு/ மங்க3ளம்/ ஸு14/ மங்க3ளம்/ (மா)
வேண்டுதலை/ ஏற்று/ எம்மை/ ஆண்டுகொண்ட/ உனக்கு/ மங்களம்/ சுப/ மங்களம்/


சரணம் 3
மா/ மனஸுன/ நெலகொன்ன/ க்ரு2ஷ்ண/ நீகு/ மங்க3ளம்/ ஸு14/ மங்க3ளம்/
எமது/ உள்ளத்தினில்/ நிலைபெற்ற/ கண்ணா/ உனக்கு/ மங்களம்/ சுப/ மங்களம்/

மா/ மனோஹர/ பாலித/ த்யாக3ராஜ/ நீகு/ மங்க3ளம்/ ஸு14/ மங்க3ளம்/ (மா)
இலக்குமி (எமது)/ மனம் கவர்வோனே/ காப்போனே/ தியாகராசனை/ உனக்கு/ மங்களம்/ சுப/ மங்களம்/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - நீகு மங்க3ளம் ஸு14 மங்க3ளம் - நீகு மங்க3ளம் ஜய மங்க3ளம் நீகு மங்க3ளம் ஸு14 மங்க3ளம்.

3 - ரூப த4 - ரூப மரி.

4 - மா மனோஹர - மா மனோரத2.

Top

மேற்கோள்கள்
2 - மாகுல ப்3ரோசின - மரங்களைக் காத்த - மரங்களாய் நின்ற குபேரனின் மைந்தர்கள். கண்ணனை, யசோதை உரலில் கட்டியபோது, உரலை இழுத்துக்கொண்டு சென்று, அங்கு முற்றத்திலிருந்த இரண்டு மருத (அர்ஜுன) மரங்களுக்கிடையில் உரலைத் திணித்து, அம்மரங்களைச் சாய்த்து, நாரதரின் சாபத்தினால் அம்மரங்களான, 'நளகூப3ர' மற்றும் 'மணிக்3ரீவ' என்ற குபேரனின் இரு மைந்தர்களக்கு சாபத்தினின்று விடுதலையளித்தான் கண்ணன். பாகவத புராணம், 10-வது புத்தகம், 10-வது அத்தியாயம் நோக்கவும்.

Top

விளக்கம்
இந்த கிருதி, 'நௌக சரித்ரம்' (ஓடக்கதை) எனப்படும் நாட்டிய நாடகத்தில் கடைசியாக இடம்பெறும், ஆய்ச்சியர் கண்ணனை வாழ்த்திப் பாடும் பாடல்.

காமன் பகைவன் - சிவன்

Top


Updated on 23 Aug 2009

Saturday, August 22, 2009

தியாகராஜ கிருதி - ப4ஜன பருலகேல - ராகம் ஸுரடி - Bhajana Parulakela - Raga Surati

பல்லவி
4ஜன பருலகேல த3ண்ட3 பாணி
4யமு மனஸா 1ராம (ப4ஜன)

அனுபல்லவி
அஜ ருத்32ஸுரேஸு1லகாயா
ஸ்தா2னமொஸங்கு3
ராம (ப4ஜன)

சரணம்
அண்ட3 கோட்லு நிண்டி3
கோத3ண்ட3 பாணி முக2முனு
ஹ்ரு2த்-புண்ட3ரீகமுன ஜூசி பூஜ ஸல்புசு
நிண்டு3 ப்ரேமதோ கரங்கு3 நிஷ்காமுலகு வர
வேத3ண்ட3 பாலு தா3ஸுடை3
த்யாக3ராஜு ஸேயு 3ராம (ப4ஜன)


பொருள் - சுருக்கம்
மனமே!
  • இராமனின் பஜனையில் ஈடுபட்டோருக்கேன் தண்டபாணியின் அச்சம்?

  • பிரமன், உருத்திரன், வானோர் தலைவன் ஆகியோருக்கு அந்தந்தப் பதவிகளை வழங்கும் இராமனின் பஜனையில் ஈடுபட்டோருக்கேன் தண்டபாணியின் அச்சம்?


    • அண்டங்கள் கோடிகளில் நிறைந்துள்ள கோதண்டபாணியின் முகத்தினை, (தமது) இதயக் கமலத்தினிற் கண்டு, வழிபாடு செய்துகொண்டு, நிறை காதலுடன் உருகும் இச்சைகளற்றோருக்கும்,

    • உயர் வேழத்தினைக் காப்போனின் தொண்டனாகிய தியாகராசன் செய்யும் இராமனின் பஜனையில் ஈடுபட்டோருக்கும்

  • ஏன் தண்டபாணியின் அச்சம்?



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
4ஜன/ பருலகு/-ஏல/ த3ண்ட3/ பாணி/
பஜனையில்/ ஈடுபட்டோருக்கு/ ஏன்/ தண்ட/ பாணியின்/

4யமு/ மனஸா/ ராம/ (ப4ஜன)
அச்சம்/ மனமே/ இராமனின்/ பஜனையில்...


அனுபல்லவி
அஜ/ ருத்3ர/ ஸுர/-இஸு1லகு/-ஆயா/
பிரமன்/ உருத்திரன்/ வானோர்/ தலைவன் ஆகியோருக்கு/ அந்தந்த/

ஸ்தா2னமு/-ஒஸங்கு3/ ராம/ (ப4ஜன)
பதவிகளை/ வழங்கும்/ இராமனின்/ பஜனையில்...


சரணம்
அண்ட3/ கோட்லு/ நிண்டி3ன/
அண்டங்கள்/ கோடிகளில்/ நிறைந்துள்ள/

கோத3ண்ட3/ பாணி/ முக2முனு/ ஹ்ரு2த்/-
கோதண்ட/ பாணியின்/ முகத்தினை/ (தமது) இதய/

புண்ட3ரீகமுன/ ஜூசி/ பூஜ/ ஸல்புசு/
கமலத்தினில்/ கண்டு/ வழிபாடு/ செய்துகொண்டு/

நிண்டு3/ ப்ரேமதோ/ கரங்கு3/ நிஷ்காமுலகு/ வர/
நிறை/ காதலுடன்/ உருகும்/ இச்சைகளற்றோருக்கும்/ உயர்/

வேத3ண்ட3/ பாலு/ தா3ஸுடை3ன/
வேழத்தினை/ காப்போனின்/ தொண்டனாகிய/

த்யாக3ராஜு/ ஸேயு/ ராம/ (ப4ஜன)
தியாகராசன்/ செய்யும்/ இராமனின்/ பஜனையில்...


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - ராம - இச்சொல் சில புத்தகங்களில் கொடுக்கப்படவில்லை.

2 - ஸுரேஸு1லகாயா ஸ்தா2னமொஸங்கு3 - ஸுரேஸு1லகா ஸ்தா2னமொஸங்கு3.

3 - ராம - நாம.

Top

மேற்கோள்கள்

விளக்கம்
தண்டபாணி - இங்கு நமனைக் குறிக்கும்
வானோர் தலைவன் - இந்திரன்
உயர் வேழம் - கஜேந்திரன்

Top


Updated on 23 Aug 2009

தியாகராஜ கிருதி - பராமுக2மேல - ராகம் ஸுரடி - Paraamukhamela - Raga Surati

பல்லவி
1பராமுக2மேலரா ராமய்ய

அனுபல்லவி
2நிராத3ரண கலதா3 3நீயெட3
நித்யானந்த3 கல்யாண கு3ண (பரா)

சரணம்
இப4 ராஜு 4நீகேமைனனிச்செனா தெலுபு
5ஸு14 ப்ரது3டு3 நீவேயனுசு
ஸுந்த36த்யாக3ராஜ நுத (பரா)


பொருள் - சுருக்கம்
  • இராமய்யா!

  • அழிவற்ற ஆனந்தனே! கலியாண குணங்களோனே!

  • நலனருள்வோன் நீயே யென தியாகராசனால் போற்றப் பெற்ற அழகா!


    • பராமுகம் ஏனய்யா?

    • புறக்கணிப்பு உளதோ உன்னிடம்?

    • கரியரசன் உனக்கேதும் தந்தானோ, தெரிவிப்பாய்.



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
பராமுக2மு/-ஏலரா/ ராமய்ய/
பராமுகம்/ ஏனய்யா/ இராமய்யா/


அனுபல்லவி
நிராத3ரண/ கலதா3/ நீயெட3ல/
புறக்கணிப்பு/ உளதோ/ உன்னிடம்/

நித்ய/-ஆனந்த3/ கல்யாண/ கு3ண/ (பரா)
அழிவற்ற/ ஆனந்தனே/ கலியாண/ குணங்களோனே/


சரணம்
இப4/ ராஜு/ நீகு/-ஏமைனனு/-இச்செனா/ தெலுபு/
கரி/ யரசன்/ உனக்கு/ ஏதும்/ தந்தானோ/ தெரிவிப்பாய்/

ஸு14/ ப்ரது3டு3/ நீவே/-அனுசு/
நலன்/ அருள்வோன்/ நீயே/ யென/

ஸுந்த3ர/ த்யாக3ராஜ/ நுத/ (பரா)
அழகா/ தியாகராசனால்/ போற்றப் பெற்ற/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)

2 - நிராத3ரண - நிராத3ரவு : இவ்விடத்தில் 'நிராத3ரண' பொருந்தும்.

6 - த்யாக3ராஜ நுத - ஸ்ரீ த்யாக3ராஜ நுத.

Top

மேற்கோள்கள்

விளக்கம்
1 - பராமுக2 - இங்ஙனமே எல்லா புத்தகங்களிலும் கொடுக்கப்பட்டுள்ளது. இவ்விடத்தில் இச்சொல்லுக்கு 'அசட்டை' என்று பொருளாகும். ஆனால், அதற்கான தெலுங்கு சொல் 'பராங்முக2' அல்லது 'பாரப்3முக2' ஆவன. 'பராமுகம்' என்பது வடமொழியிலிருந்து திரிந்த தமிழ்ச் சொல்லாகும்.

3 - நீயெட3 - உன்னிடத்தில் - தெலுங்கு மொழியில் இங்ஙனம் திரிபு உளதா எனத் தெரியவில்லை.

4 - ஏமைனனிச்செனா - 'இலஞ்சம் கொடுத்தானா' எனப் பொருளாகும்.

5 - ஸு14 ப்ரது3டு3 நீவேயனுசு - நலன் அருள்வோன் நீயென - இச்சொற்களினால் வாக்கியம் நிறைவு பெறுவதாகத் தோன்றவில்லை. எனவே, இவற்றினை 'தியாகராஜனால் போற்றப் பெற்ற' என்ற சொற்களுடன் இணைத்து பொருள் கொள்ளப்பட்டுள்ளது.

அழிவற்ற ஆனந்தனே! கலியாண குணங்களோனே - 'உனது கலியாண குணங்களை தியானிப்போருக்கு அழிவற்ற ஆனந்தமருள்வோனே' என்றும் கொள்ளலாம்.

திரு TK கோவிந்த ராவ் அவர்களின் 'Compositions of Tyagaraja' என்ற புத்தகத்தில், இந்த கிருதி, தியாகராஜரால் இயற்றப்பெற்றதா என்று ஐயமிருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

Top


Updated on 22 Aug 2009

Friday, August 21, 2009

தியாகராஜ கிருதி - பதிகி ஹாரதி - ராகம் ஸுரடி - Patiki Haarati - Raga Surati

பல்லவி
1பதிகி ஹாரதீ ரே ஸீதா

அனுபல்லவி
அதி ம்ரு2து3-தர 2ஸத்வ பா4ஷணுனிகி
அகி2லாண்ட3 நாது2னிகி ஸீதா (பதிகி)

சரணம்
சரணம் 1
3ங்க3ரு ரங்கு3 பு4ஜங்கு3னி பைனி
செலங்கு3சுனு 3மரகதாங்கு3டு3 மெருபு
தெரங்கு3ன மெரயு தனயங்க3னதோ
பலுகங்க3 ஜூசியுப்பொங்கு3சு ஸீதா (பதிகி)


சரணம் 2
அக்கரதோனிரு ப்ரக்கல நிலிசி
தளுக்கனி மெரயக3 சக்கனி மோமுன
சுக்கல ராயனி 4மக்குவதோ ஸரி
முக்கெர கத3லக3 க்3ரக்குன ஸீதா (பதிகி)


சரணம் 3
ராஜ விபா4-கர ராஜ த4ராமர
ராஜ ஸு1காஜ விராஜுலு ஜூட33
ராஜமானமகு3 கா3ஜுலு க4ல்லன
ராஜித த்யாக3ராஜ நுதுனிகி ஸ்ரீ (பதிகி)


பொருள் - சுருக்கம்
  • சீதாபதிக்கு ஆரத்தி யடியே!


    • மிக்கு மென்மையான, தூய சொல்லோனுக்கு,

    • அனைத்தண்ட நாதனுக்கு,

  • சீதாபதிக்கு ஆரத்தியடியே!


    • பொன்னிற அரவின் மீது ஒளிர்ந்துகொண்டு,

    • மரகதவுடலோன், மின்னற் கொடியென மிளிரும் தனது அங்கனையுடன் பகரக் கண்டு,

  • பெருமிதத்துடன், சீதாபதிக்கு ஆரத்தியடியே!


    • அக்கறையோடிரு பக்கமும் நின்று, தளுக்கென மின்ன,

    • எழில் வதனத்தில் தாரையரசனின் நிகர் மூக்குத்தி அசைய,

  • அன்புடன், உடனே சீதாபதிக்கு ஆரத்தியடியே!


    • மதி, பகலவன், பிறையணிவோன், வானோர் தலைவன், சுகர், பிரமன், கருடன் ஆகியோர் காண,

    • மின்னும் வளையல்கள் கலீரென,

    • மிளிரும் தியாகராசனால் போற்றப் பெற்றோனுக்கு,

  • இலக்குமி பதிக்கு ஆரத்தியடியே!



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
பதிகி/ ஹாரதீ/ ரே/ ஸீதா/
பதிக்கு/ ஆரத்தி/ அடியே/ சீதா/


அனுபல்லவி
அதி/ ம்ரு2து3-தர/ ஸத்வ/ பா4ஷணுனிகி/
மிக்கு/ மென்மையான/ தூய/ சொல்லோனுக்கு/

அகி2ல/-அண்ட3/ நாது2னிகி/ ஸீதா/ (பதிகி)
அனைத்து/ அண்ட/ நாதனுக்கு/ சீதா/ பதிக்கு...


சரணம்
சரணம் 1
3ங்க3ரு/ ரங்கு3/ பு4ஜங்கு3னி/ பைனி/
பொன்/ நிற/ அரவின்/ மீது/

செலங்கு3சுனு/ மரகத/-அங்கு3டு3/ மெருபு/
ஒளிர்ந்துகொண்டு/ மரகத/ உடலோன்/ மின்னற்/

தெரங்கு3ன/ மெரயு/ தன/-அங்க3னதோ/
கொடியென/ மிளிரும்/ தனது/ அங்கனையுடன்/

பலுகங்க3/ ஜூசி/-உப்பொங்கு3சு/ ஸீதா/ (பதிகி)
பகர/ கண்டு/ பெருமிதத்துடன்/ சீதா/ பதிக்கு...


சரணம் 2
அக்கரதோனு/-இரு/ ப்ரக்கல/ நிலிசி/
அக்கறையோடு/ இரு/ பக்கமும்/ நின்று/

தளுக்கனி/ மெரயக3/ சக்கனி/ மோமுன/
தளுக்கென/ மின்ன/ எழில்/ வதனத்தில்/

சுக்கல/ ராயனி/ மக்குவதோ/ ஸரி/
தாரை/ அரசனின்/ அன்புடன்/ நிகர்/

முக்கெர/ கத3லக3/ க்3ரக்குன/ ஸீதா/ (பதிகி)
மூக்குத்தி/ அசைய/ உடனே/ சீதா/ பதிக்கு...


சரணம் 3
ராஜ/ விபா4-கர/ ராஜ/ த4ர/-அமர/
மதி/ பகலவன்/ பிறை/ அணிவோன்/ வானோர்/

ராஜ/ ஸு1க/-அஜ/ விராஜுலு/ ஜூட33/
தலைவன்/ சுகர்/ பிரமன்/ கருடன் ஆகியோர்/ காண/

ராஜமானமகு3/ கா3ஜுலு/ க4ல்லன/
மின்னும்/ வளையல்கள்/ கலீரென/

ராஜித/ த்யாக3ராஜ/ நுதுனிகி/ ஸ்ரீ/ (பதிகி)
மிளிரும்/ தியாகராசனால்/ போற்றப் பெற்றோனுக்கு/ இலக்குமி/ பதிக்கு...


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - பதிகி ஹாரதீ ரே ஸீதா - பதிகி ஹாரதீ ரே ஸீதா பதிகி ஹாரதீ ரே.

2 - ஸத்வ பா4ஷணுனிகி - ஸத்ய பா4ஷணுனிகி.

3 - மரகதாங்கு3டு3 - மரயுதாங்கு3டு3 : 'மரகதாங்கு3டு3' சரியான சொல்லாகும்.

Top

மேற்கோள்கள்

விளக்கம்
3 - மரகதாங்கு3டு3 - கருமேகங்களின் பின்னணியினில், மின்னற் கீற்று, மேகங்களையும் ஒளிர்வித்து தானும் அதிக ஓளிபெறுதல் போன்று, தியாகராஜர் மரகத மேனி இறைவனை பொன்னிற மேனியுடைய சீதையுடன் ஒப்பிட்டு பெருமிதமுறுகின்றார் (உப்பொங்கு3சு).

4 - மக்குவதோ - அன்புடன் : இச்சொல் தோன்றும் இடத்தினை நோக்குகையில் (சுக்கல ராயனி மக்குவதோ ஸரி), இச்சொல், 'ஒளி'யென்று பொருள் பெறவேண்டும் (தாரையரசனின் ஒளி நிகர் என). ஆனால், இச்சொல்லுக்கு அப்படிப்பட்ட பொருளேதும் இல்லாமையால், சரணத்தின் கடைசியில் சேர்த்து பொருள் கொள்ளப்பட்டுள்ளது.

அங்கனை - மனைவி
எழில் வதனத்தில் - ஆரத்தியெடுப்போரின் வதனங்களைக் குறிக்கும்
தாரையரசன் - மதி
பிறையணிவோன் - சிவன்
வானோர் தலைவன் - இந்திரன்
சுகர் - சுக முனிவர்

Top


Updated on 21 Aug 2009

Wednesday, August 19, 2009

தியாகராஜ கிருதி - கீ3தார்த2மு - ராகம் ஸுரடி - Gitaarthamu - Raga Surati

பல்லவி
1கீ3தார்த2மு 2ஸங்கீ3தானந்த3முனு-
3ஈ தாவுன ஜூட3ரா ஓ மனஸா

அனுபல்லவி
ஸீதா பதி சரணாப்3ஜமுலிடு3கொன்ன
4வாதாத்மஜுனிகி பா33 தெலுஸுரா (கீ3தா)

சரணம்
5ஹரி ஹர பா4ஸ்கர காலாதி3
கர்மமுலனு மதமுல 6மர்மமுலனெரிங்கி3
ஹரி வர ரூபுடு3 7ஹரி ஹய வினுதுடு3
வர த்யாக3ராஜ வரது3டு3 8ஸுகி2ரா (கீ3தா)


பொருள் - சுருக்கம்
ஓ மனமே!
  • கீதையின் பொருளினையும், சங்கீதத்தின் ஆனந்தத்தினையும் இவ்விடத்தினில் காண்பாயடா;

  • சீதாபதியின் திருவடித் தாமரைகளை யேந்தியிருக்கும் வாயு மைந்தனுக்கு நன்கு தெரியுமடா;

    • அரி, அரன், பரிதி, சக்தி முதலான கருமங்கள் எனும் மதங்களின் மருமங்களினை யறிந்த,

    • உயர் வானர உருவத்தோன்,

    • பொற்குதிரையோனால் போற்றப் பெற்றோன்,

    • உயர் தியாகராசனுக்கருள்வோன்,

  • களிப்பவனடா.



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
கீ3தா/-அர்த2மு/ ஸங்கீ3த/-ஆனந்த3முனு/-
கீதையின்/ பொருளினையும்/ சங்கீதத்தின்/ ஆனந்தத்தினையும்/

ஈ/ தாவுன/ ஜூட3ரா/ ஓ மனஸா/
இந்த/ இடத்தினில்/ காண்பாயடா/ ஓ மனமே/


அனுபல்லவி
ஸீதா/ பதி/ சரண/-அப்3ஜமுலு/-இடு3கொன்ன/
சீதா/ பதியின்/ திருவடி/ தாமரைகளை/ ஏந்தியிருக்கும்/

வாத/-ஆத்மஜுனிகி/ பா33/ தெலுஸுரா/ (கீ3தா)
வாயு/ மைந்தனுக்கு/ நன்கு/ தெரியுமடா/


சரணம்
ஹரி/ ஹர/ பா4ஸ்கர/ கால/-ஆதி3/
அரி/ அரன்/ பரிதி/ சக்தி/ முதலான/

கர்மமுலு/-அனு/ மதமுல/ மர்மமுலனு/-எரிங்கி3ன/
கருமங்கள்/ எனும்/ மதங்களின்/ மருமங்களினை/ யறிந்த/

ஹரி/ வர/ ரூபுடு3/ ஹரி ஹய/ வினுதுடு3/
வானர/ உயர்/ உருவத்தோன்/ பொற்/ குதிரையோனால்/ போற்றப் பெற்றோன்/

வர/ த்யாக3ராஜ/ வரது3டு3/ ஸுகி2ரா/ (கீ3தா)
உயர்/ தியாகராசனுக்கு/ அருள்வோன்/ களிப்பவனடா/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
6 - மர்மமுலனெரிங்கி3 - மர்மமுலெரிங்கி3ன.

7 - ஹரி ஹய - ஹர ஹய : 'ஹரி ஹய' என்பது சரியான சொல்லாகும்.

Top

மேற்கோள்கள்
1 - கீ3தார்த2மு - கீதை - கண்ணன் உபதேசித்தது - கீதையின் சாரமாக கண்ணன் (அத்தியாயம் 18, செய்யுட்கள் 65, 66) மொழிந்தது -

"உனது மனத்தில் என்னை நிறைப்பாய்; எனக்குத் தொண்டு செய்வாய்; எனக்கென வேள்வி இயற்றுவாய்; என்னை வணங்குவாய். நீ என்னை யடைவாய் - உண்மையுரைக்கின்றேன்; ஏனெனில், நீ எனக்கு வேண்டியவன்."

"அனைத்து தர்மங்களையும் கைவிட்டு, என் ஒருவனையே புகலடைவாயாக; நான் உன்னை அனைத்து பாவங்களினின்றும் விடுவிக்கின்றேன்; கவலைப்படாதே."(ஸ்வாமி ஸ்வரூபானந்தாவின் ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்.)

2 - ஸங்கீ3தானந்த3மு - தியாகராஜர் தனது கிருதி 'ஸங்கீத ஞானமு' என்ற 'தன்யாசி' ராக கீர்த்தனையில் அனுமன் இசைவழிபாடு செய்கின்றான் (உபாஸிஞ்சே) என்று கூறுகின்றார்.

அனுமனின் இசையறிவினைப் பற்றி கூறப்படுவது -

அனுமன், விவாதிகள் கருவம் அடங்க,
அசலம் உருக, 'குண்டகக் கிரியா' எனும்
இராகம் பாடி, அடக்கி, மேலும்,
சன்னிய ராகம், ஆறாயிரம் சமைத்து, அதற்கு
'அனும கடகம்' எனும் பெயர் அணிந்தனன். ....45

Top

4 - வாதாத்மஜுனிகி பா33 தெலுஸு - மகாபாரதப் போரில், அனுமன், அர்ஜுனனின் தேரில் கொடியாக இருந்து, கண்ணன் கீதை உபதேசித்ததனைச் செவி மடுத்தான். கீதை, அத்தியாயம் 1, செய்யுள் 20 - 'கபி த்4வஜ:'.

5 - ஹரி ஹர பா4ஸ்கர காலாதி3 - சிவன், விஷ்ணு, சக்தி, சூரியன், கணபதி ஆகிய பஞ்சாயதன பூஜை (ஐந்து வழிபாட்டு முறை) எனப்படும். பிற்காலத்தில், இதனை, ஆதி சங்கரர், முருகன் வழிபாட்டினை (கௌமாரம்) இணைத்து, 'அறு மத' வழிபாட்டாக்கினார் என்பர்.

Top

விளக்கம்
3 - ஈ தாவுன - இவ்விடத்தினில் - அனுமனிடத்தினில் : சில புத்தகங்களில் 'இவ்விடத்தினில்' என்பதற்கு 'ராமனிடத்தில்' என்று பொருள் கொள்ளப்பட்டுள்ளது. எனது சிற்றறிவிற்கு எட்டியவரை, அனுமன் ராமனுடைய திருவடிகளைப் பற்றியிருக்கும் நோக்கமாகிய 'முற்றும் புகலடைதலையே' தியாகராஜர் இங்கு சுட்டிக்காட்டுகின்றார். அதுதான் கீதையின் சாரமாகும் (கீதார்த2மு)

5 - கால - 'காளி' எனப்படும் 'காலி' - 'கால' என்ற சொல்லின் பெண்பாலாகும். அங்ஙனம் இச்சொல் 'சக்தி வழிபாட்டினை'க் குறிக்கும்.

6 - மர்மமுலனெரிங்கி3 - கருமங்கள் - அறு மத வழிபாட்டு முறைகளைக் குறிக்கும். இது குறித்து கீதையில் (அத்தியாயம் 3, செய்யுள் 9) கண்ணன் கூறுவதாவது -

"வேள்விக்கென்றே அல்லாது, மற்ற நோக்கங்களுக்காக இயற்றப்படும் செயல்களினால் உலகோர் கட்டப்படுகின்றனர். எனவே, ஓ குந்தி மகனே! பற்றினைத் துறந்து, வேள்விக்கென்றே செயல்களைப் இயற்றுவாயாக. ('வேள்வி' என்ற சொல்லுக்கு விஷ்ணு என்றும் பொருள்.) (ஸ்வாமி ஸ்வரூபானந்தாவின் ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்.)

Top

8 - ஸுகி2ரா - களிப்பவன் - அனுமனைக் குறிக்கும். அனுமன் களிப்புறுவதெங்ஙனம்

"ராமனின் முடிசூட்டு விழா மிக்குச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. சீதை, அனுமனுக்கு ஆணி முத்துமாலையொன்றினைப் பரிசாக அளித்தாள். அனுமன், அதனை மிகு பணிவுடன் பெற்று, அந்த முத்துகளைப் பற்களினால் கடித்துப் பிளந்துகொண்டிருந்தான். சீதையும் மற்ற அவையிலிருந்த அமைச்சர்களும், அனுமனின் இந்த விந்தையான செயலினைக் கண்டு, மிக்கு வியந்தனர்.

'ஏ வீரனே! நீ என்ன செய்கின்றாய்? ஏன் முத்துக்களைப் பிளக்கின்றாய்?' என சீதை வினவ, அனுமன் கூறியது - 'தாயே, இந்த முத்து மாலை விலை மதிப்பற்றது; ஏனெனில், அஃது உனது புனித கரத்தினின்று எனக்கு வந்தது. ஆயினும், இதனுள் ராமன் இருக்கின்றானா, என நான் தேடுகின்றேன்; ஏனென்றால், ராமனில்லாத பொருளெதனையும் நான் வைத்துக்கொள்வதில்லை. இந்த முத்துக்களில் அவனில்லையே'.

'உன்னுள் நீ ராமனை வைத்துள்ளாயோ எனத் தெரிவிப்பாய்' என சீதை பகர, அனுமன், உடனே, தன்னுடை மார்பினைப் பிளந்து, ராமன், சீதை மற்றும் யாவருக்கும் காண்பித்தான். அனைவரும், சீதையுடன், ராமன், அனுமனின் இதயத்தினில் இருப்பதனைக் கண்டனர். "

பொற்குதிரையோன் - இந்திரன்

Top


Updated on 19 Aug 2009