நீவு ப்3ரோவ வலெனம்ம நனு
நிகி2ல லோக ஜனனீ
அனுபல்லவி
தே3வி ஸ்ரீ த4ர்ம ஸம்வர்த4னி தி3வ்ய
த3ர்ஸ1னமொஸகி3 ஸந்ததமு (நீ)
சரணம்
சரணம் 1
நீ வலெ கருணா ஸாக3ரி ஈ ஜகா3ன
நே வெதகி கனுகொ3ன கானெக்கட3 கான
பாவனமகு3 ஸ்ரீமத்-பஞ்ச நதீ3ஸ்1வருனி ராணி நா
பா4வமுலோ தொ3ருகுகொண்டிவிக மரசெத3னா
ஈ வரகுனு ஜேஸின நேரமுலனு
நீவெஞ்சக நலுகு3ரிலோ தனகிக
1காவலஸின கோரிகலொஸகி3
காவுமு பதித பாவனி த4ர்ம ஸம்வர்த4னி (நீ)
சரணம் 2
நாயெட3 வஞ்சன ஸேயக 2பஸிடி3 ஸி1லா கஞ்ஜ
ஸாயகுனன்னிட நீவனியெஞ்சிதி கா3க
மாயபு ப4வ ஸாக3ர பா3த4லுயெந்தா3க எட3-
பா3யனி நீ பத3 ப4க்தினொஸங்க3 பராகா
காயஜ ஜனகுனி ஸோத3ரி நீயொக்க
மாயலனு தொலக3 ஜேயகயுண்டு3ட
ந்யாயமு காது3 த3யாபரி ஸு1ப4 ப2ல
தா3யகியௌ த4ர்ம ஸம்வர்த4னி (நீ)
சரணம் 3
ராஜ ஸி1கா2 மணி ஸதியைன ஸு1பா4காரி அம்ப3
ராஜ ராஜேஸ்1வரி த்ரி-ஜக3தா3தா4ரி
ஸரோஜ நயனி நீ மஹிமலனு தெலிய லேரே த்யாக3-
ராஜாதி3 பரம பா4க3வத ஹ்ரு2த3யாகா3ரே
ஈ ஜக3தினி கௌ3ரி பராத்பரி
3அவ்யாஜமுனனு பரிபாலன ஜேயு
ஓ ஜக3தீ3ஸ்1வரி நெர நம்மிதி நினு
ராஜிகா3 த4ர்ம ஸம்வர்த4னி (நீ)
பொருள் - சுருக்கம்
- அனைத்துலகங்களையும் ஈன்றவளே!
- தேவி! அறம்வளர்த்த நாயகியே!
- புனித, சீர் சிறப்புடை, ஐய்யாற்றப்பரின் ராணீ! வீழ்ந்தோரைப் புனிதமாக்கும், அறம்வளர்த்த நாயகியே!
- காமனை ஈன்றோனின் சோதரியே! கருணையுடையவளே! நற்பயன் அருளும், அறம்வளர்த்த நாயகியே!
- பிறைசூடியின் மனையாளாகிய நல்லுருவினளே, தாயே! ராஜராஜேசுவரியே! மூவுலக ஆதாரமே! கமலக் கண்ணீ! தியாகராசன் முதலான பெருந் தொண்டர் உள்ளத்துறையே! கௌரீ! பராபரீ! இவ்வுலகினை, நோக்கமேதுமின்றிப் பேணுதல் செய்யும், ஓ உலக நாயகியே!
- நீ காக்கவேண்டுமம்மா, என்னை.
- திவ்விய தரிசனமளித்து, என்றைக்கும் நீ காக்கவேண்டுமம்மா, என்னை.
- உன்னைப்போன்ற கருணைக்கடலை, இப்புவியில் நான் தேடி, கண்டுகொள்ள இயலேன், எங்காகிலும்.
- எனது நினைவினில் சிக்கிக் கொண்டாய், இனி மறப்பேனா!
- இதுவரை செய்த தவறுகளை நீ பொருட்படுத்தாது, எல்லோரிடையே, எனக்கினி வேண்டிய கோரிக்கைகளை யளித்துக் காப்பாய்.
- என்னிடம் வஞ்சனை செய்யாதே!
- பொன், கல், மலர் அம்புடையோன் யாவற்றிலும் நீயென எண்ணினேன்; ஆயினும்,
- பொய்த் தோற்றப் பிறவிக்கடலின் தொல்லைகள் எதுவரை?
- இடை பிரியா உனது திருவடிப் பற்றினை யருள அசட்டையா?
- உனதொரு மாயைகளை ஒழியச் செய்யாதிருத்தல் நீதியன்று.
- உனது மகிமைகளை யறிந்திலரே!
- மிக்கு நம்பினேன், உன்னை.
- உன்னைப்போன்ற கருணைக்கடலை, இப்புவியில் நான் தேடி, கண்டுகொள்ள இயலேன், எங்காகிலும்.
- இணங்கி, நீ காக்கவேண்டுமம்மா, என்னை.
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
நீவு/ ப்3ரோவ/ வலெனு/-அம்ம/ நனு/
நீ/ காக்க/ வேண்டும்/ அம்மா/ என்னை/
நிகி2ல/ லோக/ ஜனனீ/
அனைத்து/ உலகங்களையும்/ ஈன்றவளே/
அனுபல்லவி
தே3வி/ ஸ்ரீ த4ர்ம ஸம்வர்த4னி/ தி3வ்ய/
தேவி/ அறம்வளர்த்த நாயகியே/ திவ்விய/
த3ர்ஸ1னமு/-ஒஸகி3/ ஸந்ததமு/ (நீ)
தரிசனம்/ அளித்து/ என்றைக்கும்/
சரணம்
சரணம் 1
நீ/ வலெ/ கருணா/ ஸாக3ரி/ ஈ/ ஜகா3ன/
உன்னை/ போன்ற/ கருணை/ கடலை/ இந்த/ புவியில்/
நே/ வெதகி/ கனுகொ3ன/ கான/-எக்கட3/ கான/
நான்/ தேடி/ கண்டுகொள்ள/ இயலேன்/ எங்கு/ ஆகிலும்/
பாவனமகு3/ ஸ்ரீமத்/-பஞ்ச நதி3-ஈஸ்1வருனி/ ராணி/ நா/
புனித/ சீர் சிறப்புடை/ ஐய்யாற்றப்பரின்/ ராணீ/ எனது/
பா4வமுலோ/ தொ3ருகுகொண்டிவி/-இக/ மரசெத3னா/
நினைவினில்/ சிக்கிக் கொண்டாய்/ இனி/ மறப்பேனா/
ஈ/ வரகுனு/ ஜேஸின/ நேரமுலனு/
இது/ வரை/ செய்த/ தவறுகளை/
நீவு/-எஞ்சக/ நலுகு3ரிலோ/ தனகு/-இக/
நீ/ பொருட்படுத்தாது/ எல்லோரிடையே/ எனக்கு/ இனி/
காவலஸின/ கோரிகலு/-ஒஸகி3/
வேண்டிய/ கோரிக்கைகளை/ யளித்து/
காவுமு/ பதித/ பாவனி/ த4ர்ம ஸம்வர்த4னி/ (நீ)
காப்பாய்/ வீழ்ந்தோரை/ புனிதமாக்கும்/ அறம்வளர்த்த நாயகியே/
சரணம் 2
நாயெட3/ வஞ்சன/ ஸேயக/ பஸிடி3/ ஸி1லா/ கஞ்ஜ/
என்னிடம்/ வஞ்சனை/ செய்யாதே/ பொன்/ கல்/ மலர்/
ஸாயகுனி/-அன்னிட/ நீவு/-அனி/-எஞ்சிதி/ கா3க/
அம்புடையோன்/ யாவற்றிலும்/ நீ/ யென/ எண்ணினேன்/ ஆயினும்/
மாயபு/ ப4வ/ ஸாக3ர/ பா3த4லு/-எந்தா3க/ எட3-/
பொய்த் தோற்ற/ பிறவி/ கடலின்/ தொல்லைகள்/ எதுவரை/ இடை/
பா3யனி/ நீ/ பத3/ ப4க்தினி/-ஒஸங்க3/ பராகா/
பிரியா/ உனது/ திருவடி/ பற்றினை/ யருள/ அசட்டையா/
காயஜ/ ஜனகுனி/ ஸோத3ரி/ நீ-ஒக்க/
காமனை/ ஈன்றோனின்/ சோதரியே/ உனதொரு/
மாயலனு/ தொலக3/ ஜேயக/-உண்டு3ட/
மாயைகளை/ ஒழிய/ செய்யாது/ இருத்தல்/
ந்யாயமு/ காது3/ த3யா-பரி/ ஸு1ப4/ ப2ல/
நீதி/ யன்று/ கருணையுடையவளே/ நற்/ பயன்/
தா3யகியௌ/ த4ர்ம ஸம்வர்த4னி/ (நீ)
அருளும்/ அறம்வளர்த்த நாயகியே/
சரணம் 3
ராஜ/ ஸி1கா2 மணி/ ஸதியைன/ ஸு1ப4/-ஆகாரி/ அம்ப3/
பிறை/ சூடியின்/ மனையாளாகிய/ நல்/ உருவினளே/ தாயே/
ராஜ ராஜேஸ்1வரி/ த்ரி-ஜக3த்/-ஆதா4ரி/
ராஜராஜேசுவரியே/ மூவுலக/ ஆதாரமே/
ஸரோஜ/ நயனி/ நீ/ மஹிமலனு/ தெலிய லேரே/
கமல/ கண்ணீ/ உனது/ மகிமைகளை/ யறிந்திலரே/
த்யாக3ராஜ/-ஆதி3/ பரம/ பா4க3வத/ ஹ்ரு2த3ய/-ஆகா3ரே/
தியாகராசன்/ முதலான/ பெருந்/ தொண்டர்/ உள்ளத்து/ உறையே/
ஈ/ ஜக3தினி/ கௌ3ரி/ பராத்பரி/
இந்த/ உலகினை/ கௌரீ/ பராபரீ/
அவ்யாஜமுனனு/ பரிபாலன/ ஜேயு/
நோக்கமேதுமின்றி/ பேணுதல்/ செய்யும்/
ஓ/ ஜக3த்/-ஈஸ்1வரி/ நெர/ நம்மிதி/ நினு/
ஓ/ உலக/ நாயகியே/ மிக்கு/ நம்பினேன்/ உன்னை/
ராஜிகா3/ த4ர்ம ஸம்வர்த4னி/ (நீ)
இணங்கி/ அறம்வளர்த்த நாயகியே/ நீ...
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
மேற்கோள்கள்
விளக்கம்
1 - காவலஸின கோரிகலொஸகி3 - வேண்டிய கோரிக்கைகளை அளித்து - 'வேண்டிய கோரிக்கைகள்' என்பதற்கு இருவிதமாகப் பொருள் கொள்ளலாம். தொண்டன், தான் வேண்டியவற்றினை இறைவனிடமிருந்து பெருதல் என்றும், தொண்டனுக்கு என்னென்ன வேண்டுமென இறைவன் அறிந்து வழங்குதல் என்றும். பிற்கூறியதில், தொண்டன் இறைவனிடம் சரணடைந்து, தனக்கு எதுவும் வேண்டுமென இறைவனிடம் கேட்கமாட்டான். தியாகராஜர், தமது 'வத்3த3னேவாரு' என்ற கீர்த்தனையில், 'இம்மையிலோ, மறுமையிலோ என் மனத்திற்கு ஏதும் கோரிக்கைகள் இல்லை' என்கின்றார். அவர், தமது 'கன்ன தல்லி நீவு' என்ற கீர்த்தனையில், 'தினமும் இயற்றும் நற்பணிகளை உனக்கென அளித்தேன்' என்கின்றார். எனவே, கண்ணன், கீதையில் கூறிய, 'யோக3க்ஷேமம் வஹாம்யஹம்' - தொண்டனின் அன்றாடத் தேவைகளை நான் நிறைவு செய்கின்றேன் - என்ற பொருளே இவ்விடம் பொருந்தும் என்று நான் கருதுகின்றேன்.
Top
2 - கஞ்ஜ ஸாயக - 'கஞ்ஜ' என்ற சொல்லுக்கு 'தாமரை' என்று பொருள். இச்சொல் (கஞ்ஜ ஸாயக), தாமரை மலரை, ஓர் அம்பாக உடைய, காமனைக் குறிக்கும்.
2 - பஸிடி3 ஸி1லா கஞ்ஜ ஸாயக - பொன், கல், காமன். இவ்விடத்தில், இச்சொற்கள், மூவாசையெனப்படும் - மண், பெண், பொன், ஆகியவற்றினைக் குறிக்கும் என்று நான் கருதுகின்றேன். 'கல்' என்பது 'மண்'ணையும், 'காமன்' என்பது 'பெண்'ணையும் மறைமுகமாகச் சுட்டும் என்று நான் கருதுகின்றேன்.
3 - அவ்யாஜமுனனு - நோக்கம் ஏதுமின்றி - படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்ற இறைவனின் ஐந்தொழில்களிலும் ஏதும் நோக்கமில்லை. அவை 'லீலை' எனப்படும் 'திருவிளையாடலாக'வே நடைபெறுகின்றன. எனவே, 'லலிதா ஸஹஸ்ர நாம'த்தில் அம்மைக்கு 'பஞ்ச க்ருத்ய பராயாணா' (ஐந்தொழிலில் ஈடுபட்டவள்) என்றும், 'அவ்யாஜ கருணா மூர்த்தி' (நோக்கமில்லாத கருணை உருவினள்) என்றும் பெயர்களாகும்.
அறம்வளர்த்த நாயகி - திருவையாற்றில் அம்மையின் பெயர்.
பிறைசூடி - சிவன்
Top
Updated on 08 Jan 2011
No comments:
Post a Comment