Saturday, January 29, 2011

தியாகராஜ கிருதி - ஸுகு3ணமுலே - ராகம் சக்ரவாகம் - Sugunamule - Raga Chakravakam

பல்லவி
ஸுகு3ணமுலே செப்புகொண்டி
ஸுந்த3ர ரகு4ராம

அனுபல்லவி
1வக3லெருங்க3 லேக2யிடு
3வத்துவனுசு 4து3ராஸசே (ஸு)

சரணம்
5ஸ்நானாதி3 ஸு-கர்மம்பு3லு
6வேதா3த்4யயனம்பு3லெருக3
ஸ்ரீ நாயக க்ஷமியிஞ்சுமு
ஸ்ரீ த்யாக3ராஜ நுத (ஸு)


பொருள் - சுருக்கம்
  • அழகிய இரகுராமா!
  • திருமகள் நாயகனே! தியாகராசன் போற்றுவோனே!

    • (உனது) நற்பண்புகளையே சொல்லிக்கொண்டேன்.
    • (வேறு) வகைகளறியாது (சூழ்ச்சிகளறியாது), இப்படியாவது, (நீ) வருவாயென, வீண் ஆசைகொண்டு, (உனது) நற்பண்புகளையே சொல்லிக்கொண்டேன்.
    • (புனித) நீராடல் முதலான நற்செயல்களும், மறையோதல் ஆகியவையும் அறியேன். பொறுத்தருளுமய்யா.



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ஸுகு3ணமுலே/ செப்புகொண்டி/
(உனது) நற்பண்புகளையே/ சொல்லிக்கொண்டேன்/

ஸுந்த3ர/ ரகு4ராம/
அழகிய/ இரகுராமா/


அனுபல்லவி
வக3லு/-எருங்க3 லேக/-இடு/
(வேறு) வகைகள் (சூழ்ச்சிகள்)/ அறியாது/ இப்படியாவது/

வத்துவு/-அனுசு/ து3ராஸசே/ (ஸு)
(நீ) வருவாய்/ என/ வீண் ஆசைகொண்டு/ (உனது) நற்பண்புகளையே...


சரணம்
ஸ்நான/-ஆதி3/ ஸு-கர்மம்பு3லு/
(புனித) நீராடல்/ முதலான/ நற்செயல்களும்/

வேத3/-அத்4யயனம்பு3லு/-எருக3/
மறை/ யோதல் ஆகியவையும்/ அறியேன்/

ஸ்ரீ/ நாயக/ க்ஷமியிஞ்சுமு/
திருமகள்/ நாயகனே/ பொறுத்தருளுமய்யா/

ஸ்ரீ த்யாக3ராஜ/ நுத/ (ஸு)
ஸ்ரீ தியாகராசன்/ போற்றுவோனே/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
3 - வத்துவனுசு - வத்33னுசு - வத்33னுசுனு : இவ்விடத்தில், 'வத்துவனுசு' (வருவாயென) என்பதே பொருந்தும்.

6 - வேதா3த்4யயனம்பு3லு - வேத3 த்4யானம்பு3லு - தா3னாத்4யயனம்பு3 : 'வேத3' என்ற சொல்லினால், 'அத்4யயன' என்பதே பொருந்தும். எனவே, 'வேதா3த்4யயனம்பு3லு' ஏற்கப்பட்டது.

Top

மேற்கோள்கள்

விளக்கம்
1 - வக3லெருங்க3 - வகைகள் அறியாது. 'வக3' - இந்த தெலுங்கு சொல்லுக்கு, 'சூழ்ச்சி' என்றும் பொருளுண்டு. சில புத்தகங்களில், '(இறைவனின்) சூழச்சி அறியாது' என்ற பொருள் கொள்ளப்பட்டுள்ளது. ஆனால், அடுத்து வரும், 'து3ராஸசே' (வீணாசை கொண்டு) என்பதனால், இது, தியாகராஜரையே குறிக்கும், என்று நான் கருதுகின்றேன். ஆயினும், இரண்டு பொருள்களும் கொடுக்கப்பட்டுள்ளன.

2 - இடு - சில புத்தகங்களில், இதற்கு, 'இங்கு' என்று பொருள் கொள்ளப்பட்டுள்ளது. எனக்குத் தெரிந்தவரையில், 'இப்படியாவது' (இறைவனின் புகழ் பாடிக்கொண்டிருக்கும் இந்த முறையிலாவது) என்று பொருள்படும். சரணத்தில், தியாகராஜர் இதனை விவரிக்கின்றார். 'புனித நீராடல் ஆகிய நற்செயல்களும், மறையோதலும் அறியேன்' என்று கூறுகின்றார். இதனால், இறைவனின் புகழ் பாடுதலே மிக்குயர்ந்த நெறி, என்று தியாகராஜர் கருதுவது விளங்குகின்றது. மேலும், 'நீ ப4க்தி பா4க்3ய ஸுதா4' என்ற கீர்த்தனையில், 'மறைகளில் கூறப்பட்ட கரும நெறி, திரும்பத்திரும்ப, பிறவியெனும் போக்குவரத்தையே அடையச் செய்யும்' என்றும் கூறுகின்றார்.

Top

4 - து3ராஸசே - இவ்விடத்தில், இச்சொல்லுக்கு, 'கெட்ட ஆசை' என்று பொருளல்ல. 'வீணாசை' என்றே பொருள்படும்.

5 - ஸ்நானாதி3 - புனித நதிகளில் நீராடல் ஆகியவை - தியாகராஜர், தமது 'கோடி நது3லு' என்ற கீர்த்தனையில், இறைவனின் திருவடியிலேயே, புனித நதிகள் இருப்பதனால், நதிகளில் புனித நீராடலுக்குத் திரிதல், பயனற்றது என்று கூறுகின்றார்.

வகைகள் - சூழ்ச்சிகள் என்றும் பொருள் கொள்ளலாம்.

Top


Updated on 30 Jan 2011

No comments: