Showing posts with label Kannada Gaula Raga. Show all posts
Showing posts with label Kannada Gaula Raga. Show all posts

Sunday, December 14, 2008

ஸொக3ஸு ஜூட3 - ராகம் கன்னட3 கௌ3ள - Sogasu Jooda - Raga Kannada Gaula

பல்லவி
ஸொக3ஸு ஜூட3 தரமா நீ

அனுபல்லவி
நிக3-நிக3மனுசு கபோல
யுக3முசே மெரயு மோமு (ஸொ)

சரணம்
சரணம் 1
அமரார்சித பத3 யுக3மு1
அப4ய ப்ரத3 கர யுக3மு1
கமனீய தனு நிந்தி3
காம காம ரிபு நுத நீ (ஸொ)

சரணம் 2
வர 2பி3ம்ப3 ஸமாத4ரமு1
3வகுள ஸுமம்பு3யுரமு1
கர த்4ரு2த ஸ1ர கோத3ண்ட3
மரகதாங்க3 வரமைன (ஸொ)

சரணம் 3
சிரு நக3வுலு1 முங்கு3ருலு1
மரி கன்னுல தேட1
வர 4த்யாக3ராஜ
வந்த3னீய
யிடுவண்டி (ஸொ)


பொருள் - சுருக்கம்
காமன் பகைவனால் போற்றப்பெற்றோனே! மரகத நிற அங்கங்களோனே! தியாகராசனால் வணங்கப் பெற்ற புனிதனே!
உனது ஒய்யாரத்தினை (வேறெங்கும்) காண இயலுமா?
  • மினுமினுக்குமிரு கன்னங்களுடன், ஒளிரும் வதனம்;

  • அமரரால் தொழப்பெற்ற திருவடிகள்;

  • அபயமளிக்கும் கரங்கள்;

  • காமனை எள்ளும் விரும்பத்தகு உடல்;

  • சிவந்த, கோவைப்பழ நிகர் அதரங்கள்;

  • மகிழம்பூக்கள் திகழும் மார்பு;

  • கையிலேந்தும் அம்புகள் மற்றும், கோதண்டம்;

  • புன்னகை;

  • முடிச்சுருளல்கள்; மற்றும்

  • கண்களின் தெளிவு; -

இப்படிப்பட்ட சிறந்த ஒய்யாரத்தினைக் காண இயலுமா?


பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ஸொக3ஸு/ ஜூட3/ தரமா/ நீ/
ஒய்யாரத்தினை/ காண/ இயலுமா/ உனது/


அனுபல்லவி
நிக3-நிக3-அனுசு/ கபோல/
மினுமினுக்கும்/ கன்னங்கள்/

யுக3முசே/ மெரயு/ மோமு/ (ஸொ)
இரண்டுடன்/ ஒளிரும்/ வதனத்தின்/ ஒய்யாரத்தினை...


சரணம்
சரணம் 1
அமர/-அர்சித/ பத3/ யுக3மு/
அமரரால்/ தொழப்பெற்ற/ திருவடி/ இணை/

அப4ய/ ப்ரத3/ கர/ யுக3மு/
அபயம்/ அளிக்கும்/ கரங்களின்/ இணை/

கமனீய/ தனு/ நிந்தி3த/
விரும்பத்தகு/ உடல்/ எள்ளும்/

காம/ காம/ ரிபு/ நுத/ நீ/ (ஸொ)
காமனை/ காமன்/ பகைவனால்/ போற்றப்பெற்றோனே/ உ னது/ ஒய்யாரத்தினை...


சரணம் 2
வர/ பி3ம்ப3/ ஸம/-அத4ரமு/
சிவந்த-உயர்/ கோவைப்பழ/ நிகர்/ அதரங்கள்/

வகுள/ ஸுமம்பு3ல/-உரமு/
மகிழம்/ பூக்கள் திகழும்/ மார்பு/

கர/ த்4ரு2த/ ஸ1ர/ கோத3ண்ட3/
கையில்/ ஏந்தும்/ அம்புகள்/ கோதண்டம்/

மரகத/-அங்க3/ வரமைன/ (ஸொ)
மரகத (நிற)/ அங்கங்களோனே/ சிறந்த/ ஒய்யாரத்தினை..


சரணம் 3
சிரு நக3வுலு/ முங்கு3ருலு/
புன்னகை/ (முடிச்)சுருளல்கள்/

மரி/ கன்னுல/ தேட/
மேலும்/ கண்களின்/ தெளிவு/

வர/ த்யாக3ராஜ/
புனித/ தியாகராசனால்/

வந்த3னீய/-இடுவண்டி/ (ஸொ)
வணங்கப் பெற்றோனே/ இப்படிப்பட்ட/ ஒய்யாரத்தினை...


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - பத3 யுக3மு,   கர யுக3மு,   அத4ரமு,   உரமு,   நக3வுலு,   முங்கு3ருலு,   தேட
  - பத3 யுக3மோ, கர யுக3மோ, அத4ரமோ, உரமோ, நக3வுலோ, முங்கு3ருலோ, தேடோ

4 - த்யாக3ராஜ வந்த3னீய - த்யாக3ராஜார்சித வந்த3னீய

Top

மேற்கோள்கள்
2 - பி3ம்ப3 - கோவைப்பழம்
3 - வகுள - மகிழமரம் - மகிழம்பூ

விளக்கம்
எள்ளுதல் - கேலி செய்தல் (அழகில்)
காமன் பகைவன் - சிவன்
புனித - இறைவனைக் குறிக்கும்

Top

Saturday, December 13, 2008

ஓர ஜூபு - ராகம் கன்னட3 கௌ3ள - Ora Joopu - Raga Kannada Gaula

பல்லவி
ஓர ஜூபு ஜூசேதி3 ந்யாயமா
ஓ ரகூ4த்தம நீவண்டி வானிகி

அனுபல்லவி
நீரஜாக்ஷ முனு நீ தா3ஸுலகு
நீகேடி 1வாவுலு தெல்பவே (ஓ)

சரணம்
மானமிஞ்சுகைன நீகு தோச லேக
போயின வைனமேமி புண்ய ரூபமா
தீ3ன ரக்ஷகாஸ்1ரித மானவ
2ஸந்தான கா3ன லோல த்யாக3ராஜ நுத (ஓ)


பொருள் - சுருக்கம்
ஓ இரகு குல உத்தமனே! கமலக்கண்ணா! புண்ணிய உருவமே!
எளியோரைக் காப்போனே! சார்ந்த மக்களின் சந்தானமே!
இசையில் திளைப்போனே! தியாகராசனால் போற்றப்பெற்றோனே!

ஓரக்கண்ணால் நோக்கல் நியாயமா, உன்னைப் போன்றோனுக்கு?
முன்னம் உனது தொண்டருக்கும் உனக்கும் எவ்வித உறவுமுறையோ, தெரிவிப்பாயய்யா;
மானம் இம்மியளவேனும் உனக்கு தோன்றாமற் போன காரணமென்ன?


பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ஓர/ ஜூபு/ ஜூசேதி3/ ந்யாயமா/
ஓர/ கண்ணால்/ நோக்கல்/ நியாயமா/

ஓ/ ரகு4/-உத்தம/ நீவண்டி வானிகி/
ஓ/ இரகு குல/ உத்தமனே/ உன்னை/ போன்றோனுக்கு/


அனுபல்லவி
நீரஜ/-அக்ஷ/ முனு/ நீ/ தா3ஸுலகு/
கமல/ கண்ணா/! முன்னம்/ உனது/ தொண்டருக்கும்/

நீகு/-ஏடி/ வாவுலு/ தெல்பவே/ (ஓ)
உனக்கும்/ எவ்வித/ உறவுமுறையோ/ தெரிவிப்பாயய்யா/


சரணம்
மானமு/-இஞ்சுகைன/ நீகு/ தோச லேக/
மானம்/ இம்மியளவேனும்/ உனக்கு/ தோன்றாமற்/

போயின/ வைனமு/-ஏமி/ புண்ய/ ரூபமா/
போன/ காரணம்/ என்ன/ புண்ணிய/ உருவமே/

தீ3ன/ ரக்ஷக/-ஆஸ்1ரித/ மானவ/
எளியோரை/ காப்போனே/ சார்ந்த/ மக்களின்/

ஸந்தான/ கா3ன/ லோல/ த்யாக3ராஜ/ நுத/ (ஓ)
சந்தானமே/ இசையில்/ திளைப்போனே/ தியாகராசனால்/ போற்றப்பெற்றோனே/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
2 - ஸந்தான - ஸந்த்ராண : சந்தானம் - விரும்பியவற்றை யருளும் வானோர் தரு

மேற்கோள்கள்

விளக்கம்
1 - வாவுலு - நெருங்கிய உறவு - 'முந்தைய தொண்டர்கள் உனக்கு சொந்தமோ? - அதனால் அவர்களைக் காத்தாய்; நான் உனக்கு உறவில்லையென என்னைக் காக்க மறுக்கின்றாயோ?' என்று தியாகராஜர் கிண்டல் செய்கின்றார்.

ஓரக்கண்ணால் நோக்கல் - புறக்கணித்தல்
Top



Updated on 13 Dec 2008