Wednesday, January 26, 2011

தியாகராஜ கிருதி - தே3வாதி3 தே3வ - ராகம் ஸிந்து4 ராமக்ரிய - Devadi Deva - Raga Sindhu Ramakriya

பல்லவி
1தே3வாதி3 தே3 ஸதா3ஸி1
தி3ன நாத2 ஸுதா4-கர த3ஹன நயன

அனுபல்லவி
தே3வேஸ1 2பிதாமஹ ம்ரு2க்3
31மாதி3 கு3ணாப4ரண கௌ3ரீ ரமண (தே3)

சரணம்
4வ சந்த்3ர கலா த44நீல க3
பா4னு கோடி ஸங்காஸ1 ஸ்ரீஸ1 நுத
தவ பாத34க்திம் தே3ஹி தீ3ன ப3ந்தோ4
3ர ஹாஸ வத3ன த்யாக3ராஜ நுத (தே3)


பொருள் - சுருக்கம்
  • தேவாதி தேவா! சதாசிவா! பகலவன், தண்ணொளியோன், நெருப்புக் கண்களோனே!
  • தேவர் தலைவன், தாதையாலும் தேடுப்படுவோனே! அமைதி முதலான அறுகுணம் அணிவோனே! கௌரி மணாளா!
  • பவனே! மதிப் பிறை யணிவோனே! நீல மிடற்றோனே! பரிதி கோடி போன்றோனே! மாரமணன் போற்றுவோனே!
  • எளியோர் சுற்றமே! புன்முறுவல் வதனனே! தியாகராசன் போற்றுவோனே!

    • உனது திருவடிப் பற்றினைத் தருவாய்.



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
தே3வ-ஆதி3/ தே3வ/ ஸதா3ஸி1வ/
தேவாதி/ தேவா/ சதாசிவா/

தி3ன நாத2/ ஸுதா4-கர/ த3ஹன/ நயன/
பகலவன்/ தண்ணொளியோன்/ நெருப்பு/ கண்களோனே/


அனுபல்லவி
தே3வ/-ஈஸ1/ பிதாமஹ/ ம்ரு2க்3ய/
தேவர்/ தலைவன்/ தாதையாலும்/ தேடுப்படுவோனே/

1ம/-ஆதி3/ கு3ண/-ஆப4ரண/ கௌ3ரீ/ ரமண/ (தே3)
அமைதி/ முதலான/ (அறு) குணம்/ அணிவோனே/ கௌரி/ மணாளா/


சரணம்
4வ/ சந்த்3ர/ கலா/ த4ர/ நீல/ க3ள/
பவனே/ மதி/ பிறை/ யணிவோனே/ நீல/ மிடற்றோனே/

பா4னு/ கோடி/ ஸங்காஸ1/ ஸ்ரீ/-ஈஸ1/ நுத/
பரிதி/ கோடி/ போன்றோனே/ மா/ ரமணன்/ போற்றுவோனே/

தவ/ பாத3/ ப4க்திம்/ தே3ஹி/ தீ3ன/ ப3ந்தோ4/
உனது/ திருவடி/ பற்றினை/ தருவாய்/ எளியோர்/ சுற்றமே/

3ர ஹாஸ/ வத3ன/ த்யாக3ராஜ/ நுத/ (தே3)
புன்முறுவல்/ வதனனே/ தியாகராசன்/ போற்றுவோனே/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)

மேற்கோள்கள்
2 - பிதாமஹ ம்ரு2க்3 - தாதையால் (பிரமன்) தேடப்படுவோன் - இது, விஷ்ணுவும், பிரமனும், சிவனின், அடி, முடியைக் காண, முறையே, பன்றி, அன்னப் பறவை உருவெடுத்த கதையினைக் குறிக்கும்.

3 - 1மாதி3 கு3 - அமைதி முதலான அறுகுணச் செல்வம் - ஸ1ம (மன அமைதி), த3ம (புலனடக்கம்), திதிக்ஷ (பொறுமை), ஸமாதா4ன (மனத்தினை நிலை நிறுத்தல்), உபராதி (நிறைவு), ஸ்1ரத்34 (சிரத்தை) ஆகியவை.

அறுகுணச் செல்வம் – என ஐஸ்1வர்ய (செல்வம்), வீர்ய (வீரியம்), யஸ1ஸ் (புகழ்), ஸ்ரீ (செழிப்பு) , ஞான (ஞானம்), வைராக்3ய (வைராக்கியம்) ஆகியவையும் கூறப்படும்.

Top

விளக்கம்
1 - தே3வாதி3 தே3 - இதனை 'தேவாதி+தேவ' (தேவர்கள் முதலானோருக்குத் தலைவன்) என்றோ, அல்லது, 'தேவ+ ஆதிதேவ' (தேவர்களுக்கும் ஆதி தெய்வம்) என்றோ பிரித்துப் பொருள் கொள்ளலாம்.

4 - நீல க3 - நீல மிடற்றோன். பாற்கடலைக் கடைந்தவமயம் உண்டான, 'ஆலகாலம்' என்னும் விடத்தினை, சிவன், தனது மிடற்றினில் இருத்திக் கொண்டதனால், அப்பெயர்.

Top

தண்ணொளியோன் - மதி
தேவர் தலைவன் - இந்திரன்
தாதை - பிரமன்
அறுகுணம் - அமைதி முதலானவை
பவன் - சிவனின் ஒரு பெயர்
மாரமணன் - அரி

Top


Updated on 26 Jan 2011

No comments: