ராம பா3ண த்ராண ஸௌ1ர்ய-
மேமனி 1தெலுபுது3ரா ஓ மனஸா
அனுபல்லவி
பா4மகாஸபடு3 ராவண மூல
ப3லமுல நேல கூல ஜேயு (ரா)
சரணம்
தம்முடு3 ப3ட3லின வேள ஸுர ரிபு
தெம்மனி 2சக்கெர பஞ்சீயக3 கனி
லெம்மனுசுனு இந்த்3ராரி பல்க
ஸமயம்மனி லேவகா3
ஸம்மதிதோ நிலப3டி3 கோத3ண்ட3பு
ஜ்யா-கோ4ஷமுலஸ1னுல ஜேஸி தா
நெம்மதி3-க3ல 3தோடு3னு ஜூசெனுரா
நிஜமைன த்யாக3ராஜ நுதுட3கு3 (ரா)
பொருள் - சுருக்கம்
ஒ மனமே!
- இராம பாணத்தின் காக்கும் திறனை, என்னவெனத் தெரிவிப்பேனடா!
- (தன்) மனைவியை விரும்பும் இராவணனின் மூல பலங்களை மண் கௌவச் செய்யும், இராம பாணத்தின் காக்கும் திறனை, என்னவெனத் தெரிவிப்பேனடா!
- பின்னோன் களைத்த வேளை,
- வானோர் பகைவன், கொணரச் செய்து, சர்க்கரையைப் பகிர்ந்தளிக்கக்கண்டு,
- புறப்படென (படைகளுக்கு) இந்திரன் பகைவன் ஆணையிட,
- (இதுதான்) சமயமென (படைகள்) புறப்பட, (அவ்வேளை)
- (இராமன்) உறுதியுடன் நின்று,
- கோதண்டத்தின் நாணொலி இடிகளை எழுப்பி,
- தான் (தனது) உற்ற துணையினை நோக்கினானடா;
- பின்னோன் களைத்த வேளை,
- உண்மையான, தியாகராசன் போற்றுவோனாகிய, இராம பாணத்தின் காக்கும் திறனை, என்னவெனத் தெரிவிப்பேனடா!
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ராம/ பா3ண/ த்ராண/ ஸௌ1ர்யமு/-
இராம/ பாணத்தின்/ காக்கும்/ திறனை/
ஏமி/-அனி/ தெலுபுது3ரா/ ஓ மனஸா/
என்ன/ என/ தெரிவிப்பேனடா/ ஒ மனமே/
அனுபல்லவி
பா4மகு/-ஆஸபடு3/ ராவண/ மூல/
(தன்) மனைவியை/ விரும்பும்/ இராவணனின்/ மூல/
ப3லமுல/ நேல/ கூல/ ஜேயு/ (ரா)
பலங்களை/ மண்/ கௌவ/ செய்யும்/ இராம...
சரணம்
தம்முடு3/ ப3ட3லின/ வேள/ ஸுர/ ரிபு/
பின்னோன்/ களைத்த/ வேளை/ வானோர்/ பகைவன்/
தெம்மு/-அனி/ சக்கெர/ பஞ்சி/-ஈயக3/ கனி/
கொணர/ செய்து/ சர்க்கரையை/ பகிர்ந்து/ அளிக்க/ கண்டு/
லெம்மு/-அனுசுனு/ இந்த்3ர/-அரி/ பல்க/
புறப்படு/ என/ (படைகளுக்கு) இந்திரன்/ பகைவன்/ ஆணையிட/
ஸமயம்மு/-அனி/ லேவகா3/
(இதுதான்) சமயம்/ என/ (படைகள்) புறப்பட/ (அவ்வேளை)
ஸம்மதிதோ/ நிலப3டி3/ கோத3ண்ட3பு/
(இராமன்) உறுதியுடன்/ நின்று/ கோதண்டத்தின்/
ஜ்யா/-கோ4ஷமுல/-அஸ1னுல/ ஜேஸி/ தா/
நாண்/ ஒலி/ இடிகளை/ எழுப்பி/ தான்/
நெம்மதி3-க3ல/ தோடு3னு/ ஜூசெனுரா/
(தனது) உற்ற/ துணையினை/ நோக்கினானடா/
நிஜமைன/ த்யாக3ராஜ/ நுதுட3கு3/ (ரா)
உண்மையான/ தியாகராசன்/ போற்றுவோனாகிய/ இராம...
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - தெலுபுது3ரா - பொக3டு3து3ரா.
3 - தோடு3னு - தோட3னு : இவ்விடத்தில், 'தோடு3னு' என்பதே பொருந்தும்.
Top
மேற்கோள்கள்
விளக்கம்
2 - சக்கெர பஞ்சீயக3 - சர்க்கரைப் பகிர்ந்தளிக்க - இத்தகைய சம்பவம் ஏதும் வால்மீகி ராமாயணத்தில் இருப்பதாகத் தெரியவில்லை.
பின்னோன் - இலக்குவன்
வானோர் பகைவன் - இராவணன்
இந்திரன் பகைவன் - இந்திரசித்து - இராவணன் மைந்தன்
உற்ற துணை - இலக்குவன்
Top
Updated on 13 Jan 2011
No comments:
Post a Comment