Showing posts with label Paahi Rama Chandra. Show all posts
Showing posts with label Paahi Rama Chandra. Show all posts

Wednesday, September 9, 2009

தியாகராஜ கிருதி - பாஹி ராம சந்த்3ர - ராகம் ஸ1ங்கராப4ரணம் - Paahi Rama Chandra - Raga Sankarabharanam

பல்லவி
பாஹி ராம சந்த்3ர பாலித ஸுரேந்த்3
பரம பாவன 1ஸத்3கு3ண ஸாந்த்3

சரணம்
சரணம் 1
நீரத3 நீல 2முனீந்த்3 ஹ்ரு23
நாரத3 ஸேவித ஸாரஸ நயன (பா)


சரணம் 2
ஸ்ரீ-கர ரூப ஸுதா4கர வத3
ஸோ1க நிவாரண ஸுந்த3ர ரத3ன (பா)


சரணம் 3
நிர்மல ரூப நிந்தி3த மத3
1ர்மத3 ஸகலேஸா1ர்ணவ ஸத3ன (பா)


சரணம் 4
3ராஜ ராஜ நுத ராக4வ த்யாக3-
ராஜ ஹ்ரு2தா3லய ரக்ஷித நாக3 (பா)


பொருள் - சுருக்கம்
  • இராம சந்திரா!

  • வானோர் தலைவனைக் காப்போனே!

  • முற்றிலும் தூயோனே!

  • நற்பண்புகள் நிறைந்தோனே!

  • கார் முகில் நீல வண்ணா!

  • முனிவரிற் சிறந்தோன் உள்ளத்துறையே!

  • நாரதரால் தொழப்பெற்றோனே!

  • கமலக் கண்ணா!

  • திருவருளும் உருவத்தோனே!

  • மதி வதனத்தோனே!

  • துயரைத் தீர்ப்போனே!

  • அழகிய பற்களோனே!

  • களங்கமற்ற உருவத்தோனே!

  • மதனனைப் பழித்தோனே (எழிலில்)!

  • மகிழ்வளிப்போனே!

  • யாவர்க்கும் ஈசனே!

  • பாற்கடலுறைவோனே!

  • பேரரசர்களால் (அல்லது குபேரனால்) போற்றப் பெற்ற இராகவா!

  • தியாகராசனின் இதயத்துறையே!

  • கரியைக் காத்தோனே!

    • காப்பாய்.



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
பாஹி/ ராம/ சந்த்3ர/ பாலித/ ஸுர/-இந்த்3ர/
காப்பாய்/ இராம/ சந்திரா/ காப்போனே/ வானோர்/ தலைவனை/

பரம/ பாவன/ ஸத்3கு3ண/ ஸாந்த்3ர/
முற்றிலும்/ தூயோனே/ நற்பண்புகள்/ நிறைந்தோனே/


சரணம்
சரணம் 1
நீரத3/ நீல/ முனி/-இந்த்3ர/ ஹ்ரு23ய/
கார் முகில்/ நீல வண்ணா/ முனிவரிற்/ சிறந்தோன்/ உள்ளத்துறையே/

நாரத3/ ஸேவித/ ஸாரஸ/ நயன/ (பா)
நாரதரால்/ தொழப்பெற்றோனே/ கமல/ கண்ணா/


சரணம் 2
ஸ்ரீ/-கர/ ரூப/ ஸுதா4கர/ வத3ன/
திரு/ அருளும்/ உருவத்தோனே/ மதி/ வதனத்தோனே/

ஸோ1க/ நிவாரண/ ஸுந்த3ர/ ரத3ன/ (பா)
துயரை/ தீர்ப்போனே/ அழகிய/ பற்களோனே/


சரணம் 3
நிர்மல/ ரூப/ நிந்தி3த/ மத3ன/
களங்கமற்ற/ உருவத்தோனே/ பழித்தோனே/ மதனனை (எழிலில்)/

1ர்மத3/ ஸகல/-இஸ1/-அர்ணவ/ ஸத3ன/ (பா)
மகிழ்வளிப்போனே/ யாவர்க்கும்/ ஈசனே/ (பாற்)கடல்/ உறைவோனே/


சரணம் 4
ராஜ ராஜ/ நுத/ ராக4வ/
பேரரசர்களால் (அல்லது குபேரனால்)/ போற்றப் பெற்ற/ இராகவா/

த்யாக3ராஜ/ ஹ்ரு2த்/-ஆலய/ ரக்ஷித/ நாக3/ (பா)
தியாகராசனின்/ இதயத்து/ உறையே/ காத்தோனே/ கரியை/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - ஸத்3கு3ண ஸாந்த்3 - ஸத்3கு3ண க3ண ஸாந்த்3ர : 'க3ண' மற்றும் 'ஸாந்த்3ர' ஆகிய இரண்டு சொற்களுக்கும் ஏறக்குறைய ஒரே பொருள்தான் - பன்மையைக் குறிப்பது. எனவே, இவ்விரண்டும் ஒன்றுக்கொன்று முரண்படுமாதலால் 'ஸத்3கு3ண ஸாந்த்3ர' ஏற்கப்பட்டது.

Top

மேற்கோள்கள்

விளக்கம்
2 - முனீந்த்3 - முனிவரிற் சிறந்தோன் - வால்மீகி

3 - ராஜ ராஜ - இச்சொல்லுக்கு சில புத்தகங்களில் 'குபேரன்' என்று பொருள் கொள்ளப்பெற்றுள்ளது. ஸம்ஸ்கிருத அகராதியின்படி 'மஹாராஜ' என்ற சொல்லுக்கு, மற்ற பொருட்களுடன், 'குபேரன்' என்றும் ஒரு பொருளுண்டு. தியாகராஜர், 'மஹாராஜ' என்ற சொல்லினை 'ராஜராஜ' என்று மாற்றியிருக்கலாம். தியாகராஜரின் 'ஸுந்த3ரேஸ்1வருனி' என்ற ஸ1ங்கராப4ரண ராக கீர்த்தனையிலும் இச்சொல் (ராஜராஜ) 'குபேரனை'க் குறிப்பிட்டுப் பயன்படுத்தப்பட்டுள்ளது.

Top


Updated on 09 Sep 2009

Wednesday, July 29, 2009

தியாகராஜ கிருதி - பாஹி ராம சந்த்3ர - ராகம் யது3குல காம்போ4ஜி - Paahi Rama Chandra - Raga Yadukula Kambhoji

பல்லவி
பாஹி ராம சந்த்3ர ராக41ஹரே மாம்
பாஹி ராம சந்த்3ர ராக4

சரணம்
சரணம் 1
ஜனக ஸுதா ரமண காவவே 23தி நீவு
3னுக நன்னு வேக3 ப்3ரோவவே (பாஹி)


சரணம் 2
3எந்த வேடு3கொன்ன நீகு நாயந்து3
இஸுமந்த த3ய லேகயுண்டு3னா (பாஹி)


சரணம் 3
கஷ்டமுலனு தீர்சமண்டினி நீவு
நாகிஷ்ட தை3வமனுகொண்டினி (பாஹி)


சரணம் 4
அம்பு3ஜாக்ஷ வேக3 ஜூட3ரா 4நீ
கடாக்ஷம்பு3
லேனி ஜன்மமேலரா (பாஹி)


சரணம் 5
ஆடலனுசு தோசியுன்னதோ3 லேக நா
லலாட லிகி2த மர்மமெட்டிதோ3 (பாஹி)


சரணம் 6
ஸோ14னலகு நேனு பாத்ரமா 5ராம
யஸோ14னுலகு நுதி பாத்ரமா (பாஹி)


சரணம் 7
நீவு நன்னு ஜூட3 வேளரா கன்ன கன்ன
தாவுல நே வேட3 ஜாலரா (பாஹி)


சரணம் 8
நன்னு ப்3ரோசு வாரு லேருரா ராம நீ
கன்ன தை3வமெந்து3 லேது3ரா (பாஹி)


சரணம் 9
ராஜ ராஜ பூஜித ப்ரபோ4 1ஹரே த்யாக3-
ராஜ ராஜ ராக4வ ப்ரபோ4 (பாஹி)


பொருள் - சுருக்கம்
ஓ இராம சந்திரா! இராகவா! சனகன் மகள் கேள்வா! கமலக்கண்ணா! இராமா! புகழ்ச் செல்வமுடைத்தோரின் போற்றிக்குப் பாத்திரமே! பேரரசர்களால் தொழப் பெற்ற பிரபுவே! ஓ தியாகராசனையாளும், இராகவ பிரபுவே!
  • என்னைக் காப்பாய்

  • புகல் நீயாகையால், என்னை விரைவாகக் காப்பாயய்யா;

  • எத்தனை வேண்டினாலும் உனக்கு என்னிடம் சிறிதளவும் தயை இல்லாமலிருக்குமா?

  • துன்பங்களைத் தீர்ப்பாயென்றேன்; நீ எனக்கு விருப்பமான தெய்வமெனக் கருதினேன்;

  • விரைவாக நோக்குவாயய்யா; உனது கடைக்கண் நோக்கில்லாத பிறவி ஏனய்யா?

  • விளையாட்டெனத் தோன்றியதோ, அன்றி எனது நெற்றி எழுத்தின் மருமம் எப்படிப்பட்டதோ?

  • சோதனைகளுக்கு நான் பாத்திரமோ?

  • நீயென்னை நோக்கத் தருணமய்யா; கண்ட கண்ட இடங்களில் நான் வேண்டவியலேனய்யா;

  • என்னைக் காப்போர் இலரய்யா; உன்னிற் சிறந்த தெய்வமெங்கும் இல்லையய்யா.



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
பாஹி/ ராம/ சந்த்3ர/ ராக4வ/ ஹரே/ மாம்/
காப்பாய்/ இராம/ சந்திரா/ இராகவா/ ஓ/ என்னை/

பாஹி/ ராம/ சந்த்3ர/ ராக4வ/
காப்பாய்/ இராம/ சந்திரா/ இராகவா/


சரணம்
சரணம் 1
ஜனக/ ஸுதா/ ரமண/ காவவே/ க3தி/ நீவு/
சனகன்/ மகள்/ கேள்வா/ காப்பாயய்யா/ புகல்/ நீ/

3னுக/ நன்னு/ வேக3/ ப்3ரோவவே/ (பாஹி)
ஆகையால்/ என்னை/ விரைவாக/ காப்பாயய்யா/


சரணம் 2
எந்த/ வேடு3கொன்ன/ நீகு/ நாயந்து3/
எத்தனை/ வேண்டினாலும்/ உனக்கு/ என்னிடம்/

இஸுமு/-அந்த/ த3ய/ லேக/-உண்டு3னா/ (பாஹி)
(மணல்) சிறிது/ அளவும்/ தயை/ இல்லாமல்/ இருக்குமா/


சரணம் 3
கஷ்டமுலனு/ தீர்சமண்டினி/ நீவு/
துன்பங்களை/ தீர்ப்பாய் என்றேன்/ நீ/

நாகு/-இஷ்ட/ தை3வமு/-அனுகொண்டினி/ (பாஹி)
எனக்கு/ விருப்பமான/ தெய்வம்/ எனக் கருதினேன்/


சரணம் 4
அம்பு3ஜ/-அக்ஷ/ வேக3/ ஜூட3ரா/ நீ/
கமல/ கண்ணா/ விரைவாக/ நோக்குவாயய்யா/ உனது/

கடாக்ஷம்பு3/ லேனி/ ஜன்மமு/-ஏலரா/ (பாஹி)
கடைக்கண் நோக்கு/ இல்லாத/ பிறவி/ ஏனய்யா/


சரணம் 5
ஆடலு/-அனுசு/ தோசி-உன்னதோ3/ லேக/ நா/
விளையாட்டு/ என/ தோன்றியதோ/ அன்றி/ எனது/

லலாட/ லிகி2த/ மர்மமு/-எட்டிதோ3/ (பாஹி)
நெற்றி/ எழுத்தின்/ மருமம்/ எப்படிப்பட்டதோ/


சரணம் 6
ஸோ14னலகு/ நேனு/ பாத்ரமா/ ராம/
சோதனைகளுக்கு/ நான்/ பாத்திரமோ/ இராமா/

யஸோ1/ த4னுலகு/ நுதி/ பாத்ரமா/ (பாஹி)
புகழ்/ செல்வமுடைத்தோரின்/ போற்றிக்கு/ பாத்திரமே/


சரணம் 7
நீவு/ நன்னு/ ஜூட3/ வேளரா/ கன்ன/ கன்ன/
நீ/ என்னை/ நோக்க/ தருணமய்யா/ கண்ட/ கண்ட/

தாவுல/ நே/ வேட3/ ஜாலரா/ (பாஹி)
இடங்களில்/ நான்/ வேண்ட/ இயலேனய்யா/


சரணம் 8
நன்னு/ ப்3ரோசு வாரு/ லேருரா/ ராம/ நீ/
என்னை/ காப்போர்/ இலரய்யா/ இராமா/ உன்னிற்/

கன்ன/ தை3வமு/-எந்து3/ லேது3ரா/ (பாஹி)
சிறந்த/ தெய்வம்/ எங்கும்/ இல்லையய்யா/


சரணம் 9
ராஜ ராஜ/ பூஜித/ ப்ரபோ4/ ஹரே/
பேரரசர்களால்/ தொழப் பெற்ற/ பிரபுவே/ ஓ/

த்யாக3ராஜ/ ராஜ/ ராக4வ/ ப்ரபோ4/ (பாஹி)
தியாகராசனை/ ஆளும்/ இராகவ/ பிரபுவே/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
2 - 3தி நீவு - ஹரே நீவு : இவ்விடத்தில் 'க3தி' என்ற சொல்லில்லாது, 'நீவு' என்ற சொல்லுக்குமட்டும் தனியாகப் பொருள் கூற முடியாது. எனவே, 'க3தி' இல்லாது 'ஹரே' தவறாகும்.

3 - எந்த வேடு3கொன்ன - எல்லா புத்தகங்களிலும் இங்ஙனமே கொடுக்கப்பட்டுள்ளது. ஆயின் இவ்விடத்தில் கடைசி உயிரெழுத்து நீட்டிக்கப்படவேண்டும் - 'எந்த வேடு3கொன்னா' என.

4 - நீ கடாக்ஷம்பு3 - ஹரே நீ கடாக்ஷம்பு3

5 - ராம - ஹரே ராம

Top

மேற்கோள்கள்

விளக்கம்
1 - ஹரே - இச்சொல் ஒருவரை விளிப்பதாகும். எனவே 'ஓ' எனப் பொருள் கொள்ளப்பட்டது.

நெற்றி எழுத்து - தலை விதி

Top


Updated on 30 Jul 2009