Showing posts with label Mayamalava Gaula. Show all posts
Showing posts with label Mayamalava Gaula. Show all posts

Thursday, November 25, 2010

தியாகராஜ கிருதி - விது3லகு ம்ரொக்கெத3 - ராகம் மாயா மாளவ கௌ3ள - Vidulaku Mrokkeda - Raga Mayamalava Gaula

பல்லவி
விது3லகு ம்ரொக்கெத3 ஸங்கீ3த கோ(விது3லகு)

அனுபல்லவி
முத3முன 11ங்கர க்ரு2 2ஸாம நிக3
விது3லகு 3நாதா3த்மக ஸப்த ஸ்வர (வி)

சரணம்
கமலா கௌ3ரீ வாகீ3ஸ்1வரீ விதி4
3ருட3 த்4வஜ ஸி1வ நாரது3லு
அமரேஸ1 44ரத 5காஸ்1யப 6சண்டீ31
ஆஞ்ஜனேய கு3ஹ க3ஜ முகு2லு
7ஸு-ம்ரு2கண்டு3 கும்ப4ஜ தும்பு3ரு வர
8ஸோமேஸ்1வர 9ஸா1ர்ங்க3 தே3 10நந்தீ3
ப்ரமுகு2லகு த்யாக3ராஜ வந்த்3யுலகு
ப்3ரஹ்மானந்த3 ஸுதா4ம்பு3தி4 மர்ம (வி)


பொருள் - சுருக்கம்
  • இசை வல்லுனர்களை வணங்கினேன்

    • சங்கரனால் இயற்றப்பெற்ற சாம வேத வல்லுனர்களை,
    • நாதவடிவான ஏழு சுரங்களின் வல்லுனர்களைக்

  • களிப்புடன் வணங்கினேன்

    • கமலா, கௌரி, நாமகள், நான்முகன், கருடன் கொடியோன், சிவன், நாரதர் ஆகியோர்,
    • வானோர் தலைவன், பரதர், கசியபர், சண்டேசுரர், அனுமன், குகன், யானைமுகத்தோன் ஆகியோர்,
    • மார்க்கண்டேயர், குடமுனி, தும்புரு, உயர் சோமேசுரர், சார்ங்கதேவர், நந்தி ஆகிய தலைசிறந்தோரை,
    • தியாகராசனால் வணங்கப்படுவோரை,
    • (மற்றும்) பேரானந்த அமிழ்தக்கடலின் மருமத்தினை யறிந்த

  • (இசை) வல்லுனர்களை வணங்கினேன்



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
(கோ)விது3லகு/ ம்ரொக்கெத3/ ஸங்கீ3த/ கோ(விது3லகு)
வல்லுனர்களை/ வணங்கினேன்/ இசை/ வல்லுனர்களை


அனுபல்லவி
முத3முன/ ஸ1ங்கர/ க்ரு2த/ ஸாம/ நிக3ம/
களிப்புடன்/ சங்கரனால்/ இயற்றப்பெற்ற/ சாம/ வேத/

விது3லகு/ நாத3/-ஆத்மக/ ஸப்த/ ஸ்வர/ (வி)
வல்லுனர்களை/ நாத/ வடிவான/ ஏழு/ சுரங்களின்/ வல்லுனர்களை...


சரணம்
கமலா/ கௌ3ரீ/ வாக்/-ஈஸ்1வரீ/ விதி4/
கமலா/ கௌரி/ நா/ மகள்/ நான்முகன்/

3ருட3/ த்4வஜ/ ஸி1வ/ நாரது3லு/
கருடன்/ கொடியோன்/ சிவன்/ நாரதர் ஆகியோர்/

அமர/-ஈஸ1/ ப4ரத/ காஸ்1யப/ சண்டீ31/
வானோர்/ தலைவன்/ பரதர்/ கசியபர்/ சண்டேசுரர்/

ஆஞ்ஜனேய/ கு3ஹ/ க3ஜ/ முகு2லு/
அனுமன்/ குகன்/ யானை/ முகத்தோன் ஆகியோர்/

ஸு-ம்ரு2கண்டு3ஜ/ கும்ப4ஜ/ தும்பு3ரு/ வர/
மார்க்கண்டேயர்/ குடமுனி/ தும்புரு/ உயர்/

ஸோமேஸ்1வர/ ஸா1ர்ங்க3/ தே3வ/ நந்தீ3/
சோமேசுரர்/ சார்ங்க/ தேவர்/ நந்தி (ஆகிய)/

ப்ரமுகு2லகு/ த்யாக3ராஜ/ வந்த்3யுலகு/
தலைசிறந்தோரை/ தியாகராசனால்/ வணங்கப்படுவோரை/

ப்3ரஹ்மானந்த3/ ஸுதா4/-அம்பு3தி4/ மர்ம/ (வி)
(மற்றும்) பேரானந்த/ அமிழ்த/ கடலின்/ மருமத்தினை (யறிந்த)/ வல்லுனர்களை...


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)

மேற்கோள்கள்
2 - ஸாம நிக3 - திரு AS பஞ்சாபகேச ஐயர் அவர்களின் ‘karnAtaka sangIta SAstra’ என்ற புத்தகத்தில் (3-வது பக்கம்), 'ருக்' மற்றும் 'யஜுர்' வேதங்களில், மூன்று சுரங்கள் மட்டுமே யுள்ளன என்றும், ஆனால், 'சாம' வேதத்தினில், ஏழு சுரங்களும் உள்ளன என்று கூறப்பட்டுள்ளது. அதனால்தானே என்னவோ, 'சாம வேதம் ஓதலை', 'சாம கானம்' எனப்படுகின்றது.

சங்கீத வல்லுனர்களுடன், சாம வேத வல்லுனர்களையும் குறிப்பிட்டுள்ளதனால் (ஸாம நிக3ம விது3லகு), சாம வேத வல்லுனர்கள், சங்கீத வல்லுனர்களும் ஆவர் என்றும் கொள்ளலாம்.

உரையின் ரசம் கவிதை; கவிதையின் ரசம் இசை; பிரணவ வடிவான சாம வேத கானம் (உத்3கீ3த) இசையின் ரசமாம். எனவே, ஓங்காரம் (பிரணவ நாதம்) மிக்குயர்ந்தது, மிக்கு மதிப்புள்ளது, அனைத்து ரசங்களுக்கும் ரசமானது. சாம வேதம் மற்றும் இசைக்கும் உள்ள தொடர்பு பற்றி கட்டுரை நோக்கவும்.

Top

3 - நாத3 - நாதம் என்பது, இயற்கையில் உள்ள (இசைக்கப்படாத) ஒலிகளையும் (அனாஹத நாதம்) மற்றும், இசைக்கப்படும் ஒலிகளையும் (அஹத நாதம்) குறிக்கும். கபீர் தாஸர் 'அனாஹத நாதம் நிரந்தரமாக ஒலித்துக்கொண்டிருக்கின்றது' என்று கூறுகின்றார். அனாஹத நாதத்தினைப் பற்றி விவரங்கள் ஸ்வாமி சிவானந்தரின் ‘kuNDalini yOga’ (download pdf) என்ற e-book-ல் காணலாம்.

தியாகராஜர், தமது 'வர ராக3 லயக்3ஞுலு' என்ற கீர்த்தனையில், 'உடம்பில் உண்டாகும் நாதம்' என்று குறிப்பிடுகின்றார். லலிதா ஸஹஸ்ர நாமத்தில், அம்மையின் பெயர், 'பரா', 'பஸ்1யந்தீ', 'மத்4யமா', 'வைக2ரீ ரூபா' என்று கூறப்பட்டுள்ளது.

'பஸ்1யந்தீ' (செவிக்குக் கேளாதது), 'வைக2ரீ' (செவிக்குக் கேட்பது), 'மத்4யமா' (இவை இரண்டிற்கும் இடைப்பட்ட நிலை) - ஆகிய மூன்று நி்லைகளையும் கடந்த 'நாத நிலை', 'பரா' எனப்படும். (ஸ்வாமி தபஸ்யானந்தாவின் ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்). காஞ்சி மாமுனிவரின் விளக்கம் (Page 30) நோக்கவும்.

Top

4 - 4ரத - 'நாட்டிய சாத்திரம்' இயற்றிய பரத முனிவர்.

5 - காஸ்1யப - தேவர்கள் மற்றும், அசுரர்களுக்குத் தந்தை 'காசியபர்' எனப்படுவார். தசரதன் மற்றும் ராமனுடைய அவையில், வாமதேவர், வசிஷ்டர், ஜாபாலி மற்றும் மார்க்கண்டேயருடன் காசியபரும் (ஏழு ரிஷிகளில் ஒருவர்) புரோகிதராக இருந்தார். இவர்களில் யாரை தியாகராஜர் குறிப்பிடுகின்றார் என்று தெரியவில்லை.

6 - சண்டீ31 - சண்டேசுரர் - சிவனின் வடிவங்களில் ஒன்று.

7 - ஸு-ம்ரு2கண்டு3 - மார்க்கண்டேயர்

Top

8 - ஸோமேஸ்1வர - 17-வது நூற்றாண்டில் வாழ்ந்த, 'ராக3 விபோ34' என்ற இசை நூல் இயற்றிய சோமநாதர் என்பவரை, தியாகராஜர், 'ஸோமேஸ்வர' என்று குறிப்பிடுகின்றார் எனக் கருதுகின்றேன்.

9 - ஸா1ர்ங்க3 தே3 - சார்ங்க தேவ - ‘சங்கீத ரத்னாகர’ என்ற இசை நூலினை இயற்றி்யவர். 13-வது நூற்றாண்டில் இந்நூல் இயற்றப்பெற்றது.

10 - நந்தீ3 - சிவன் தாண்டவம் ஆடியபோது, நந்தி மிருதங்கம் வாசித்ததாகக் கூறப்படும். ஆனால், திருமூலரின் 'திருமந்திர'த்தில், 'நந்தி' என்பது 'பரம்பொருளின் ஒரு பெயர்' என்று கூறப்பட்டுள்ளது.

Top

விளக்கம்
1 - 1ங்கர க்ரு2 - சங்கரனால் இயற்றப்பெற்ற (சாம வேதம்). தியாகராஜர், தமது 'நாத3 தனுமனிஸ1ம்' என்ற கீர்த்தனையில், சங்கரனை, 'நாத உருவினன்' என்று கூறுகின்றார். 'ராக1 ஸுதா4 ரஸ' என்ற கீர்த்தனையில், 'சதாசிவனின் மயமான நாதோங்கார சுரங்களை அறிந்தோர்' என்கின்றார். எனவே, இங்கு 'சங்கரன்' எனப்படுவது பரம்பொருளாகிய 'சதாசிவ'னைக் குறிக்கும். மும்மூர்த்திகளில் ஒருவரான சிவனைப் பற்றி, சரணத்தில் தனியாகக் கூறப்பட்டுள்ளது.

கருடன் கொடியோன் - அரி
குகன் - முருகன்
குடமுனி - அகத்தியர்

Top


Updated on 25 Nov 2010

Tuesday, November 23, 2010

தியாகராஜ கிருதி - மேரு ஸமான - ராகம் மாயா மாளவ கௌ3ள - Meru Samana - Raga Maya Malava Gaula

பல்லவி
மேரு ஸமான தீ4ர வரத3 ரகு4
வீர ஜூதாமு ராரா மஹா (மேரு)

அனுபல்லவி
1ஸார ஸார ஒய்யாரபு நட3லனு
நீரத3 காந்தினி நீ டீ2வினி மஹா (மேரு)

சரணம்
அலகல முத்3து3னு திலகபு தீருனு
தளுகு செக்குலசே தனரு நெம்மோமுனு
3ளமுன ஸோ1பி4ல்லு கனக பூ4ஷணமுல
3ளித து3ர்-மானவ த்யாக3ராஜார்சித (மேரு)


பொருள் - சுருக்கம்
  • மகாமேரு நிகர் தீரனே! வரதா! இரகுவீரா!
  • சாரத்தின் சாரமே!
  • தீயோரை வதைத்தோனே! தியாகராசன் வழிபடுவோனே!

  • காண்போம்.
  • வாருமய்யா.

    • ஒய்யார நடையினை,
    • கார்முகில் (நிகர்) ஒளியினை,
    • உனது மாட்சிமையினை,

    • (முடிச்) சுருளல்களின் ஒயிலினை,
    • திலகத்தின் நேர்த்தியினை,
    • தளுக்குக் கன்னங்களுடன் மின்னும் இன்முகத்தினை,
    • கழுத்தில் மிளிரும் பொன் அணிகலன்களினை,

  • காண்போம்.
  • வாருமய்யா.



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
மேரு/ ஸமான/ தீ4ர/ வரத3/ ரகு4/
மேரு/ நிகர்/ தீரனே/ வரதா/ இரகு/

வீர/ ஜூதாமு/ ராரா/ மஹா/ (மேரு)
வீரா/ காண்போம்/ வாருமய்யா/ மகா/ மேரு...


அனுபல்லவி
ஸார/ ஸார/ ஒய்யாரபு/ நட3லனு/
சாரத்தின்/ சாரமே/ ஒய்யார/ நடையினை/

நீரத3/ காந்தினி/ நீ/ டீ2வினி/ மஹா/ (மேரு)
கார்முகில்/ (நிகர்) ஒளியினை/ உனது/ மாட்சிமையினை/ மகா/ மேரு...


சரணம்
அலகல/ முத்3து3னு/ திலகபு/ தீருனு/
(முடிச்) சுருளல்களின்/ ஒயிலினை/ திலகத்தின்/ நேர்த்தியினை/

தளுகு/ செக்குலசே/ தனரு/ நெம்மோமுனு/
தளுக்கு/ கன்னங்களுடன்/ மின்னும்/ இன்முகத்தினை/

3ளமுன/ ஸோ1பி4ல்லு/ கனக/ பூ4ஷணமுல/
கழுத்தில்/ மிளிரும்/ பொன்/ அணிகலன்களினை/

3ளித/ து3ர்-மானவ/ த்யாக3ராஜ/-அர்சித/ (மேரு)
வதைத்தோனே/ தீயோரை/ தியாகராசன்/ வழிபடும்/ மேரு...


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)

மேற்கோள்கள்
1 - ஸார ஸார - சாரத்தின் சாரம் - பரம்பொருளின் இலக்கணம். இது குறித்து பிருஹதாரண்யக உபநிடதம் கூறுவது -

"....(பரம்பொருளின்) மருமப் பெயர் சத்தியத்தின் சத்தியம்; பிராணம் சத்தியமாம் - அது அதனுடைய சத்தியம்." (II. i. 20)

"பிராணத்தின் பிராணத்தினை, பார்வையின் பார்வையினை, செவியின் கேள்வியினை, உள்ளத்தின் உள்ளத்தினை அறிந்தோர், அந்த முதற்-பழம்-பொருளினை உணர்ந்தவராவர்." (IV. iv. 18)
(ஸ்வாமி மாதவானந்தாவின் ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்)

Top

விளக்கம்
மகாமேரு - பொன்மலை

Top


Updated on 24 Nov 2010

தியாகராஜ கிருதி - தே3வி ஸ்ரீ துளஸம்ம - ராகம் மாயாமாளவ கௌ3ள - Devi Sri Tulasamma - Raga Mayamalava Gaula

பல்லவி
தே3வி ஸ்ரீ துளஸம்ம ப்3ரோசுட-
கிதே3 ஸமயமம்ம மாயம்ம

அனுபல்லவி
1பாவனீ ப்3ரஹ்மேந்த்3ராது3லு நீ
4க்திசே விலஸில்லிரட மஹா(தே3வி)

சரணம்
நீவு லேக 21ங்கரு மா ரமணுடு3 3நீரஜாது3லனொல்லரட
நீவு லேக 4தீர்த2மு ஸேவிஞ்சுட நீரனுசு பேராயெனட
நீவு லேக 5த்ராஸுன ஸ்ரீ ஹரி ஸரி நில்வக 6போயெனட
நீவு லேக 7வனமாலயனி பலிகிரா
நீ ஸரியெவ்வரே த்யாக3ராஜ நுத மஹா(தே3வி)


பொருள் - சுருக்கம்
  • தேவி! துளசித்தாயே! எந்தாயே!
  • தூயவளே! மகாதேவி!
  • தியாகராசனால் போற்றப் பெற்றவளே!

  • (என்னைக்) காக்க இதுவே தருணமம்மா!

    • பிரமன் இந்திராதியர் உனது பக்தியினால் ஒளிர்ந்தனராம்!

    • நீயின்றி, சங்கரன், மா மணாளன், தாமரை ஆகியவற்றை விரும்பராம்!
    • நீயின்றி, தீர்த்தம் சேவனம் செய்ய, நீரெனப் பெயராகியதாம்!
    • நீயின்றி, தராசினில், அரிக்கு (எப்பொருளும்) சரி நில்லாமற்போனதாம்!
    • நீயின்றி, (மாலையை) வனமாலை யென்றனரா?


  • உனக்கிணை யாரே!

  • (என்னைக்) காக்க இதுவே தருணமம்மா!



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
தே3வி/ ஸ்ரீ துளஸம்ம/ ப்3ரோசுடகு/-
தேவி/ ஸ்ரீ துளசித்தாயே/ (என்னைக்) காக்க/

இதே3/ ஸமயமம்ம/ மாயம்ம/
இதுவே/ தருணமம்மா/ எந்தாயே/


அனுபல்லவி
பாவனீ/ ப்3ரஹ்மா/-இந்த்3ர-ஆது3லு/ நீ/
தூயவளே/ பிரமன்/ இந்திராதியர்/ உனது/

4க்திசே/ விலஸில்லிரி-அட மஹா/(தே3வி)
பக்தியினால்/ ஒளிர்ந்தனராம்/ மகா/ தேவி!


சரணம்
நீவு/ லேக/ ஸ1ங்கரு/ மா/ ரமணுடு3/ நீரஜ/-ஆது3ல/-ஒல்லரு-அட/
நீ/ யின்றி/ சங்கரன்/ மா/ மணாளன்/ தாமரை/ ஆகியவற்றை/ விரும்பராம்/

நீவு/ லேக/ தீர்த2மு/ ஸேவிஞ்சுட/ நீரு/-அனுசு/ பேரு/-ஆயெனு-அட/
நீ/ யின்றி/ தீர்த்தம்/ சேவனம் செய்ய/ நீர்/ என/ பெயர்/ ஆகியதாம்/

நீவு/ லேக/ த்ராஸுன/ ஸ்ரீ ஹரி/ ஸரி/ நில்வக/ போயெனு-அட/
நீ/ யின்றி/ தராசினில்/ ஸ்ரீ அரிக்கு/ (எப்பொருளும்) சரி/ நில்லாமற்/ போனதாம்/

நீவு/ லேக/ வனமால/-அனி பலிகிரா/
நீ/ யின்றி/ (மாலையை) வனமாலை/ யென்றனரா/

நீ/ ஸரி/-எவ்வரே/ த்யாக3ராஜ/ நுத/ மஹா/(தே3வி)
உனக்கு/ இணை/ யாரே/ தியாகராசனால்/ போற்றப் பெற்றவளே/ மகா/ தேவி!


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
2 - 1ங்கரு - ஸ1ங்கரி.

3 - நீரஜாது3லனொல்லரட - நீரஜாது3லனொல்லட3ட : 'ஸ1ங்கரி' என்பது சரியானால், 'நீரஜாது3லனொல்லட3ட' என்பது சரியாக இருக்கலாம். அன்றேல், அது தவறாகும்.

6 - போயெனட - பா3ஸெனட : இவ்விடத்தில் 'பா3ஸெனட' என்பது தவறாகும்.

Top

மேற்கோள்கள்
5 - த்ராஸுன - தராசு - சத்தியபாமை கண்ணனை எடைபோட்ட நிகழ்ச்சி. மகாபாரதத்தில் இக்கதை காணப்படுகின்றது. கதைச் சுருக்கம் நோக்கவும்.

7 - வனமால - வனமாலை - துழாய் (துளசி) மற்றும், மல்லிகை, மந்தாரம், பாரிஜாதம், தாமரை ஆகிய மலர்களால் தொடுக்கப்படும், அரியணியும் மாலை, 'வைஜயந்தி' அல்லது 'வனமாலை' எனப்படும். மாலைகளைப்பற்றியும், முக்கியமாக, 'வைஜயந்தி', 'வனமாலை'யைப் பற்றிய கட்டுரை நோக்கவும்.

Top

விளக்கம்
1 - பாவனீ - துயவள் அல்லது தூய்மைப் படுத்துபவள் - சரணத்தின் 'தீர்த2மு' என்ற வரியினை நோக்கவும். துழாய் சேர்க்காது, தீர்த்தம், 'தீர்த்தம்' என வழங்காது.

4 - தீர்த2மு - தீர்த்தம் - கோயிலில், இறைவன் வழிபாட்டுக்குப் பின்னர் வழங்கப்படும் புனித நீர்.

Top


Updated on 23 Nov 2010

Monday, November 22, 2010

தியாகராஜ கிருதி - துலஸீ த3ளமுலசே - ராகம் மாயாமாளவ கௌ3ள - Tulasi Dalamulace - Raga Mayamalava Gaula

பல்லவி
துலஸீ த3ளமுலசே ஸந்தோஷமுகா3 பூஜிந்து

அனுபல்லவி
பலுமாரு சிர காலமு பரமாத்முனி பாத3முலனு (து)

சரணம்
ஸரஸீருஹ புன்னாக3 சம்பக பாடல குரவக
கரவீர மல்லிகா ஸுக3ந்த4 ராஜ ஸுமமுல்
4ரனிவியொக பர்யாயமு த4ர்மாத்முனி ஸாகேத
புர வாஸுனி ஸ்ரீ ராமுனி வர த்யாக3ராஜ நுதுனி (து)


பொருள் - சுருக்கம்
  • துழாய்த் தழைகளினால், களிப்புடன் வழிபடுவேனே.

    • பன்முறை, நீண்ட காலம், பரம்பொருளின் திருவடிகளைத்

  • துழாய்த் தழைகளினால், களிப்புடன் வழிபடுவேனே.

    • தாமரை, புன்னை, செண்பகம், பாதிரி, மருதாணி, அரளி, மல்லிகை - இச்சிறந்த நறுமண மலர்களால்,
    • அறவுருவினை, சாகேத நகருறைவோனை, இராமனை, உயர் தியாகராசன் போற்றுவோனை,

  • புவியில், இத்தருணம், துழாய்த் தழைகளினால், களிப்புடன் வழிபடுவேனே.



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
துலஸீ/ த3ளமுலசே/ ஸந்தோஷமுகா3/ பூஜிந்து/
துழாய்/ தழைகளினால்/ களிப்புடன்/ வழிபடுவேனே/


அனுபல்லவி
பலுமாரு/ சிர/ காலமு/ பரமாத்முனி/ பாத3முலனு/ (து)
பன்முறை/ நீண்ட/ காலம்/ பரம்பொருளின்/ திருவடிகளை/ துழாய்...


சரணம்
ஸரஸீருஹ/ புன்னாக3/ சம்பக/ பாடல/ குரவக/
தாமரை/ புன்னை/ செண்பகம்/ பாதிரி/ மருதாணி/

கரவீர/ மல்லிகா/ ஸுக3ந்த4/ ராஜ/ ஸுமமுல்/
அரளி/ மல்லிகை/ நறுமண/ சிறந்த/ மலர்களால்/

4ரனு/-இவி/-ஒக/ பர்யாயமு/ த4ர்மாத்முனி/ ஸாகேத/
புவியில்/ இவை/ இத்தருணம்/ அறவுருவினை/ சாகேத/

புர/ வாஸுனி/ ஸ்ரீ ராமுனி/ வர/ த்யாக3ராஜ/ நுதுனி/ (து)
நகர்/ உறைவோனை/ ஸ்ரீ ராமனை/ உயர்/ தியாகராசன்/ போற்றுவோனை/ துழாய்...


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)

மேற்கோள்கள்

விளக்கம்
இத்தருணம் - இப்பிறவியினிலென
சாகேத நகர் - அயோத்தி நகர்
உயர் - இறைவனைக் குறிக்கும்.

Top


Updated on 22 Nov 2010