Sunday, August 23, 2009

தியாகராஜ கிருதி - மா குலமுன - ராகம் ஸுரடி - Ma Kulamuna - Raga Surati - Nauka Charitram

பல்லவி
மா குலமுனகிஹ பரமொஸகி31நீகு மங்க3ளம் ஸு14 மங்க3ளம்

அனுபல்லவி
2மாகுல ப்3ரோசின மத3ன ஜனக நீகு மங்க3ளம் ஸு14 மங்க3ளம் (மா)

சரணம்
சரணம் 1
மத33ஜ க3மன மானித ஸத்3-கு3ண நீகு மங்க3ளம் ஸு14 மங்க3ளம்
மத3 மோஹ ரஹித மஞ்ஜுள 3ரூப த4 நீகு மங்க3ளம் ஸு14 மங்க3ளம் (மா)


சரணம் 2
மனஸிஜ வைரி மானஸ ஸத3ன நீகு மங்க3ளம் ஸு14 மங்க3ளம்
மனவினி வினி மம்மேலுகொன்ன நீகு மங்க3ளம் ஸு14 மங்க3ளம் (மா)


சரணம் 3
மா மனஸுன நெலகொன்ன க்ரு2ஷ்ண நீகு மங்க3ளம் ஸு14 மங்க3ளம்
4மா மனோஹர பாலித த்யாக3ராஜ நீகு மங்க3ளம் ஸு14 மங்க3ளம் (மா)


பொருள் - சுருக்கம்
  • எமது குலத்திற்கு இம்மையும் மறுமையும் அளித்தவுனக்கு மங்களம், சுப மங்களம்!

  • மரங்களைக் காத்த, மதனையீன்றோனே, உனக்கு மங்களம், சுப மங்களம்!

  • மத கரி நடையோனே, மதிக்கப்பெற்ற நற்பண்புகளோனே, உனக்கு மங்களம், சுப மங்களம்!

  • செருக்கும், மயக்கமுமற்றோனே, அழகிய உருக்கொண்டோனே, உனக்கு மங்களம், சுப மங்களம்!

  • காமன் பகைவனின் மனத்தி லுறைவோனே, உனக்கு மங்களம், சுப மங்களம்!

  • வேண்டுதலையேற்று, எம்மையாண்டுகொண்ட உனக்கு மங்களம், சுப மங்களம்!

  • எம்முள்ளத்தினில் நிலைபெற்ற கண்ணா, உனக்கு மங்களம், சுப மங்களம்!

  • இலக்குமி மனம் கவர்வோனே, தியாகராசனைக் காப்போனே, உனக்கு மங்களம், சுப மங்களம்!



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
மா/ குலமுனகு/-இஹ/ பரமு/-ஒஸகி3ன/ நீகு/ மங்க3ளம்/ ஸு14/ மங்க3ளம்/
எமது/ குலத்திற்கு/ இம்மையும்/ மறுமையும்/ அளித்த/ உனக்கு/ மங்களம்/ சுப/ மங்களம்/


அனுபல்லவி
மாகுல/ ப்3ரோசின/ மத3ன/ ஜனக/ நீகு/ மங்க3ளம்/ ஸு14/ மங்க3ளம்/ (மா)
மரங்களை/ காத்த/ மதனை/ ஈன்றோனே/ உனக்கு/ மங்களம்/ சுப/ மங்களம்/


சரணம்
சரணம் 1
மத3/ க3ஜ/ க3மன/ மானித/ ஸத்3-கு3ண/ நீகு/ மங்க3ளம்/ ஸு14/ மங்க3ளம்/
மத/ கரி/ நடையோனே/ மதிக்கப்பெற்ற/ நற்பண்புகளோனே/ உனக்கு/ மங்களம்/ சுப/ மங்களம்/

மத3/ மோஹ/ ரஹித/ மஞ்ஜுள/ ரூப/ த4ர/ நீகு/ மங்க3ளம்/ ஸு14/ மங்க3ளம்/ (மா)
செருக்கும்/ மயக்கமும்/ அற்றோனே/ அழகிய/ உரு/ கொண்டோனே/ உனக்கு/ மங்களம்/ சுப/ மங்களம்/


சரணம் 2
மனஸிஜ/ வைரி/ மானஸ/ ஸத3ன/ நீகு/ மங்க3ளம்/ ஸு14/ மங்க3ளம்/
காமன்/ பகைவனின்/ மனத்தில்/ உறைவோனே/ உனக்கு/ மங்களம்/ சுப/ மங்களம்/

மனவினி/ வினி/ மம்மு/-ஏலுகொன்ன/ நீகு/ மங்க3ளம்/ ஸு14/ மங்க3ளம்/ (மா)
வேண்டுதலை/ ஏற்று/ எம்மை/ ஆண்டுகொண்ட/ உனக்கு/ மங்களம்/ சுப/ மங்களம்/


சரணம் 3
மா/ மனஸுன/ நெலகொன்ன/ க்ரு2ஷ்ண/ நீகு/ மங்க3ளம்/ ஸு14/ மங்க3ளம்/
எமது/ உள்ளத்தினில்/ நிலைபெற்ற/ கண்ணா/ உனக்கு/ மங்களம்/ சுப/ மங்களம்/

மா/ மனோஹர/ பாலித/ த்யாக3ராஜ/ நீகு/ மங்க3ளம்/ ஸு14/ மங்க3ளம்/ (மா)
இலக்குமி (எமது)/ மனம் கவர்வோனே/ காப்போனே/ தியாகராசனை/ உனக்கு/ மங்களம்/ சுப/ மங்களம்/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - நீகு மங்க3ளம் ஸு14 மங்க3ளம் - நீகு மங்க3ளம் ஜய மங்க3ளம் நீகு மங்க3ளம் ஸு14 மங்க3ளம்.

3 - ரூப த4 - ரூப மரி.

4 - மா மனோஹர - மா மனோரத2.

Top

மேற்கோள்கள்
2 - மாகுல ப்3ரோசின - மரங்களைக் காத்த - மரங்களாய் நின்ற குபேரனின் மைந்தர்கள். கண்ணனை, யசோதை உரலில் கட்டியபோது, உரலை இழுத்துக்கொண்டு சென்று, அங்கு முற்றத்திலிருந்த இரண்டு மருத (அர்ஜுன) மரங்களுக்கிடையில் உரலைத் திணித்து, அம்மரங்களைச் சாய்த்து, நாரதரின் சாபத்தினால் அம்மரங்களான, 'நளகூப3ர' மற்றும் 'மணிக்3ரீவ' என்ற குபேரனின் இரு மைந்தர்களக்கு சாபத்தினின்று விடுதலையளித்தான் கண்ணன். பாகவத புராணம், 10-வது புத்தகம், 10-வது அத்தியாயம் நோக்கவும்.

Top

விளக்கம்
இந்த கிருதி, 'நௌக சரித்ரம்' (ஓடக்கதை) எனப்படும் நாட்டிய நாடகத்தில் கடைசியாக இடம்பெறும், ஆய்ச்சியர் கண்ணனை வாழ்த்திப் பாடும் பாடல்.

காமன் பகைவன் - சிவன்

Top


Updated on 23 Aug 2009

No comments: