Friday, January 28, 2011

தியாகராஜ கிருதி - எடுல ப்3ரோதுவோ - ராகம் சக்ரவாகம் - Etula Brotuvo - Raga Chakravakam

பல்லவி
எடுல ப்3ரோதுவோ 1தெலிய ஏகாந்த ராமய்ய

அனுபல்லவி
கட கட நா சரிதமு கர்ண கடோ2ரமய்ய (எ)

சரணம்
2பட்டி கொ3ட்3டு3 ரீதி ப4க்ஷிஞ்சி திரிகி3தி
புட்டு லோபு4லனு பொட்டகை பொக3டி3தி
து3ஷ்டுலதோ கூடி3 து3ஷ்க்ரு2த்யமுல ஸல்பி
ரட்டு ஜேஸின த்யாக3ராஜுனி த3யதோ (எ)


பொருள் - சுருக்கம்
  • தனிப்பட்ட இராமய்யா!

  • எவ்விதம் காப்பாயோ அறியேன்;
  • ஐயகோ! எனது சரிதம் காதுக்குக் கொடிதய்யா;

    • பட்டி மாடு போன்று (தீனி) தின்றலைந்தேன்;
    • பிறவிக் கஞ்சர்களை வயிற்றுக்காகப் போற்றினேன்;
    • தீயோருடன் கூடி, தீய செயல்களிழைத்து, வசை தேடிக்கொண்டேன்.


  • இத்தியாகராசனை, கருணையோடு, எவ்விதம் காப்பாயோ அறியேன்.



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
எடுல/ ப்3ரோதுவோ/ தெலிய/ ஏகாந்த/ ராம-அய்ய/
எவ்விதம்/ காப்பாயோ/ அறியேன்/ தனிப்பட்ட/ இராமய்யா/


அனுபல்லவி
கட கட/ நா/ சரிதமு/ கர்ண/ கடோ2ரமு/-அய்ய/ (எ)
ஐயகோ/ எனது/ சரிதம்/ காதுக்கு/ கொடிது/ அய்யா/


சரணம்
பட்டி/ கொ3ட்3டு3/ ரீதி/ ப4க்ஷிஞ்சி/ திரிகி3தி/
பட்டி/ மாடு/ போன்று/ (தீனி) தின்று/ அலைந்தேன்/

புட்டு/ லோபு4லனு/ பொட்டகை/ பொக3டி3தி/
பிறவி/ கஞ்சர்களை/ வயிற்றுக்காக/ போற்றினேன்/

து3ஷ்டுலதோ/ கூடி3/ து3ஷ்-க்ரு2த்யமுல/ ஸல்பி/
தீயோருடன்/ கூடி/ தீய செயல்கள்/ இழைத்து/

ரட்டு ஜேஸின/ த்யாக3ராஜுனி/ த3யதோ/ (எ)
வசை தேடிக்கொண்ட/ (இத்)தியாகராசனை/ கருணையோடு/ எவ்விதம்...


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - தெலிய ஏகாந்த - தெலியதே3காந்த.

2 - பட்டி கொ3ட்3டு3 - வட்டி கொ3ட்3டு3 : எல்லா புத்தகங்களிலும் இதற்கு 'பட்டி மாடு' (கேட்பாரற்றுத் திரியும் மாடு) என்று பொருள் கொள்ளப்பட்டுள்ளது. தெலுங்கில், அத்தகைய மாடு, 'செருகொ3ண்டி3 பஸு1வு', 'செருடு3 பஸு1வு' அல்லது 'தொ3ங்க3 கொ3ட்3டு3' என்று வழங்கும். ஆனால், 'பட்டி' என்பது தமிழ்ச் சொல்லாகும்.

'கொ3ட்3டு3' என்பதற்கு 'மாடு' என்றும், 'பயனற்ற' என்றும் பொருளாகும். 'வட்டி' என்பதற்கு, 'வெறும்' அல்லது 'முற்றிலும்' என்று பொருளாகும். இவ்விடத்தில்,' திரியும் மாடு' அல்லது 'பயனற்ற மாடு' என்ற பொருள் உள்ள சொல் தேவை. 'கொ3ட்3டு3' என்ற சொல் ஐயத்திற்கிடமில்லையாகையாலும், 'வட்டி' என்ற சொல்லுக்கு, உகந்த பொருள் இல்லாமையாலும், தியாகராஜர், தமிழ்ச் சொல்லாகிய 'பட்டி'யை (பட்டி கொ3ட்3டு3) பயன்படுத்தியுள்ளார் என்று கருதி, அங்ஙனமே ஏற்கப்பட்டது.

'பொத்3து3 பொய்யெனு' என்ற 'தோடி ராக' கீர்த்தனையிலும், தியாகராஜர், 'பட்டி எத்3து3' என்ற சொல்லை, 'பட்டி மாடு' என்ற பொருளில் பயன்படுத்தியுள்ளார்.

Top

மேற்கோள்கள்

விளக்கம்
1 - ஏகாந்த - இச்சொல்லுக்கு, 'தனிமை' என்று பொருளாகும். தியாகராஜர், தமது இஷ்ட தெய்வமான ராமனை, பரம்பொருளாகக் கருதி வழிபட்டார். அதனால், 'அவருக்குத் தனிப்பட்ட தெய்வம்', அல்லது 'தனிப்பட்ட பரம்பொருள்' என்ற பொருளில் கொள்ளலாம்.

தனிப்பட்ட - ஒப்பிலா

Top


Updated on 28 Jan 2011

No comments: