Thursday, November 25, 2010

தியாகராஜ கிருதி - விது3லகு ம்ரொக்கெத3 - ராகம் மாயா மாளவ கௌ3ள - Vidulaku Mrokkeda - Raga Mayamalava Gaula

பல்லவி
விது3லகு ம்ரொக்கெத3 ஸங்கீ3த கோ(விது3லகு)

அனுபல்லவி
முத3முன 11ங்கர க்ரு2 2ஸாம நிக3
விது3லகு 3நாதா3த்மக ஸப்த ஸ்வர (வி)

சரணம்
கமலா கௌ3ரீ வாகீ3ஸ்1வரீ விதி4
3ருட3 த்4வஜ ஸி1வ நாரது3லு
அமரேஸ1 44ரத 5காஸ்1யப 6சண்டீ31
ஆஞ்ஜனேய கு3ஹ க3ஜ முகு2லு
7ஸு-ம்ரு2கண்டு3 கும்ப4ஜ தும்பு3ரு வர
8ஸோமேஸ்1வர 9ஸா1ர்ங்க3 தே3 10நந்தீ3
ப்ரமுகு2லகு த்யாக3ராஜ வந்த்3யுலகு
ப்3ரஹ்மானந்த3 ஸுதா4ம்பு3தி4 மர்ம (வி)


பொருள் - சுருக்கம்
  • இசை வல்லுனர்களை வணங்கினேன்

    • சங்கரனால் இயற்றப்பெற்ற சாம வேத வல்லுனர்களை,
    • நாதவடிவான ஏழு சுரங்களின் வல்லுனர்களைக்

  • களிப்புடன் வணங்கினேன்

    • கமலா, கௌரி, நாமகள், நான்முகன், கருடன் கொடியோன், சிவன், நாரதர் ஆகியோர்,
    • வானோர் தலைவன், பரதர், கசியபர், சண்டேசுரர், அனுமன், குகன், யானைமுகத்தோன் ஆகியோர்,
    • மார்க்கண்டேயர், குடமுனி, தும்புரு, உயர் சோமேசுரர், சார்ங்கதேவர், நந்தி ஆகிய தலைசிறந்தோரை,
    • தியாகராசனால் வணங்கப்படுவோரை,
    • (மற்றும்) பேரானந்த அமிழ்தக்கடலின் மருமத்தினை யறிந்த

  • (இசை) வல்லுனர்களை வணங்கினேன்



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
(கோ)விது3லகு/ ம்ரொக்கெத3/ ஸங்கீ3த/ கோ(விது3லகு)
வல்லுனர்களை/ வணங்கினேன்/ இசை/ வல்லுனர்களை


அனுபல்லவி
முத3முன/ ஸ1ங்கர/ க்ரு2த/ ஸாம/ நிக3ம/
களிப்புடன்/ சங்கரனால்/ இயற்றப்பெற்ற/ சாம/ வேத/

விது3லகு/ நாத3/-ஆத்மக/ ஸப்த/ ஸ்வர/ (வி)
வல்லுனர்களை/ நாத/ வடிவான/ ஏழு/ சுரங்களின்/ வல்லுனர்களை...


சரணம்
கமலா/ கௌ3ரீ/ வாக்/-ஈஸ்1வரீ/ விதி4/
கமலா/ கௌரி/ நா/ மகள்/ நான்முகன்/

3ருட3/ த்4வஜ/ ஸி1வ/ நாரது3லு/
கருடன்/ கொடியோன்/ சிவன்/ நாரதர் ஆகியோர்/

அமர/-ஈஸ1/ ப4ரத/ காஸ்1யப/ சண்டீ31/
வானோர்/ தலைவன்/ பரதர்/ கசியபர்/ சண்டேசுரர்/

ஆஞ்ஜனேய/ கு3ஹ/ க3ஜ/ முகு2லு/
அனுமன்/ குகன்/ யானை/ முகத்தோன் ஆகியோர்/

ஸு-ம்ரு2கண்டு3ஜ/ கும்ப4ஜ/ தும்பு3ரு/ வர/
மார்க்கண்டேயர்/ குடமுனி/ தும்புரு/ உயர்/

ஸோமேஸ்1வர/ ஸா1ர்ங்க3/ தே3வ/ நந்தீ3/
சோமேசுரர்/ சார்ங்க/ தேவர்/ நந்தி (ஆகிய)/

ப்ரமுகு2லகு/ த்யாக3ராஜ/ வந்த்3யுலகு/
தலைசிறந்தோரை/ தியாகராசனால்/ வணங்கப்படுவோரை/

ப்3ரஹ்மானந்த3/ ஸுதா4/-அம்பு3தி4/ மர்ம/ (வி)
(மற்றும்) பேரானந்த/ அமிழ்த/ கடலின்/ மருமத்தினை (யறிந்த)/ வல்லுனர்களை...


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)

மேற்கோள்கள்
2 - ஸாம நிக3 - திரு AS பஞ்சாபகேச ஐயர் அவர்களின் ‘karnAtaka sangIta SAstra’ என்ற புத்தகத்தில் (3-வது பக்கம்), 'ருக்' மற்றும் 'யஜுர்' வேதங்களில், மூன்று சுரங்கள் மட்டுமே யுள்ளன என்றும், ஆனால், 'சாம' வேதத்தினில், ஏழு சுரங்களும் உள்ளன என்று கூறப்பட்டுள்ளது. அதனால்தானே என்னவோ, 'சாம வேதம் ஓதலை', 'சாம கானம்' எனப்படுகின்றது.

சங்கீத வல்லுனர்களுடன், சாம வேத வல்லுனர்களையும் குறிப்பிட்டுள்ளதனால் (ஸாம நிக3ம விது3லகு), சாம வேத வல்லுனர்கள், சங்கீத வல்லுனர்களும் ஆவர் என்றும் கொள்ளலாம்.

உரையின் ரசம் கவிதை; கவிதையின் ரசம் இசை; பிரணவ வடிவான சாம வேத கானம் (உத்3கீ3த) இசையின் ரசமாம். எனவே, ஓங்காரம் (பிரணவ நாதம்) மிக்குயர்ந்தது, மிக்கு மதிப்புள்ளது, அனைத்து ரசங்களுக்கும் ரசமானது. சாம வேதம் மற்றும் இசைக்கும் உள்ள தொடர்பு பற்றி கட்டுரை நோக்கவும்.

Top

3 - நாத3 - நாதம் என்பது, இயற்கையில் உள்ள (இசைக்கப்படாத) ஒலிகளையும் (அனாஹத நாதம்) மற்றும், இசைக்கப்படும் ஒலிகளையும் (அஹத நாதம்) குறிக்கும். கபீர் தாஸர் 'அனாஹத நாதம் நிரந்தரமாக ஒலித்துக்கொண்டிருக்கின்றது' என்று கூறுகின்றார். அனாஹத நாதத்தினைப் பற்றி விவரங்கள் ஸ்வாமி சிவானந்தரின் ‘kuNDalini yOga’ (download pdf) என்ற e-book-ல் காணலாம்.

தியாகராஜர், தமது 'வர ராக3 லயக்3ஞுலு' என்ற கீர்த்தனையில், 'உடம்பில் உண்டாகும் நாதம்' என்று குறிப்பிடுகின்றார். லலிதா ஸஹஸ்ர நாமத்தில், அம்மையின் பெயர், 'பரா', 'பஸ்1யந்தீ', 'மத்4யமா', 'வைக2ரீ ரூபா' என்று கூறப்பட்டுள்ளது.

'பஸ்1யந்தீ' (செவிக்குக் கேளாதது), 'வைக2ரீ' (செவிக்குக் கேட்பது), 'மத்4யமா' (இவை இரண்டிற்கும் இடைப்பட்ட நிலை) - ஆகிய மூன்று நி்லைகளையும் கடந்த 'நாத நிலை', 'பரா' எனப்படும். (ஸ்வாமி தபஸ்யானந்தாவின் ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்). காஞ்சி மாமுனிவரின் விளக்கம் (Page 30) நோக்கவும்.

Top

4 - 4ரத - 'நாட்டிய சாத்திரம்' இயற்றிய பரத முனிவர்.

5 - காஸ்1யப - தேவர்கள் மற்றும், அசுரர்களுக்குத் தந்தை 'காசியபர்' எனப்படுவார். தசரதன் மற்றும் ராமனுடைய அவையில், வாமதேவர், வசிஷ்டர், ஜாபாலி மற்றும் மார்க்கண்டேயருடன் காசியபரும் (ஏழு ரிஷிகளில் ஒருவர்) புரோகிதராக இருந்தார். இவர்களில் யாரை தியாகராஜர் குறிப்பிடுகின்றார் என்று தெரியவில்லை.

6 - சண்டீ31 - சண்டேசுரர் - சிவனின் வடிவங்களில் ஒன்று.

7 - ஸு-ம்ரு2கண்டு3 - மார்க்கண்டேயர்

Top

8 - ஸோமேஸ்1வர - 17-வது நூற்றாண்டில் வாழ்ந்த, 'ராக3 விபோ34' என்ற இசை நூல் இயற்றிய சோமநாதர் என்பவரை, தியாகராஜர், 'ஸோமேஸ்வர' என்று குறிப்பிடுகின்றார் எனக் கருதுகின்றேன்.

9 - ஸா1ர்ங்க3 தே3 - சார்ங்க தேவ - ‘சங்கீத ரத்னாகர’ என்ற இசை நூலினை இயற்றி்யவர். 13-வது நூற்றாண்டில் இந்நூல் இயற்றப்பெற்றது.

10 - நந்தீ3 - சிவன் தாண்டவம் ஆடியபோது, நந்தி மிருதங்கம் வாசித்ததாகக் கூறப்படும். ஆனால், திருமூலரின் 'திருமந்திர'த்தில், 'நந்தி' என்பது 'பரம்பொருளின் ஒரு பெயர்' என்று கூறப்பட்டுள்ளது.

Top

விளக்கம்
1 - 1ங்கர க்ரு2 - சங்கரனால் இயற்றப்பெற்ற (சாம வேதம்). தியாகராஜர், தமது 'நாத3 தனுமனிஸ1ம்' என்ற கீர்த்தனையில், சங்கரனை, 'நாத உருவினன்' என்று கூறுகின்றார். 'ராக1 ஸுதா4 ரஸ' என்ற கீர்த்தனையில், 'சதாசிவனின் மயமான நாதோங்கார சுரங்களை அறிந்தோர்' என்கின்றார். எனவே, இங்கு 'சங்கரன்' எனப்படுவது பரம்பொருளாகிய 'சதாசிவ'னைக் குறிக்கும். மும்மூர்த்திகளில் ஒருவரான சிவனைப் பற்றி, சரணத்தில் தனியாகக் கூறப்பட்டுள்ளது.

கருடன் கொடியோன் - அரி
குகன் - முருகன்
குடமுனி - அகத்தியர்

Top


Updated on 25 Nov 2010

No comments: