1ஸ்ரீ ராம ராம ராம ஸீதா ஹ்ரு2ஜ்-ஜலதி4 ஸோம
சரணம்
சரணம் 1
நீ பாத3முல ப4க்தி நிண்டா3ரக3னொஸகி3
காபாடு3 நா பாபமே பாடி ராம (ஸ்ரீ)
சரணம் 2
பலிகி கொன்னாள்ளிபுடு3 2பலுககுண்டே விடு3துனா
3குல த4ர்மமுலனெல்ல தலசி நனு ப்3ரோவவய்ய (ஸ்ரீ)
சரணம் 3
பலுமாரு நின்னு பாடி3 பாடி3 வேடு3கொன்னானு
கலகலமனி நாதோ பலுகவேமய்ய இபுடு3 (ஸ்ரீ)
சரணம் 4
லோகுல நெர நம்முகொனக நீ 4பாத3மு-
லிந்தா3க நா மதி3னுஞ்ச க்ரீ கண்ட 5ஜூசெத3வேமி (ஸ்ரீ)
சரணம் 5
ராஜ ஸே1க2ர தே3வ ராஜ 6ராஜீவ ப4வ
பூஜார்ஹ ஸ்ரீ த்யாக3ராஜுனி 7மொரலாலகிஞ்சு (ஸ்ரீ)
பொருள் - சுருக்கம்
- இராமா! சீதையின் இதயக்கடலின் மதியே!
- பிறையணிவோன், தேவர் தலைவன், மலரோன் ஆகியோரால் வழிபடத்தக்கோனே!
- உனது திருவடிகளின் பக்தி நிரம்ப அருளிக் காப்பாய்.
- எனது பாவங்களெம்மாத்திரம்?
- சில நாட்கள் பேசி, இப்போது பேசாதிருந்தால் விடுவேனா?
- (உனது) குல தருமத்தையெல்லாம் நினைந்து என்னைக் காவுமய்யா!
- பன்முறை யுன்னைப் பாடிப்பாடி வேண்டிக்கொண்டேன்.
- கலகலவென என்னுடன் பேசாயேனய்யா, இப்போது?
- உலகோரை மிக்கு நம்பாது, உனது திருவடிகளை இதுவரை எனது உள்ளத்திலிருத்த, தாழ்க்கண் பார்ப்பதென்ன?
- உனது திருவடிகளின் பக்தி நிரம்ப அருளிக் காப்பாய்.
- தியாகராசனின் முறையீட்டினைக் கேளாய்.
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ஸ்ரீ ராம/ ராம/ ராம/ ஸீதா/ ஹ்ரு2த்/-ஜலதி4/ ஸோம/
ஸ்ரீ ராமா/ ராமா/ ராமா/ சீதையின்/ இதய/ கடலின்/ மதியே/
சரணம்
சரணம் 1
நீ/ பாத3முல/ ப4க்தி/ நிண்டா3ரக3னு/-ஒஸகி3/
உனது/ திருவடிகளின்/ பக்தி/ நிரம்ப/ அருளி/
காபாடு3/ நா/ பாபமு/-ஏ பாடி/ ராம/ (ஸ்ரீ)
காப்பாய்/ எனது/ பாவங்கள்/ எம்மாத்திரம்/ இராமா/
சரணம் 2
பலிகி/ கொன்னாள்ளு/-இபுடு3/ பலுகக/-உண்டே/ விடு3துனா/
பேசி/ சில நாட்கள்/ இப்போது/ பேசாது/ இருந்தால்/ விடுவேனா/
குல/ த4ர்மமுலனு/-எல்ல/ தலசி/ நனு/ ப்3ரோவு-அய்ய/ (ஸ்ரீ)
(உனது) குல/ தருமத்தை/ யெல்லாம்/ நினைந்து/ என்னை/ காவுமய்யா/
சரணம் 3
பலுமாரு/ நின்னு/ பாடி3/ பாடி3/ வேடு3கொன்னானு/
பன்முறை/ யுன்னை/ பாடி/ பாடி/ வேண்டிக்கொண்டேன்/
கலகலமனி/ நாதோ/ பலுகவு/-ஏமி/-அய்ய/ இபுடு3/ (ஸ்ரீ)
கலகலவென/ என்னுடன்/ பேசாய்/ ஏன்/ அய்யா/ இப்போது/
சரணம் 4
லோகுல/ நெர/ நம்முகொனக/ நீ/ பாத3முல/
உலகோரை/ மிக்கு/ நம்பாது/ உனது/ திருவடிகளை/
இந்தா3க/ நா/ மதி3னி/-உஞ்ச/ க்ரீ/ கண்ட/ ஜூசெத3வு/-ஏமி/ (ஸ்ரீ)
இதுவரை/ எனது/ உள்ளத்தில்/ இருத்த/ தாழ்/ கண்/ பார்ப்பது/ என்ன/
சரணம் 5
ராஜ/ ஸே1க2ர/ தே3வ/ ராஜ/ ராஜீவ ப4வ/
பிறை/ யணிவோன்/ தேவர்/ தலைவன்/ மலரோன்/ ஆகியோரால்/
பூஜா/-அர்ஹ/ ஸ்ரீ த்யாக3ராஜுனி/ மொரலு/-ஆலகிஞ்சு/ (ஸ்ரீ)
வழிபட/ தக்கோனே/ ஸ்ரீ தியாகராசனின்/ முறையீட்டினை/ கேளாய்/
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - ஸ்ரீ ராம ராம ராம ஸீதா - ஸ்ரீ ராம ராம ஸீதா.
2 - பலுககுண்டே - பலுககுண்டி3ன.
3 - குல த4ர்மமுல - குல மர்மமுல. இவ்விடத்தில், 'மர்மமு' என்ற சொல் பொருந்தாது.
4 - பாத3முலிந்தா3க நா - பாத3முலிந்தா3கனு.
5 - ஜூசெத3வேமி - ஜூட3வேமி : தெலுங்கு அகராதியின்படி, 'க்ரீ-கன்னு' என்பதற்கு 'தாழ்க்கண்' (அவமதித்தல்) என்றும், 'க்ரே-கன்னு' என்பதற்கு 'கடைக்கண்' (கருணை) என்றும் பொருளாகும். ஆனால், தியாகராஜர் கிருதிகளில், இவ்விரண்டு சொற்களும் (க்ரீ-கன்னு, க்ரே-கன்னு), 'கடைக்கண்' என்ற பொருளில் மாற்றி மாற்றிப் பயன்படுத்தப்பட்டுள்ளன. அங்ஙனம், 'க்ரீ-கண்ட' என்பதற்கு 'கருணை' என்று பொருள் கொண்டால், 'ஜூட3வேமி' என்பது பொருந்தலாம். அப்படியானால், 'கடைக்கண்ணால் பார்க்கமாட்டாயேன்?' என்று பொருள் கொள்ளப்படும். இரண்டு விதமான பொருள்களும் புத்தகங்களில் கொடுக்கப்பட்டுள்ளன.
Top
6 - ராஜீவ ப4வ - ப4வ : 'ப4வ' என்பதற்கு 'சிவன்' என்று பொருளாகும். ஆனால், 'சிவன்', 'ராஜ ஸே1க2ர' (பிறையணிவோன்), இதற்கு முன்னமேயே கூறப்பட்டுள்ளது. எனவே, இவ்விடத்தில், 'சிவன்' என்ற சொல் திரும்ப வராது. எனவே, 'மலரோனை'க் குறிக்கும் சொல்லாகிய, 'ராஜீவ ப4வ' என்பதே இவ்விடத்தில் பொருந்தும்.
7 - மொரலாலகிஞ்சு - மொரலாலகிஞ்சி. 'மொரலாலகிஞ்சி' என்பது பல்லவியுடன் இணைப்பதாக இருந்தால், சரியாக இருக்கலாம். ஆனால், பல்லவியுடன் இணைப்பதற்கு வாய்ப்பு இல்லாமையால், 'மொரலாலகிஞ்சி' என்பது பொருந்தாது.
Top
மேற்கோள்கள்
விளக்கம்
குல தருமம் - புகலடைந்தோரைக் காத்தல்
கலகலவென - சிரித்த முகம்
தாழ்க்கண் பார்த்தல் - அவமதித்தல்
Top
Updated on 18 Jan 2011
No comments:
Post a Comment